1⁽சாத்ராக்கு, மேசாக்கு, அபேத்நெகோ␢ ஆகியோர்* கடவுளைப் புகழ்ந்து␢ பாடியவாறும் ஆண்டவரைப்␢ போற்றியவாறும் தீப்பிழம்பின்␢ நடுவே உலாவிக் கொண்டிருந்தார்கள்.⁾
2⁽அப்பொழுது அசரியா நெருப்பின்␢ நடுவில் எழுந்து நின்று,␢ உரத்த குரலில் பின்வருமாறு␢ மன்றாடினார்;⁾
3⁽“எங்கள் மூதாதையாரின்␢ கடவுளாகிய ஆண்டவரே,␢ நீர் வாழ்த்தப் பெறுவீராக,␢ புகழப்படுவீராக; உம் பெயர்␢ என்றென்றும் மாண்புமிக்கது.⁾
4⁽எங்களுக்குச் செய்துள்ள␢ அனைத்திலும் நீர் நீதியுள்ளவர்.␢ உம் செயல்கள் யாவும்␢ நேர்மையானவை; உம் வழிகள்␢ செவ்வையானவை; உம் தீர்ப்புகள்␢ அனைத்தும் உண்மையானவை.⁾
5⁽எங்கள் மீதும் எங்கள்␢ மூதாதையரின் திருநகரான␢ எருசலேம்மீதும் நீர்␢ வருவித்துள்ள அனைத்திலும்␢ நேர்மையான தீர்ப்புகளை␢ வழங்கியுள்ளீர்; எங்கள்␢ பாவங்களை முன்னிட்டே␢ இவற்றையெல்லாம் உண்மையோடும்␢ நீதியோடும் எங்களுக்கு வரச்செய்துள்ளீர்.⁾
6⁽உம்மைவிட்டு விலகிச் சென்றதால்␢ நாங்கள் பாவம் செய்தோம்;␢ நெறி தவறினோம்;␢ எல்லாவற்றிலும் பாவம் செய்தோம்;␢ உம் கட்டளைகளுக்குப்␢ பணிந்தோமில்லை.⁾
7⁽எங்கள் நலனைமுன்னிட்டு நீர்␢ எங்களுக்குக் கட்டளையிட்டவாறு␢ நாங்கள் நடக்கவுமில்லை,␢ செய்யவுமில்லை.⁾
8⁽நீர் எங்கள்மீது வருவித்தவை␢ அனைத்தையும், எங்களுக்குச்␢ செய்த யாவற்றையும்␢ உண்மையோடும் நீதியோடும்␢ செய்திருக்கிறீர்.⁾
9⁽நெறிகெட்ட எதிரிகளின் கையில்,␢ கடவுளைக் கைவிட்ட, மிகுந்த␢ வெறுப்புக்குரியோர் கையில்␢ எங்களை ஒப்படைத்தீர்;␢ நேர்மையற்றவனும் அனைத்துலகிலும்␢ மிகக் கொடியவனுமான␢ மன்னனிடம் எங்களைக் கையளித்தீர்.⁾
10⁽இப்பொழுது வாய் திறக்க␢ எங்களால் இயலவில்லை;␢ உம் ஊழியர்களும் உம்மை␢ வழிபடுவோருமாகிய நாங்கள்␢ வெட்கத்துக்கும் இகழ்ச்சிக்கும்␢ ஆளானோம்.⁾
11⁽உமது பெயரை முன்னிட்டு␢ எங்களை என்றும்␢ கைவிட்டுவிடாதீர்;␢ உமது உடன்படிக்கையை␢ முறித்துவிடாதீர்.⁾
12⁽உம் அன்பர் ஆபிரகாமை␢ முன்னிட்டும், உம் ஊழியர்␢ ஈசாக்கை முன்னிட்டும்␢ உம் தூயவர் இஸ்ரயேலை␢ முன்னிட்டும், உம் இரக்கம்␢ எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர்.⁾
13⁽விண்மீன்களைப் போலவும்␢ கடற்கரை மணலைப் போலவும்␢ அவர்களின் வழிமரபினரைப்␢ பெருகச் செய்வதாக நீர்␢ அவர்களுக்கு உறுதி அளித்தீர்.⁾
14⁽ஆண்டவரே, எங்கள் பாவங்களால்␢ மற்ற மக்களினங்களைவிட␢ நாங்கள் எண்ணிக்கையில்␢ குறைந்து விட்டோம்; உலகெங்கும்␢ இன்று தாழ்வடைந்தோம்.⁾
15⁽இப்பொழுது எங்களுக்கு␢ மன்னர் இல்லை,␢ இறைவாக்கினர் இல்லை,␢ தலைவர் இல்லை; எரிபலி இல்லை,␢ எந்தப் பலியும் இல்லை;␢ காணிக்கைப்பொருளோ␢ தூபமோ இல்லை; உம் திருமுன்␢ பலியிட்டு, உம் இரக்கத்தைப்␢ பெற இடமே இல்லை.⁾
16⁽ஆயினும், செம்மறிக்கடாக்கள்,␢ காளைகளால் அமைந்த␢ எரிபலி போலும் பல்லாயிரம்␢ கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான␢ பலிபோலும் நொறுங்கிய உள்ளமும்␢ தாழ்வுற்ற மனமும் கொண்ட␢ நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.⁾
17⁽அவ்வாறே எமது பலி இன்று␢ உம் திருமுன் அமைவதாக;␢ நாங்கள் முழுமையாக உம்மைப்␢ பின்பற்றுவோமாக; ஏனெனில்␢ உம்மில் நம்பிக்கை வைப்போர்␢ வெட்கத்திற்கு ஆட்படமாட்டார்.⁾
18⁽இப்பொழுது நாங்கள்␢ முழு உள்ளத்துடன்␢ உம்மைப் பின்பற்றுகிறோம்;␢ உமக்கு அஞ்சி, உம் முகத்தை␢ நாடுகிறோம். எம்மை␢ வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்;⁾
19⁽மாறாக, உம் பரிவிற்கு␢ ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு␢ ஏற்பவும் எங்களை நடத்தும்.⁾
