மீக்கா 7

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7
1⁽ஐயோ! நான் கோடைக்காலக் கனிகளைக்␢ கொய்வதற்குச் சென்றவனைப்␢ போலானேன்;␢ திராட்சை பறித்து முடிந்தபின்␢ பழம் பறிக்கச்␢ சென்றவனைப் போலானேன்;␢ அப்பொழுது தின்பதற்கு␢ ஒரு திராட்சைக் குலையும் இல்லை;␢ என் உள்ளம் விரும்பும்␢ முதலில் பழுத்த␢ அத்திப் பழம்கூட இல்லை;⁾ 2⁽நாட்டில் இறைப்பற்றுள்ளோர்␢ அற்றுப்போனார்;␢ மனிதருள் நேர்மையானவர்␢ எவருமே இல்லை.␢ அவர்கள் அனைவரும்␢ இரத்தப் பழிவாங்கப்␢ பதுங்கிக் காத்திருக்கின்றனர்;␢ ஒருவர் ஒருவரைப் பிடிக்கக்␢ கண்ணி வைத்து வேட்டையாடுகின்றனர்.⁾ 3⁽தீமை செய்வதில்␢ அவர்கள் கைதேர்ந்தவர்கள்;␢ தலைவனும் நீதிபதியும்␢ கையூட்டுக் கேட்கின்றனர்;␢ பெரிய மனிதர் தாம் விரும்பியதை␢ வாய்விட்டுக் கூறுகின்றனர்;␢ இவ்வாறு, நெறிதவறி நடக்கின்றனர்.⁾ 4⁽அவர்களுள் சிறந்தவர்␢ முட்செடி போன்றவர்!␢ அவர்களுள் நேர்மையாளர்␢ வேலிமுள் போன்றவர்!␢ அவர்களுடைய காவலர்கள் அறிவித்த␢ தீர்ப்பின் நாள் வந்துவிட்டது;␢ இப்பொழுதே அவர்களுக்குத் திகில்.⁾ 5⁽அடுத்திருப்பவன்மீது␢ நம்பிக்கை கொள்ளவேண்டாம்;␢ தோழனிடத்திலும்␢ நம்பிக்கை வைக்கவேண்டாம்.␢ உன் மார்பில் சாய்ந்திருக்கிற␢ மனைவி முன்பும்␢ உன் வாய்க்குப் பூட்டுப்போடு!⁾ 6⁽ஏனெனில், மகன் தன் தந்தையை␢ அவமதிக்கின்றான்;␢ மகள் தன் தாய்க்கு எதிராக␢ எழும்புகின்றாள்,␢ மருமகள், தன் மாமியாரை␢ எதிர்க்கின்றாள்;␢ ஒருவரின் பகைவர்␢ அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.⁾ 7⁽நானோ, ஆண்டவரை␢ விழிப்புடன் நோக்கியிருப்பேன்;␢ என்னை மீட்கும் என் கடவுளுக்காகக்␢ காத்திருப்பேன்.␢ என் கடவுள் எனக்குச்␢ செவிசாய்த்தருள்வார்.⁾ 8⁽என் பகைவனே,␢ என்னைக் குறித்துக் களிப்படையாதே;␢ ஏனெனில், நான் வீழ்ச்சியுற்றாலும்␢ எழுச்சிபெறுவேன்.␢ நான் இருளில் குடியிருந்தாலும்␢ ஆண்டவர் எனக்கு ஒளியாய் இருப்பார்.⁾ 9⁽நான் ஆண்டவருக்கு எதிராகப்␢ பாவம் செய்தேன்;␢ ஆதலால், அவரது கடும் சினத்தை,␢ அவர் எனக்காக வழக்காடி␢ எனக்கு நீதி வழங்கும்வரை,␢ தாங்கிக்கொள்வேன்;␢ அவர் என்னை ஒளிக்குள்␢ கொண்டு வருவார்;␢ அவரது நீதியை நான் காண்பேன்.