யோசுவா 19

முந்திய அடுத்த
1இரண்டாவது சீட்டு சிமியோனின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்களது உரிமைச்சொத்து யூதா மக்களின் பங்கிற்கு நடுவில் அமைந்திருந்தது. 2அவர்களுக்கு உடைமையான நகர்கள்; பேயேர்செபா, சேபா, மோலாதா, 3அட்சர்சூவால், பாலா எட்சேம், 4எல்தோலகு, பெத்தூல், ஓர்மா, 5சிக்லாகு, பெத்மர்க்கபோத்து, அட்சர்சூசா, 6பெத்லாபாவோத்து, சாருகன் ஆக பதின்மூன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 7அயின், ரிம்மோன், எக்தேர், ஆசான், ஆக நான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 8இவைகளன்றித் தெற்கே இராமாது எனப்படும் பாகலாத்பெயேர்வரை உள்ள நகர்களும் அவற்றின் சிற்றூர்கள் அனைத்தும். இதுவே சிமியோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து. 9சிமியோன் மக்களின் உரிமைச்சொத்து யூதா மக்களுக்குரிய பங்கில் ஒரு பகுதி. யூதா மக்களுக்கு ஏராளமான உடைமை இருந்தது. அவர்களின் உரிமைச் சொத்தின் நடுவில் சிமியோனின் மக்கள் உரிமைச் சொத்தைப் பெற்றனர். 10மூன்றாவது சீட்டு செபுலோன் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. அவர்கள் உடைமையின் எல்லை சாரீதுவரை சென்றது. 11அவர்களது எல்லை மேற்கே மரியலாவுக்கு ஏறி, தபா சேத்துக்கு வந்து யோக்னயாமுக்கு எதிரில் உள்ள ஓடையைத் தொடுகின்றது. 12சாரீதிலிருந்து கதிரவன் உதிக்கும் கிழக்குப்பக்கம் திரும்பி கிஸ்லோத்து தாபோரையும், தாபராத்தையும் நோக்கிச் சென்று யாப்பியாமேல் ஏறுகிறது. 13அங்கிருந்து கிழக்காகக் காத்கேப்பேரையும் இத்தகாச்சினையும் ரிம்மோனையும் கடந்து சென்று நேயா பக்கம் வளைகிறது. 14மேலும் இவ்வெல்லை வடக்கில் அன்னாத்தோனைச் சுற்றுகிறது. இது இப்தாவேல் பள்ளத்தாக்கில் முடிவடைகிறது. 15கற்றாத்து, நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் ஆக பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 16இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களுமே செபுலோன் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச்சொத்து. 17நான்காவது சீட்டு இசக்காரின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 18அவர்களது எல்லை; இஸ்ரியேல், கெசுல்லோத்து, சூனேம், 19அப்பாராயிம், சியோன், அனகராத்து, 20இரப்பீத்து, கிசியோன், எபெசு, 21இரமேத்து, ஏன்கன்னிம், ஏன்கத்தா, பெத்-பசேசு என்பவையே. 22அவ்வெல்லை தாபோரையும் சகட்சிமாவையும் பெத்சமேசையும் தொட்டு, யோர்தானில் முடிவடைகின்றது. ஆக, பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 23இவை இசக்கார் மக்களின் குலத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும். 24ஐந்தாவது சீட்டு ஆசேர் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 25அவர்களின் எல்லை; எல்காத்து, அலீ, பெத்தேன், அக்சாபு, 26அல்லமெலக்கு, அமாது, மிசால் என்பவை. மேற்குப்பக்கம் கர்மேலையும் சகோர் லிப்னாத்தையும் தொட்டு, 27கிழக்குப் பக்கம் திரும்பி, பெத்தாகோன் சென்று செபுலுன், இப்தாவேல் பள்ளத்தாக்கையும், பெத்தேமக்கு நெகியேலுக்கு வடக்காகத் தொட்டு, காபூலில் இடப்பக்கம் திரும்புகின்றது. 