சபை உரையாளர் 10

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
1⁽கலத்திலிருக்கும் நறுமணத் தைலம்␢ முழுவதையும் செத்த ஈக்கள் முடை␢ நாற்றம் வீசும்படி செய்துவிடும்.␢ அதுபோல சிறிய மதிகேடும்␢ மேன்மையான ஞானத்தைக்␢ கெடுத்து விடும்.⁾ 2⁽தக்கன செய்வதையே␢ ஞானியரின் உள்ளம் நாடும்;␢ தகாதன செய்வதையே␢ மூடரின் உள்ளம் நாடும்.⁾ 3⁽மூடர் தெருவில் நடந்தாலே போதும்;␢ அவரது மடமை வெளியாகிவிடும்.␢ தாம் மூடர் என்பதை அவரே␢ அனைவருக்கும் காட்டிடுவார்.⁾ 4⁽மேலதிகாரி உன்னைச் சினந்து␢ கொண்டால், வேலையை விட்டு விடாதே.␢ நீ அடக்கமாயிருந்தால்,␢ பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.⁾⒫ 5உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது. 6மூடர்களுக்கு உயர்ந்த பதவி அளிக்கப்படுகிறது; செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள். 7அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன். 8⁽குழியை வெட்டுவார் அதில்␢ தாமே வீழ்வார்.␢ கன்னமிடுவோரைக்␢ கட்டு விரியன் கடிக்கும்.⁾ 9⁽கற்களை வெட்டி எடுப்பவர்␢ கற்களால் காயமடைவார்.␢ மரத்தை வெட்டுபவர்␢ காயத்திற்கு ஆளாவார்.⁾ 10⁽மழுங்கிய கோடரியைத் தீட்டாமல்␢ பயன்படுத்தினால் வேலைசெய்வது␢ மிகக் கடினமாயிருக்கும்.␢ ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.⁾ 11⁽பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால்␢ அதை மயக்கும் வித்தை␢ தெரிந்திருந்தும் பயனில்லை.⁾ 12⁽ஞானியரின் வாய்மொழி அவருக்குப்␢ பெருமை தேடித்தரும்.␢ மூடரோ தம் வாயால் கெடுவார்.⁾ 13⁽அவரது பேச்சு மடமையில் தொடங்கும்;␢ முழு பைத்தியத்தில் போய் முடியும்.⁾ 14⁽மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்;␢ என்ன பேசப்போகின்றார் என்பது␢ எவருக்கும் தெரியாது.␢ அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை␢ எவராலும் சொல்ல இயலாது.⁾ 15⁽மூடர் அளவுமீறி உழைத்துத்␢ தளர்ந்து போவார்.␢ ஊருக்குத் திரும்பிப்போகவும்␢ வகை அறியார்.⁾ 16⁽சிறு பிள்ளையை அரசனாகவும்␢ விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத்␢ தலைவர்களாகவும் கொண்ட நாடே!␢ நீ கெட்டழிவாய்.⁾ 17⁽உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும்␢ உரிய நேரத்தில் உண்பவர்களை,␢ குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு␢ இருப்பவர்களைத் தலைவர்களாகவும்␢ கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.⁾ 18⁽சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்;␢ பழுதுபார்க்காதவரின் வீடு␢ இடிந்து விழும்.⁾ 19⁽விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்;␢ திராட்சை மது வாழ்க்கையில்␢ களிப்புத்தரும்;␢ பணம் இருந்தால் தான்␢ எல்லாம் கிடைக்கும்.⁾ 20⁽தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே;␢ படுக்கையறையிலுங்கூடச்␢ செல்வர்களை இகழ்ந்து பேசாதே.␢ வானத்துப் பறவைகள் நீ கூறியதை␢ எடுத்துச்செல்லும்;␢ பறந்து சென்று நீ சொன்னதைத்␢ திரும்பச் சொல்லும்.⁾