1⁽ஞானமே கடவுளுடைய␢ கட்டளைகள் அடங்கிய நூல்;␢ என்றும் நிலைக்கக்கூடிய திருச்சட்டம்.␢ அதைக் கடைப்பிடிப்போர்␢ அனைவரும் வாழ்வர்;␢ அதைக் கைவிடுவோர் உயிரிழப்பர்.⁾
2⁽யாக்கோபே, திரும்பி வா;␢ ஞானத்தை ஏற்றுக்கொள்;␢ அதன் ஒளியில் சீர்மையை நோக்கி நட,⁾
3⁽உனது மாட்சியை␢ மற்றவருக்கு விட்டுக்கொடாதே;␢ உன் சிறப்புரிமைகளை வேற்று␢ மக்களினத்தாரிடம் இழந்துவிடாதே.⁾
4⁽இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்;␢ ஏனெனில் கடவுளுக்கு உகந்தது␢ எது என்பதை நாம் அறிவோம்.⁾
5⁽இஸ்ரயேலின் புகழை நிலைநாட்டும்␢ என் மக்களே, வீறுகொள்வீர்.⁾
6⁽நீங்கள் வேற்றினத்தாரிடம்␢ விற்கப்பட்டது உங்கள்␢ அழிவிற்காக அன்று; நீங்கள்␢ கடவுளுக்குச் சினமூட்டியதால்தான்␢ பகைவரிடம்␢ ஒப்படைக்கப்பட்டீர்கள்.⁾
7⁽கடவுளை விடுத்துப் பேய்களுக்குப்␢ பலியிட்டதால் உங்களைப்␢ படைத்தவருக்குச் சினமூட்டினீர்கள்.⁾
8⁽உங்களைப் பேணிக் காத்துவந்த␢ என்றுமுள கடவுளை மறந்தீர்கள்;␢ உங்களை ஊட்டிவளர்த்த␢ எருசலேமை வருத்தினீர்கள்;⁾
9⁽கடவுளின் சினம் உங்கள்மீது␢ வரக்கண்டு எருசலேம் கூறியது:␢ “சீயோன் அண்டை நாட்டவரே,␢ கேளுங்கள்; கடவுள் எனக்குப்␢ பெருந்துயர் அனுப்பியுள்ளார்.⁾
10⁽ஏனெனில் என்றுமுள்ளவர்␢ என் புதல்வர், புதல்வியர் மீது␢ சுமத்திய அடிமைத்தனத்தை␢ நான் கண்டேன்.⁾
11⁽மகிழ்ச்சியோடு நான் அவர்களைப்␢ பேணி வளர்த்தேன்;␢ ஆனால் அழுகையோடும்␢ துயரத்தோடும் அனுப்பி வைத்தேன்.⁾
12⁽நானோ கைம்பெண்;␢ எல்லாராலும் கைவிடப்பட்டவள்.␢ என்பொருட்டு யாரும்␢ மகிழ வேண்டாம்; என் மக்களின்␢ பாவங்களை முன்னிட்டு நான்␢ தனிமையில் விடப்பட்டுள்ளேன்.␢ ஏனெனில் அவர்கள் கடவுளின்␢ சட்டத்தைவிட்டு விலகிச்␢ சென்றார்கள்.⁾
13⁽கடவுளுடைய நெறிமுறைகளை␢ அவர்கள் அறிந்திலர்;␢ அவருடைய கட்டளைகளின்␢ வழியில் சென்றிலர்;␢ நற்பயிற்சியின் நெறியில்␢ அவர்தம் நீதியின்படி நடந்திலர்.⁾
14⁽“சீயோனின் அண்டை␢ நாட்டார் கூடிவரட்டும்;␢ என் புதல்வர், புதல்வியர்மீது␢ என்றுமுள்ளவர் சுமத்திய␢ அடிமைத் தனத்தை␢ எண்ணிப்பார்க்கட்டும்.⁾
15⁽ஏனெனில் அவர்களுக்கு␢ எதிராய்த் தொலையிலிருந்து␢ ஒரு நாட்டையும் வேற்று மொழி␢ பேசும் இரக்கமற்ற மக்களினத்தையும்␢ கடவுள் கொண்டு வந்தார்.␢ அவர்கள் முதியோரை மதிக்கவில்லை.␢ சிறுவர்களுக்கு இரக்கங் காட்டவில்லை.⁾
16⁽கைம்பெண்ணின் அன்பு␢ மைந்தர்களைக் கடத்திச்␢ சென்றார்கள்; புதல்வியரிடமிருந்து␢ அவளைப் பிரித்து, தனிமையில்␢ விட்டுச் சென்றார்கள்.⁾
17⁽“நானோ உங்களுக்கு␢ எவ்வகையில் உதவ இயலும்?⁾
18⁽இக்கேடுகளை உங்களுக்கு␢ வருவித்தவரால்தான் உங்கள்␢ பகைவரிடமிருந்து உங்களை␢ விடுவிக்க இயலும்.⁾
19⁽போங்கள், என் மக்களே,␢ உங்கள் வழியே போங்கள்.␢ நான் கைவிடப்பட்டவள்.⁾
20⁽அமைதிக்குரிய ஆடைகளைக்␢ களைந்துவிட்டேன்;␢ மன்றாட்டுக்குரிய சாக்கு␢ உடை அணிந்துள்ளேன்;␢ என்றுமுள்ளவரை நோக்கி␢ என் வாழ்நாள்␢ முழுவதும் கூக்குரலிடுவேன்.⁾
21⁽“என் பிள்ளைகளே, வீறுகொள்வீர்;␢ கடவுளை நோக்கிக்␢ கூக்குரலிடுவீர். பகைவரின்␢ ஆற்றலினின்றும்␢ கைவன்மையினின்றும் அவர்␢ உங்களை விடுவிப்பார்.⁾
