பாரூக்கு (எரேமியாவின் மடல்) 5

முந்திய அடுத்த
1 2 3 4 5 6
1⁽எருசலேமே, உன் துன்ப துயரத்தின்␢ ஆடைகளைக் களைந்துவிடு;␢ கடவுள் உனக்கு அருளும்␢ மாட்சியின் பேரழகை என்றென்றும்␢ ஆடையாக அணிந்துகொள்.⁾ 2⁽கடவுளிடமிருந்து வரும் நீதியை␢ ஆடையாய்ப் புனைந்து கொள்;␢ என்றுமுள்ளவரின் மாட்சியை␢ மணிமுடியாக உன்␢ தலைமீது சூடிக்கொள்.⁾ 3⁽கடவுள் வானத்தின்கீழ்␢ உள்ள எல்லா நாடுகளுக்கும்␢ உன் பேரொளியைக் காட்டுவார்.⁾ 4⁽‛நீதியில் ஊன்றிய அமைதி’,␢ ