தோபித்து 13

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
1தோபித்தின் புகழ்ப்பா வருமாறு: 2⁽“என்றும் வாழும் கடவுள் போற்றி!␢ ஏனெனில் அவருடைய ஆட்சி␢ எக்காலத்துக்கும் நிலைக்கும்.␢ அவர் தண்டிக்கிறார்;␢ இரக்கமும் காட்டுகிறார்.␢ பாதாளத்தின் ஆழத்திற்கே␢ தள்ளுகிறார்;␢ பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார்.␢ அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது␢ எதுவுமில்லை.⁾ 3⁽இஸ்ரயேல் மக்களே,␢ வேற்றினத்தார்முன்␢ அவரது புகழை அறிக்கையிடுங்கள்.␢ ஏனெனில் அவர் அவர்களிடையே␢ உங்களைச் சிதறடித்துள்ளார்.⁾ 4⁽அவர் தமது பெருமையை␢ உங்களுக்குக் காட்டியுள்ளார்.␢ எல்லா உயிர்கள்முன்னும்␢ அவரை ஏத்துங்கள்.␢ ஏனெனில் அவர் நம் ஆண்டவர்;␢ நம் கடவுள்; நம் தந்தை;␢ எக்காலத்துக்கும் அவர் கடவுள்.⁾ 5⁽உங்களுடைய நெறிகெட்ட␢ செயல்களுக்காக␢ அவர் உங்களைத் தண்டிப்பார்;␢ நீங்கள் சிதறடிக்கப்பட்டுள்ள␢ எல்லா நாடுகளிலிருந்தும்␢ உங்களை ஒன்றுகூட்டி␢ உங்கள் அனைவர்மீதும்␢ இரக்கத்தைப் பொழிவார்.⁾ 6⁽நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும்␢ முழு ஆன்மாவோடும்␢ அவர்பால் திரும்பி␢ அவர் திருமுன்␢ உண்மையுடன் ஒழுகினால்␢ அவர் உங்கள்பால் திரும்புவார்;␢ தமது முகத்தை உங்களிடமிருந்து␢ என்றுமே திருப்பிக்கொள்ளார்.⁾ 7⁽உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை␢ இப்பொழுது எண்ணிப்பாருங்கள்;␢ நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்;␢ வாயார அவரை அறிக்கையிடுங்கள்.␢ என்றுமுள மன்னரை␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾ 8⁽* நான் அடிமையாய் வாழும் நாட்டில்␢ அவரைப் போற்றுவேன்;␢ அவருடைய ஆற்றலையும்␢ மேன்மையையும்␢ பாவ நாட்டமுள்ள இனத்தார்முன்␢ அறிக்கையிடுவேன்.␢ பாவிகளே, மனந்திரும்புங்கள்;␢ அவர் திருமுன்␢ நேர்மையுடன் ஒழுகுங்கள்.␢ ஒருவேளை அவர்␢ உங்கள் மீது அருள்கூர்வார்;␢ உங்களுக்கு இரக்கங்காட்டுவார்.⁾ 9⁽நான் என் கடவுளைப்␢ புகழ்ந்தேத்துவேன்;␢ என் உள்ளம் விண்ணக வேந்தரைப்␢ போற்றுகின்றது;␢ அவரது மேன்மையை நினைத்து␢ பேருவகை கொள்கிறது.⁾ 10⁽அனைவரும் புகழ் பாடுங்கள்;␢ எருசலேமில் அவரைப் போற்றுங்கள்.␢ திரு நகரான எருசலேமே,␢ உன் மக்களுடைய␢ செயல்களின் பொருட்டே␢ அவர் உன்னைத் தண்டிப்பார்;␢ நீதிமான்களின் பிள்ளைகள்மீது␢ மீண்டும் இரக்கங்காட்டுவார்.