⁾ 10⁽அப்போது, என்னோடு␢ பகைமைகொண்டவர்கள்␢ அதைக் காண்பார்கள்;␢ “உன் கடவுளாகிய ஆண்டவர்␢ எங்கே?” என்று␢ என்னிடம் கேட்டவள்␢ வெட்கம் அடைவாள்;␢ என் கண்கள் அவளைக் கண்டு␢ களிகூரும்.␢ அப்பொழுது, தெருச் சேற்றைப்போல␢ அவள் மிதிபடுவாள்.⁾ 11⁽உன் மதில்களைத்␢ திரும்பக் கட்டும் நாள் வருகின்றது;␢ அந்நாளில், நாட்டின் எல்லை␢ வெகு தொலைவிற்கு விரிந்து பரவும்.⁾ 12⁽அந்நாளில், அசீரியாவிலிருந்து␢ எகிப்திலுள்ள நகர்கள் வரை,␢ எகிப்திலிருந்து பேராறு வரை,␢ ஒரு கடல்முதல் மறுகடல் வரை,␢ ஒரு மலைமுதல் மறு மலைவரை␢ உள்ள மக்கள் அனைவரும்␢ உன்னிடம் திரும்புவார்கள்.⁾ 13⁽நிலவுலகம்␢ அங்குக் குடியிருப்போரின்␢ செயல்களின் விளைவால்␢ பாழடைந்து போகும்.⁾ 14⁽ஆண்டவரே,␢ உமது உரிமைச் சொத்தாய் இருக்கும்␢ மந்தையாகிய உம்முடைய மக்களை␢ உமது கோலினால் மேய்த்தருளும்!␢ அவர்கள் கர்மேலின் நடுவே␢ காட்டில் தனித்து␢ வாழ்கின்றார்களே!␢ முற்காலத்தில் நடந்ததுபோல␢ அவர்கள் பாசானிலும்␢ கிலயாதிலும் மேயட்டும்!⁾ 15⁽எகிப்து நாட்டிலிருந்து␢ நீங்கள் புறப்பட்டுவந்த நாளில்␢ நடந்ததுபோல␢ நான் அவர்களுக்கு␢ வியத்தகு செயல்களைக்␢ காண்பிப்பேன்.⁾ 16⁽வேற்றினத்தார் இதைப் பார்த்துத்␢ தங்கள் ஆற்றல்␢ அனைத்தையும் குறித்து␢ நாணமடைவர்;␢ அவர்கள் தங்கள் வாயைக்␢ கையால் மூடிக்கொள்வார்கள்;␢ அவர்களுடைய காதுகள்␢ செவிடாய்ப் போகும்.⁾ 17⁽அவர்கள் பாம்பைப் போலவும்␢ நிலத்தில் ஊர்வன போலவும்␢ மண்ணை நக்குவார்கள்;␢ தங்கள் எல்லைக் காப்புகளில் இருந்து␢ நடுநடுங்கி வெளியே வருவார்கள்;␢ நம் கடவுளாகிய␢ ஆண்டவர் முன்னிலையில்␢ அஞ்சி நடுங்குவார்கள்.␢ உமக்கே அவர்கள் அஞ்சுவார்கள்.⁾ 18⁽உமக்கு நிகரான இறைவன் யார்?␢ எஞ்சியிருப்போரின்␢ குற்றத்தைப் பொறுத்து␢ நீர் உமது உரிமைச் சொத்தில்␢ எஞ்சியிருப்போரின் தீச்செயலை␢ மன்னிக்கின்றீர்;␢ உமக்கு நிகரானவர் யார்?␢ அவர் தம் சினத்தில்␢ என்றென்றும் நிலைத்திரார்;␢ ஏனெனில், அவர்␢ பேரன்புகூர்வதில்␢ விருப்பமுடையவர்;⁾ 19⁽அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்;␢ நம் தீச்செயல்களை␢ மிதித்துப்போடுவார்;␢ நம் பாவங்கள் அனைத்தையும்␢ ஆழ்கடலில் எறிந்து விடுவார்.⁾ 20⁽பண்டைய நாளில்␢ எங்கள் மூதாதையருக்கு␢ நீர் ஆணையிட்டுக் கூறியதுபோல␢ யாக்கோபுக்கு␢ வாக்குப் பிறழாமையையும்␢ ஆபிரகாமுக்குப்␢ பேரன்பையும் காட்டியருள்வீர்.⁾