1⁽பண்புகெட்ட இனமே!␢ பகுத்தறிவோடு நடந்துகொள்.⁾
2⁽பதரைப்போல் நீங்கள்␢ தூற்றப்படுமுன்னே,␢ ஆண்டவரது கடும் சினம்␢ உங்கள் மேல் விழுமுன்னே,␢ ஆண்டவரது சினத்தின் நாள்␢ உங்கள்மேல் விழுமுன்னே,⁾
3⁽நாட்டிலிருக்கும் எளியோரே!␢ ஆண்டவரின் கட்டளையைக்␢ கடைப்பிடிப்போரே!␢ அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்;␢ நேர்மையை நாடுங்கள்;␢ மனத்தாழ்மையைத் தேடுங்கள்;␢ ஆண்டவரது சினத்தின் நாளில்␢ ஒரு வேளை உங்களுக்குப்␢ புகலிடம் கிடைக்கும்.⁾
4⁽காசா குடியற்றுப்போகும்;␢ அஸ்கலோன் பாழடைந்துபோகும்;␢ அஸ்தோது நண்பகலில்␢ விரட்டியடிக்கப்படும்;␢ எக்ரோன் வேரோடு␢ பிடுங்கியெறியப்படும்.⁾
5⁽கடற்கரையில் வாழும்␢ இனத்தாராகிய கெரேத்தியரே!␢ உங்களுக்கு ஐயோ கேடு!␢ ஆண்டவரின் வாக்கு␢ உங்களுக்கு எதிராய் உள்ளது;␢ பெலிஸ்தியரின் நாடே! கானானே!␢ எவனும் குடியிராதபடி␢ நான் உன்னை அழித்து விடுவேன்.⁾
6⁽இவ்வாறு அந்தக் கடற்கரை நாடு␢ இடையரின் குடில்களுக்கும்␢ ஆடுகளின் பட்டிகளுக்குமே␢ ஏற்றதாகும்.⁾
7⁽அந்தக் கடற்கரை␢ யூதாவின் குடும்பத்தவருள்␢ எஞ்சியிருப்போர்க்கு உடைமையாகும்;␢ அங்கே அவர்கள்␢ தங்கள் ஆடுகளை மேய்த்து,␢ மாலையில் அஸ்கலோன் வீடுகளில்␢ படுத்திருப்பார்கள்;␢ ஏனெனில்␢ அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்␢ அவர்கள்மீது அக்கறை கொண்டு,␢ முன்னைய நன்னிலைக்கு␢ அவர்களை உயர்த்துவார்.⁾
8⁽மோவாபின் பழிப்புரைகளையும்␢ அம்மோனியரின் வசைமொழிகளையும்␢ நான் கேட்டேன்;␢ அவர்கள் என் மக்களை இழித்துரைத்து,␢ அவர்களின் நாட்டு␢ எல்லைகளைக் குறித்து␢ வீம்பு பேசியதையும் நான் கேட்டேன்.⁾
9⁽ஆதலால், படைகளின் ஆண்டவரும்,␢ இஸ்ரயேலின் வாழும் கடவுளுமாகிய␢ நான் ஆணையிட்டுக் கூறுகின்றேன்;␢ மோவாபு சோதோமைப்போல் ஆகும்;␢ அம்மோனியர்␢ கொமோராவைப்போல் ஆவர்;␢ இது உறுதி.␢ இந்நாடுகள்␢ காஞ்சொறி படரும் காடாகவும்,␢ உப்புப் பள்ளம் நிறைந்த␢ பாழ்நிலமாகவும் என்றும் இருக்கும்.␢ என் மக்களில் எஞ்சியோர்␢ அவர்களைக் கொள்ளையடிப்பர்;␢ என் மக்களுள் தப்பியோர்␢ அவர்களை அடிமைகளாக்கிக் கொள்வர்.⁾
10⁽அவர்களுடைய இறுமாப்புக்குக்␢ கிடைக்கும் பயன் இதுவே;␢ ஏனெனில், படைகளின் ஆண்டவருடைய␢ மக்களுக்கு எதிராக␢ அவர்கள் பழித்துரைத்தார்கள்;␢ வீம்பு பேசினார்கள்.⁾
11⁽ஆண்டவர் அவர்களை␢ அச்சமுறச் செய்வார்;␢ நாட்டின் தெய்வங்களை எல்லாம்␢ ஆற்றல் குன்றிப்போகச் செய்வார்.␢ வேற்றினத்தார் அனைவரும்␢ அவரவர்தம் தீவுகளில்␢ இருந்து கொண்டு␢ அவரையே வணங்குவர்.⁾
12⁽எத்தியோப்பியரே!␢ நீங்களும் எனது வாளால்␢ வெட்டி வீழ்த்தப்படுவீர்கள்.⁾
13⁽வடதிசைக்கு எதிராகத்␢ தம் கையை ஓங்கி,␢ ஆண்டவர் அசீரியாவை அழித்திடுவார்;␢ நினிவே நகரைப் பாழடையச் செய்து,␢ வறண்ட பாலைநிலமாக்குவார்.⁾
14⁽அங்கே மந்தைகளும்␢ எல்லாவகை விலங்குகளும்␢ படுத்துக் கிடக்கும்;␢ தூண்களின் உச்சியில்␢ கூகையும் சாக்குருவியும்␢ தங்கியிருக்கும்;␢ பலகணியில் அமர்ந்தவாறு␢ ஆந்தை அலறும்;␢ நிலைக்கதவின்மேல் இருந்தவாறு␢ காகம் கரையும்;␢ கேதுரு மர வேலைப்பாடுகள்␢ அழிக்கப்படும்.⁾
15⁽“நான் ஒப்புயர்வு அற்றவன்” என்று␢ கவலையின்றிக் களிப்புற்றிருந்த␢ நகர் இதுதானோ?␢ இப்பொழுது அது␢ காட்டு விலங்குகளின் குகையாகி␢ எவ்வளவு பாழாய்ப் போயிற்று!␢ அதைக் கடந்துபோகும் ஒவ்வொருவனும்␢ சீழ்க்கையடித்துக் கையசைக்கிறான்.⁾