22⁽என்றுமுள்ளவர் உங்களை மீட்பார்␢ எனும் நம்பிக்கை எனக்கு உண்டு.␢ தூயவரிடமிருந்து␢ எனக்கு மகிழ்ச்சி கிடைத்தது;␢ ஏனெனில், என்றுமுள உங்கள்␢ மீட்பர் விரைவில் உங்களுக்கு␢ இரக்கங் காட்டுவார்.⁾
23⁽நான் உங்களைத் துயரத்தோடும்␢ அழுகையோடும் அனுப்பி வைத்தேன்.␢ கடவுளோ முடிவில்லா␢ மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்␢ உங்களை மீண்டும் என்னிடம்␢ அழைத்து வருவார்.⁾
24⁽உங்கள் அடிமைத்தனத்தை␢ இப்பொழுது காண்பதுபோன்று␢ உங்கள் கடவுளிடமிருந்து வரவிருக்கும்␢ மீட்பையும் சீயோனின் அண்டை நாட்டார்␢ விரைவில் காண்பர்.␢ அம்மீட்பு மிகுந்த மாட்சியோடும்␢ என்றுமுள்ளவரின் போரொளியோடும்␢ உங்களை வந்தடையும்.⁾
25⁽என் மக்களே,␢ கடவுளிடமிருந்து உங்கள் மீது␢ வந்துற்ற சினத்தைப் பொறுமையோடு␢ தாங்கிக் கொள்ளுங்கள்.␢ உங்கள் பகைவர் உங்களைத்␢ துன்புறுத்தியுள்ளனர்.␢ ஆனால் அவர்களது அழிவை␢ நீங்கள் விரைவில் காண்பீர்கள்;␢ அவர்களை ஏறி மிதிப்பீர்கள்.⁾
26⁽செல்லமாய் வளர்க்கப்பெற்ற␢ என் மக்கள் கரடு முரடான␢ பாதையில் நடந்தார்கள்; பகைவர்␢ கவர்ந்து செல்லும் ஆட்டு␢ மந்தைபோன்று அவர்கள்␢ கடத்திச்செல்லப்பட்டார்கள்.⁾
27⁽“என் மக்களே, வீறுகொள்வீர்;␢ கடவுளை நோக்கிக் கூக்குரலிடுவீர்.␢ இத்துயரங்களை␢ உங்கள்மீது அனுப்பி வைத்தவர்␢ உங்களை நினைவுகூர்வார்.⁾
28⁽கடவுளைவிட்டு அகன்று␢ செல்வதில் முன்பு நீங்கள்␢ முனைந்து நின்றீர்கள்.␢ அதைவிடப் பன்மடங்கு␢ ஆர்வத்துடன் அவரைத் தேடும்␢ பொருட்டு இப்பொழுது அவரிடம்␢ திரும்பி வாருங்கள்.⁾
29⁽ஏனெனில், இக்கேடுகளை␢ உங்கள் மீது வரச்செய்தவரே␢ உங்களுக்கு முடிவில்லா␢ மகிழ்ச்சியையும் மீட்பையும்␢ அருள்வார்.”⁾
30⁽எருசலேம், வீறுகொள்.␢ இப்பெயரைக் கொடுத்தவரே␢ உனக்கு ஆறுதல் வழங்குவார்.⁾
31⁽உன்னைத் துன்புறுத்தி␢ உன் வீழ்ச்சி கண்டு␢ மகிழ்ந்தோர் இரங்கத்தக்கவர்;⁾
32⁽உன் மக்கள் அடிமைகளாய்␢ இருந்த நகர்களும்␢ இரங்கத்தக்கவை; உன்␢ மைந்தர்களை அடிமைகளாய்␢ ஏற்றுக்கொண்ட␢ நகரும் இரங்குதற்குரியது.⁾
33⁽உன் வீழ்ச்சி கண்டு␢ அது மகிழ்ந்ததுபோல,␢ உன் அழிவு கண்டு இன்புற்றது போல,␢ தன் பாழ்நிலை கண்டு அது␢ பெருந்துயர் அடையும்.⁾
34⁽அதனுடைய மக்கள்திரளில்␢ அது கொண்ட இறுமாப்பை␢ அகற்றிவிடுவேன்; அதன்␢ செருக்கை அழுகையாய்␢ மாற்றி விடுவேன்.⁾
35⁽என்றுமுள்ளவரிடமிருந்து நீண்டநாள்␢ அதன்மேல் நெருப்பு வந்து விழும்;␢ பன்னெடுங் காலம் அது பேய்களின்␢ இருப்பிடமாய் அமையும்.⁾
36⁽எருசலேமே, கீழ்த்திசையை நோக்கு;␢ கடவுளிடமிருந்து உனக்கு␢ வரும் மகிழ்ச்சியைப் பார்.⁾
37⁽உன்னை விட்டுப் பிரிந்துசென்ற␢ உன் மைந்தர்கள் இதோ!␢ திரும்பி வந்து கொண்டிருக்கின்றார்கள்;␢ கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை␢ உள்ள எல்லா நாடுகளிலிருந்தும்␢ தூயவரின் சொல்லால்␢ ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுளின்␢ மாட்சியில் திளைத்த வண்ணம் வந்து␢ கொண்டிருக்கின்றார்கள்.⁾