1ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது:
2⁽“ஆண்டவர் என் காற்பாறை;␢ என் கோட்டை; என் மீட்பர்;⁾
3⁽என் கடவுள்; நான் புகலிடம்␢ தேடும் மலை அவரே; என் கேடயம்;␢ எனக்கு மீட்பளிக்கும் வல்லமை;␢ என் அரண்; என் தஞ்சம்;␢ என் மீட்பர். கொடுமையினின்று␢ என்னை விடுவிப்பவரும் அவரே.⁾
4⁽போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி␢ நான் மன்றாடினேன்.␢ என் எதிரிகளிடமிருந்து நான்␢ மீட்கப்பட்டேன்.⁾
5⁽ஏனெனில், சாவின் அலைகள்␢ என்னைச் சூழ்ந்து கொண்டன;␢ அழிவின் சுழல்கள் என்னை␢ மூழ்கடித்தன.⁾
6⁽பாதாளக் கயிறுகள் எனனைச்␢ சுற்றி இறுக்கின;␢ சாவின் கண்ணிகள் என்னைச்␢ சிக்க வைத்தன.⁾
7⁽என் நெருக்கடி வேளையில் நான்␢ ஆண்டவரிடம் மன்றாடினேன்;␢ என் கடவுளை நோக்கிக் கதறினேன்;␢ தமது கோவிலினின்று அவர்␢ என்குரலைக் கேட்டார்; என் கதறல்␢ அவர் செவிகளுக்கு எட்டியது.⁾
8⁽அப்பொழுது, மண்ணுலகம்␢ அசைந்து அதிர்ந்தது;␢ வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக்␢ கிடுகிடுத்தன;␢ அவர்தம் கடுஞ்சினத்தால்␢ அவை நடுநடுங்கின.⁾
9⁽அவரது நாசியினின்று புகை␢ கிளம்பிற்று;␢ அவரது வாயினின்று எரித்தழிக்கும்␢ தீ மூண்டது;␢ அவரிடமிருந்து நெருப்புக் கனல்␢ வெளிப்பட்டது.⁾
10⁽வானைத் தாழ்த்தி அவர்␢ கீழிறங்கினார்;␢ கார் முகில் அவரது காலடியில்␢ இருந்தது.⁾
11⁽கெருபுமீது அவர் ஏறிப்␢ பறந்து வந்தார்;␢ காற்றை இறக்கைகளாகக்␢ கொண்டு விரைந்து வந்தார்.⁾
12⁽காரிருளை அவர் மூடுதிரை␢ ஆக்கிக் கொண்டார்;␢ நீர் கொண்ட முகிலைக்␢ கூடாரமாக்கிக் கொண்டார்.⁾
13⁽அவர் தம் திருமுன்னின் பேரொளியி␢ னின்று நெருப்புக் கனல் தெறித்தது.⁾
14⁽ஆண்டவர் வானங்களில் இடியென␢ முழங்கினார்; உன்னதர் தம் குரலை␢ அதிரச் செய்தார்.⁾
15⁽தம் அம்புகளை எய்து அவர்␢ அவர்களைச் சிதறடித்தார்;␢ மின்னல்களால் அவர்களைக்␢ கலங்கடித்தார்.⁾
16⁽ஆண்டவரின் கடிந்துரையாலும்␢ அவரது மூச்சுக் காற்றின்␢ வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு␢ தென்பட்டது; நிலவுலகின்␢ அடித்தளம் காணப்பட்டது.⁾
17⁽உயரத்தினின்று அவர் என்னை␢ எட்டிப் பிடித்துக் கொண்டார்;␢ வெள்ளப் பெருக்கினின்று␢ என்னைக் காப்பாற்றினார்.⁾
18⁽என் வலிமைமிகு எதிரியிடமிருந்து␢ அவர் என்னை விடுவித்தார்.␢ என்னைவிட வலிமைமிகு␢ பகைவரிடமிருந்து என்னைப்␢ பாதுகாத்தார்.⁾
19⁽எனக்கு இடுக்கண் வந்த நாளில்␢ அவர்கள் என்னை எதிர்த்தார்கள்;␢ ஆண்டவரோ எனக்கு ஊன்று␢ கோலாய் இருந்தார்.⁾
20⁽நெருக்கடியற்ற இடத்திற்கு அவர்␢ என்னைக் கொணர்ந்தார்;␢ நான் அவர் மனத்திற்கு␢ உகந்தவனாய் இருந்ததால்␢ அவர் என்னை விடுவித்தார்.⁾
21⁽ஆண்டவர் எனது நேர்மைக்கு␢ உரிய பயனை எனக்களித்தார்;␢ என் மாசற்ற செயலுக்கு ஏற்பக்␢ கைம்மாறு செய்தார்.⁾
22⁽ஏனெனில், நான் ஆண்டவர்␢ காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்;␢ பொல்லாங்குசெய்து என் கடவுளை␢ விட்டு அகலவில்லை.⁾
23⁽அவர்தம் நீதிநெறிகளை எல்லாம்␢ என் கண்முன் வைத்திருந்தேன்;␢ அவர்தம் விதிமுறைகளை␢ நான் ஒதுக்கித் தள்ளவில்லை.⁾
24⁽அவர் முன்னிலையில் நான்␢ மாசற்றவனாய் இருந்தேன்;␢ தீங்கு செய்யா வண்ணம் என்னைக்␢ காத்துக் கொண்டேன்.⁾
25⁽ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய␢ பயனை அளித்தார்;␢ அவர்தம் பார்வையில் நான்␢ குற்றமற்றவனாய் இருந்தேன்.⁾
26⁽மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும்␢ மாசற்றோர்க்கு மாசற்றவராகவும்␢ நீர் விளங்குகின்றீர்!⁾
27⁽தூயோர்க்குத் தூயவராகவும்␢ வஞ்சகர்க்கு விவேகியாகவும்␢ உம்மை நீர் காட்டுகின்றீர்.⁾