20⁽ஆண்டவரே, உம் வியத்தகு␢ செயல்களுக்கு ஏற்ப எங்களை␢ விடுவியும்; உம் பெயரை␢ மாட்சிப்படுத்தும்.⁾
21⁽உம் ஊழியர்களுக்குத்␢ தீங்கு செய்வோர் அனைவரும்␢ வெட்கத்திற்கு உள்ளாகட்டும்.␢ அவர்கள் தங்கள் வலிமை, ஆட்சி␢ அனைத்தையும் இழந்து␢ இகழ்ச்சியுறட்டும்;␢ அவர்களது ஆற்றல்␢ அழிந்துபடட்டும்.⁾
22⁽நீரே ஒரே கடவுளாகிய ஆண்டவர்␢ என்றும், மண்ணுலகெங்கும்␢ மாண்புமிக்கவர் என்றும்␢ அவர்கள் அறிந்துகொள்ளட்டும்.”⁾⒫
23மன்னனின் பணியாளர் அவர்களைச் சூளைக்குள் தூக்கி எறிந்தபின் சூடநீர், கீல், சணற்கூளம், சுள்ளிகள் ஆகியவற்றைச் சூளையில் போட்டுத் தீ வளர்த்தவண்ணம் இருந்தனர்.⒫
24இதனால் தீப்பிழம்பு சூளைக்குமேல் நாற்பத்தொன்பது முழம் எழும்பிற்று.
25அது வெளியே பரவிச்சென்று, சூளை அருகே நின்று கொண்டிருந்த கல்தேயரைச் சுட்டெரித்தது.
26ஆனால் ஆண்டவரின் தூதர் சூளைக்குள் இறங்கிவந்து, அசரியாவோடும் அவர்தம் தோழர்களோடும் சேர்ந்து கொண்டார்; அனற்கொழுந்து சூளையினின்று வெளியேறச் செய்தார்;
27மேலும், சூளையின் நடுவில் குளிர்காற்று வீசச் செய்தார். இதனால் நெருப்பு அவர்களைத் தீண்டவேயில்லை; அவர்களுக்குத் தீங்கிழைக்கவுமில்லை. துன்பமோ துயரமோ தரவுமில்லை.⒫
28அப்பொழுது அம்மூவரும் தீச்சூளையில் ஒரே குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, மாட்சிப்படுத்தினர்;⒫
29⁽“எங்கள் மூதாதையரின்␢ கடவுளாகிய ஆண்டவரே,␢ நீர் வாழ்த்தப் பெறுவீராக;␢ என்றென்றும் நீர் புகழப்பெறவும்␢ ஏத்திப் போற்றப்பெறவும்␢ தகுதியுள்ளவர்.␢ மாட்சியும் தூய்மையும் நிறைந்த␢ உம் பெயர் வாழ்த்துக்குரியது.␢ எக்காலத்துக்கும் அது␢ புகழ்ந்தேத்தற்குரியது;␢ ஏத்திப் போற்றற்குரியது.⁾
30⁽உமது தூய மாட்சிவிளங்கும்␢ கோவிலில் நீர் வாழ்த்தப்␢ பெறுவீராக; உயர் புகழ்ச்சிக்கும்␢ மிகு மாட்சிக்கும் நீர் உரியவர்.⁾
31⁽கெருபுகள்மேல் வீற்றிருந்து␢ படுகுழியை நோக்குபவரே,␢ நீர் வாழ்த்தப்பெறுவீராக;␢ நீர் என்றென்றும் புகழப்படவும்␢ ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர்.⁾
32⁽உமது ஆட்சிக்குரிய அரியணை␢ மீது நீர் வாழ்த்தப்பெறுவீராக;␢ என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப்␢ பெறுவீராக, ஏத்திப்␢ போற்றப்பெறுவீராக.⁾
33⁽உயர் வானகத்தில் நீர்␢ வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும்␢ நீர் பாடல் பெறவும்,␢ மாட்சி அடையவும் தகுதியுள்ளவர்.⁾
34⁽ஆண்டவரின் அனைத்துச்␢ செயல்களே, நீங்களெல்லாம்␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப்␢ புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
35⁽வானங்களே, ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾
36⁽ஆண்டவரின் தூதர்களே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
37⁽வானத்திற்குமேல் உள்ள␢ நீர்த்திரளே, ஆண்டவரை␢ வாழ்த்து; என்றென்றும் அவரைப்␢ புகழ்ந்து பாடி, ஏத்திப் போற்று.⁾
38⁽ஆண்டவரின் ஆற்றல்களே,␢ நீங்களெல்லாம் ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி,␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾
39⁽கதிரவனே, நிலவே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
40⁽விண்மீன்களே, ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி,␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾
41⁽மழையே, பனியே,␢ நீங்களெல்லாம் ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி,␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾
42⁽காற்றுவகைகளே, நீங்களெல்லாம்␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
43⁽நெருப்பே, வெப்பமே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
44⁽நடுங்கும் குளிரே, கடும் வெயிலே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரை புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
45⁽பனித்திவலைகளே, பனிமழையே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் பகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
46⁽பனிக்கட்டியே, குளிர்மையே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
47⁽உறைபனியே, மூடுபனியே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
48⁽இரவே, பகலே, ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி,␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾
49⁽ஒளியே, இருளே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
50⁽மின்னல்களே, முகில்களே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
51⁽மண்ணுலகு ஆண்டவரை␢ வாழ்த்துவதாக; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி,␢ ஏத்திப் போற்றுவதாக.⁾
52⁽மலைகளே, குன்றுகளே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
53⁽நிலத்தில் தளிர்ப்பவையே,␢ நீங்களெல்லாம் ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி,␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾
54⁽கடல்களே, ஆறுகளே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
55⁽நீரூற்றுகளே, ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி,␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾
56⁽திமிங்கிலங்களே, நீர்வாழ்␢ உயிரினங்களே, நீங்களெல்லாம்␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
57⁽வானத்துப் பறவைகளே,␢ நீங்களெல்லாம் ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
58⁽காட்டு விலங்குகளே,␢ கால் நடைகளே, நீங்களெல்லாம்␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
59⁽மண்ணுலக மாந்தர்களே,.␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் பகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
60⁽இஸ்ரயேல் மக்களே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
61⁽ஆண்டவரின் குருக்களே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
62⁽ஆண்டவரின் ஊழியரே,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
63⁽நீதிமான்களே, நீங்கள் அனைவரும்␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏத்திப் போற்றுங்கள்.⁾
64⁽தூய்மையும் மனத்தாழ்ச்சியும்␢ உள்ளோரே, ஆண்டவரை␢ வாழ்த்துங்கள்; என்றென்றும்␢ அவரைப் புகழ்ந்து பாடி,␢ ஏத்திப் போற்றுங்கள்.⁾
65⁽அனனியா, அசரியா, மிசாவேல்,␢ ஆண்டவரை வாழ்த்துங்கள்;␢ என்றென்றும் அவரைப் புகழ்ந்து␢ பாடி, ஏற்றிப் போற்றுங்கள்.␢ ஏனெனில் பாதாளத்திலிருந்து␢ அவர் நம்மை விடுவித்தார்;␢ சாவின் பிடியிலிருந்து நம்மை மீட்டார்;␢ கொழுந்துவிட்டெரியும்␢ சூளையிலிருந்து நம்மைக்␢ காப்பாற்றினார்; நெருப்பிலிருந்து␢ நம்மைக் காத்தருளினார்⁾
66⁽ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவர் நல்லவர்;␢ அவரது இரக்கம் என்றென்றும்␢ நிலைத்துள்ளது.⁾
67⁽ஆண்டவரை வழிபடுவோரே,␢ தெய்வங்களுக்கெல்லாம் மேலான␢ கடவுளை நீங்கள் அனைவரும்␢ வாழ்த்துங்கள்; அவருக்குப்␢ புகழ் பாடுங்கள், நன்றி செலுத்துங்கள்;␢ ஏனெனில் அவரது இரக்கம்␢ என்றென்றும் நிலைத்துள்ளது.”⁾