ஆகஸ்ட் 2026

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

வாசகங்கள்

1 ஆகஸ்ட், 2026

Memorial of Saint Alphonsus Liguori, Bishop and Doctor of the Church

அன்றைய திருப்பலி
Reading I

எரேமியா 26:11-16, 24

11குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, “இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்” என்று முறையிட்டனர்.⒫ 12அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: “நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பியுள்ளார். 13எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக் கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனைபற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக் கொள்வார். 14இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள். 15ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்துகொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும், இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.”⒫ 16பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, “கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்” என்றார்கள். 24ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 69:15-16, 30-31, 33-34

15⁽பெருவெள்ளம் என்னை␢ அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக!␢ ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!␢ படுகுழி தன்வாய் திறந்து␢ என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!⁾ 16⁽ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;␢ உம் பேரன்பு நன்மை மிக்கது;␢ உமது பேரிரக்கத்தை முன்னிட்டு␢ என்னை நோக்கித் திரும்பும்.⁾ 30⁽கடவுளின் பெயரை␢ நான் பாடிப் புகழ்வேன்;␢ அவருக்கு நன்றி செலுத்தி,␢ அவரை மாட்சிமைப்படுத்துவேன்;⁾ 31⁽காளையை விட␢ இதுவே ஆண்டவருக்கு உகந்தது;␢ கொம்பும் விரிகுளம்பும்␢ உள்ள எருதைவிட␢ இதுவே அவருக்கு உகந்தது.⁾ 33⁽ஆண்டவர்␢ ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்␢ செவிசாய்க்கின்றார்;␢ சிறைப்பட்ட தம் மக்களை␢ அவர் புறக்கணிப்பதில்லை.⁾ 34⁽வானமும் வையமும் கடல்களும்␢ அவற்றில் வாழும் யாவும்␢ அவரைப் புகழட்டும்.⁾
Alleluia

மத்தேயு 5:10

10⁽நீதியின் பொருட்டுத்␢ துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்;␢ ஏனெனில், விண்ணரசு அவர்களுக்குரியது.⁾
Gospel

மத்தேயு 14:1-12

1அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப்பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். 2அவன் தன் ஊழியரிடம், “இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்” என்று கூறினான். 3ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். 4ஏனெனில், யோவான் அவனிடம், “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லிவந்தார். 5ஏரோது அவரைக் கொலைசெய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான். 6ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். 7அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். 8அவள் தன் தாய் சொல்லிக்கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். 9இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும், தான் விருந்தினர் முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; 10ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான். 11அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டுவரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள். 12யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.