28⁽எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்;␢ செருக்குற்றோரை ஏளனத்துடன்␢ நீர் பார்க்கின்றீர்.⁾
29⁽ஆண்டவரே! நீரே என்␢ ஒளி விளக்கு!␢ ஆண்டவர் என் இருளை␢ ஒளிமயமாக்குகின்றார்.⁾
30⁽உம் துணையுடன் நான்␢ எப்படையையும் நசுக்குவேன்;␢ என் கடவுளின் துணையால்␢ எம்மதிலையும் தாண்டுவேன்.⁾
31⁽இந்த இறைவனின் வழி␢ நிறைவானது; ஆண்டவரின் வாக்கு␢ நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம்␢ புகும் அனைவர்க்கும் அவரே␢ கேடயமாய் இருக்கின்றார்.⁾
32⁽ஏனெனில், ஆண்டவரைத் தவிர␢ வேறு இறைவன் யார்?␢ நம் கடவுளைத் தவிர நமக்கு␢ வேறு கற்பாறை ஏது?⁾
33⁽இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு␢ கோட்டையாய் உள்ளார்;␢ என் வழியை பாதுகாப்பானதாய்ச்␢ செய்தவரும் அவரே.⁾
34⁽அவர் என் கால்களை மான்களின்␢ கால்களைப்போல் ஆக்குகின்றார்;␢ உயர்ந்த இடத்தில் என்னை␢ நிலை நிறுத்துகின்றார்.⁾
35⁽போருக்கு என்னை அவர்␢ பழக்குகின்றார்; எனவே, வெண்கல␢ வில்லையும் என் புயங்கள் வளைக்கும்!⁾
36⁽பாதுகாக்கும் உம் கேடயத்தை␢ நீர் எனக்கு வழங்கினீர்;␢ உமது துணையால் என்னைப்␢ பெருமைப்படுத்தினீர்.⁾
37⁽நான் நடக்கும் வழியை␢ அகலமாக்கினீர்;␢ என் கால்கள் தடுமாறவில்லை.⁾
38⁽என் எதிரிகளைத் துரத்திச் சென்று␢ அழித்தேன்; அவர்களை␢ அழித்தொழிக்கும் வரை␢ நான் திரும்பவில்லை.⁾
39⁽நான் அவர்களைக் கொன்று␢ அழித்தேன்; அவர்கள்␢ எழுந்திருக்கவில்லை; அவர்கள் என்␢ காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள்.⁾
40⁽போரிடும் ஆற்றலை எனக்கு␢ அரைக் கச்சையாக அளித்தீர்;␢ என்னை எதிர்த்தவர்களை எனக்கு␢ அடிப்பணியச் செய்தீர்.⁾
41⁽என் எதிரிகளைப் புறமுதுகிடச்␢ செய்தீர்: என்னை வெறுத்தோரை␢ நான் அழித்துவிட்டேன்.⁾
42⁽உதவி வேண்டி அவர்கள்␢ கதறினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு உதவுவார்␢ யாருமில்லை;␢ அவர்கள் ஆண்டவரை நோக்கி␢ மன்றாடினார்கள்;␢ ஆனால், அவர்களுக்கு அவர்␢ பதிலளிக்கவில்லை.⁾
43⁽எனவே, நான் அவர்களை மண்ணின்␢ புழுதியென நசுக்கினேன்;␢ அவர்களைத் தெருச் சேறென␢ மிதித்துத் தெறிக்கச் செய்தேன்.⁾
44⁽என் மக்களின் கலகத்தினின்று␢ என்னை விடுவித்தீர்;␢ பிற இனங்களுக்கு என்னைத்␢ தலைவனாக்கினீர்;␢ முன்பின் அறியாத மக்களும் எனக்குப்␢ பணிவிடை செய்தனர்.⁾
45⁽வேற்று நாட்டவர் என்னிடம்␢ கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள்␢ என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன்␢ எனக்குக் கீழ்ப்படிந்தனர்.⁾
46⁽வேற்று நாட்டவர் உள்ளம்␢ தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து␢ நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர்.⁾
47⁽ஆண்டவர் உண்மையாகவே␢ வாழ்கின்றார்; என் கற்பாறையாம்␢ அவர் போற்றப் பெறுவாராக!␢ என் மீட்பின் கற்பாறையாம்␢ கடவுள் மாட்சியுறுவாராக!⁾
48⁽எனக்காகப் பழிவாங்கும் இறைவன்␢ அவர்; மக்களினங்களை எனக்குக்␢ கீழ்ப்படுத்தியவரும் அவரே!⁾
49⁽என் பகைவரிடமிருந்து என்னை␢ அழைத்துவந்தவர் அவரே!␢ என் எதிரிகளுக்கு மேலாக என்னை␢ உயர்த்தினீர்! என்னைக்␢ கொடுமைப்படுத்தியவரிடமிருந்து␢ நீர் என்னைக் காத்தீர்!⁾
50⁽ஆகவே, ஆண்டவரே!␢ பிற இனத்தாரிடையே உம்மைப்␢ போற்றுவேன்; உம் பெயருக்குப்␢ புகழ் மாலை சாற்றுவேன்.⁾
51⁽தாம் ஏற்படுத்திய அரசருக்கு␢ மாபெரும் வெற்றியை அவளிப்பவர்␢ அவர்! தாம் திருப்பொழிவுசெய்த␢ தாவீதுக்கும் அவர்தம்␢ மரபினருக்கும் என்றென்றும்␢ பேரன்பு காட்டுபவரும் அவரே!”⁾