28எபிரோன், இரகோபு, அம்மோன், தானா, பெரிய சீதோன்வரை சென்று, 29பிறகு இராமா பக்கம் திரும்புகின்றது. அரண்சூழ் நகரான தீர் வரை சென்று, கோசா பக்கம் திரும்பிக் கடலில் முடிவடைகிறது. மேகேபல், அக்சீபை ஒட்டிய கடலில் முடிவடைகிறது. 30உம்மா, அபேக்கு, இரகோபு, ஆக இருபத்திரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 31இவையே ஆசேர் மக்கள் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்தாகிய நகர்களும் அவற்றின் சிற்றூர்களும். 32ஆறாவது சீட்டு நப்தலியின் மக்களுக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 33அவர்களது எல்லை ஏலப்பிலிருந்து சானான்னிமிலுள்ள கருவாலி மரத்திலிருந்து, அதாமி நெகேபு, யப்னவேல், இலக்கம்வரை சென்று யோர்தானில் முடிகின்றது. 34பிறகு, அவ்வெல்லை மேற்கில் அசனோத்துதாபோர் பக்கம் திரும்புகின்றது; அங்கிருந்து உக்கோகில் வெளியேறுகின்றது. தெற்கில் செபுலோனையும், மேற்கில் ஆசேரையும் கிழக்கில் யோர்தானையும் எல்லையாகக் கொண்டுள்ளது. 35அரண்சூழ் நகர்கள்; சித்திம், சேர், அம்மாத்து, இரக்காத்து, கினரேத்து, 36அதாமா, இராமா, ஆட்சோர், 37கெதேசு, எதிரேயி, ஏன் ஆட்சோர், 38ஈரோன், மிக்தலேல், ஒரேம், பெத்தனாத்து, பெத்சமேசு, ஆக பத்தொன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க. 39இவை நப்தலியின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நகர்களும் அவற்றின் சிற்றூர்களும். 40ஏழாவது சீட்டு தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி விழுந்தது. 41அவர்களது உரிமைச் சொத்தின் எல்லை; சோரா, எசுத்தாவோல், ஈர்சமேசு 42சாயலாபிம், அய்யலோன், இதிலா, 43ஏலோன், திமினா, எக்ரோன், 44எல்தெக்கே, கிபதோன், பாகலாத்து, 45எகூது, பெனபராக்கு, காத்ரிம்மோன், 46மேயர்க்கோன், இரக்கோன் ஆகிய இந்நகர்களும் யோப்பாவுக்கு எதிரே எல்லைப் பகுதியும். 47தாண் மக்களின் எல்லை ஒடுக்கமாக இருந்ததால், அவர்கள் புறப்பட்டுப்போய் இலசேமை முற்றுகையிட்டு வளைத்துக் கொண்டனர்; அதை வாள் முனையில் தாக்கித் தங்கள் உடைமையாக்கிக் கொண்டு அங்கு வாழ்ந்தனர். தங்கள் மூதாதையான தாணின் பெயரை ஒட்டி, இலசேமிற்குத் ‘தாண்’ என்று பெயரிட்டார்கள். 48இந்நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் தாண் மக்களின் குலத்தாருக்கு அவர்கள் குடும்பங்களின்படி கிடைத்த உரிமைச் சொத்து. 49நாட்டுக்கு எல்லை வகுத்து அவரவர்களுக்கு உரிமைச்சொத்து பிரித்துக் கொடுத்தபின், நூனின் மகன் யோசுவாவுக்கு இஸ்ரயேல் மக்கள் தங்கள் நடுவில் உரிமைச்சொத்து அளித்தனர். 50எப்ராயிம் மலைநாட்டில் அவர் கேட்ட நகரான திம்னத்செராவை ஆண்டவரின் கட்டளைப்படி அவருக்குக் கொடுத்தனர். அவர் அந்நகரைக் கட்டியெழுப்பி அதில் வாழ்ந்தார். 51இவ்வாறு, குரு எலயாசர், நூனின் மகன் யோசுவா, இஸ்ரயேல் குலங்களின் முதுபெரும் தலைவர்கள் ஆகியோர் இவற்றை இஸ்ரயேல் மக்களின் குடும்பங்களுக்கு உரிமைச் சொத்தாகச் சீலோவில் ஆண்டவர் முன்னிலையில் சந்திப்புக் கூடார வாயிலில் திருவுளச்சீட்டுப் போட்டு உரிமையாக்கி, நாட்டின் பங்கீட்டுப் பணியை நிறைவு செய்தனர்.