⁾ 11⁽உமது கூடாரம் உமக்காக மீண்டும்␢ மகிழ்ச்சியுடன் அமைக்கப்படும்.⁾ 12⁽நாடுகடத்தப்பட்ட உங்கள்␢ அனைவரையும் இன்புறுத்தி,␢ நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும்␢ தலைமுறைதோறும் அன்பு செலுத்துவாராக.⁾ 13⁽உலகின் எல்லைகள்வரை␢ பேரொளி சுடர்க.␢ தொலையிலிருந்து பல நாடுகள்␢ எருசலேமிடம் வரும்.␢ உலகின் எல்லா எல்லைகளிலிருந்தும்␢ மக்கள் உமது திருப் பெயர் விளங்கும்␢ இடத்திற்கு வருவார்கள்;␢ விண்ணக வேந்தருக்குத்␢ தம் கைகளில்␢ காணிக்கை ஏந்தி வருவார்கள்.␢ எல்லாத் தலைமுறைகளும்␢ உன்னில் மகிழ்ந்து பாடும்;␢ தெரிந்துகொள்ளப்பெற்ற நகரின் பெயர்␢ தலைமுறை தலைமுறையாக␢ நிலைத்திருக்கும்.⁾ 14⁽உனக்கு எதிராக␢ வன்சொல் கூறுவோரும்␢ உன்னை அழிப்போரும் சபிக்கப்படுவர்;␢ உன் மதில்களைத் தகர்ப்போரும்␢ உன் காவல்மாடங்களைத்␢ தரைமட்டமாக்குவோரும்␢ உன் வீடுகளைத் தீக்கிரையாக்குவோரும்␢ சபிக்கப்படுவர்.␢ ஆனால் உனக்கு என்றென்றும்␢ அஞ்சுவோர் அனைவரும்␢ ஆசி பெறுவர்.⁾ 15⁽வாரீர், நீதிமான்களின்␢ மக்களைக்குறித்து மகிழ்வீர்.␢ ஏனெனில் அவர்கள் அனைவரும்␢ மீண்டும் ஒன்றுகூடுவர்;␢ என்றுமுள ஆண்டவரைப் போற்றுவர்.␢ உன்னிடம் அன்புகொண்டோர்␢ பேறுபெற்றோர்;␢ உன் நிறை வாழ்வு கண்டு மகிழ்வோர்␢ பேறுபெற்றோர்.⁾ 16⁽உன் தண்டனைகள்␢ எல்லாவற்றையும் குறித்து␢ வருந்துவோர் பேறுபெற்றோர்;␢ அவர்கள் அனைவரும்␢ உன்பொருட்டு அகமகிழ்வார்கள்;␢ உனது முழு மகிழ்ச்சியையும்␢ என்றென்றும் காண்பார்கள்.␢ என் உயிரே,␢ மாவேந்தராம் ஆண்டவரைப் போற்று.⁾ 17⁽எருசலேம் நகர் எக்காலத்துக்கும்␢ அவரது இல்லமாக எழுப்பப்படும்.␢ என் வழிமரபினருள் எஞ்சியோர்␢ உனது மாட்சியைக் கண்டு␢ விண்ணக வேந்தரைப் புகழ்வாராயின்,␢ நான் எத்துணைப் பேறு பெற்றவன்!␢ எருசலேமின் வாயில்கள்␢ நீலமணியாலும்␢ மரகதத்தாலும் உருவாகும்;␢ உன் மதில்கள்␢ விலையுயர்ந்த கற்களால் கட்டப்படும்.␢ எருசலேமின் காவல்மாடங்கள்␢ பொன்னாலும்␢ கொத்தளங்கள் பசும் பொன்னாலும்␢ அமைக்கப்படும்;␢ எருசலேமின் வீதிகளில்␢ மாணிக்கமும் ஓபீர் நாட்டுக் கற்களும்␢ பதிக்கப்படும்;⁾ 18⁽எருசலேமின் வாயில்கள்␢ மகிழ்ச்சிப் பாக்கள் இசைக்கும்;␢ அதன் இல்லங்கள்தோறும்␢ ‘அல்லேலூயா,␢ இஸ்ரயேலின் கடவுள் போற்றி’␢ என முழங்கும்.␢ கடவுளின் ஆசிபெற்றோர்␢ அவரது திருப்பெயரை␢ என்றென்றும் வாழ்த்துவர்.”⁾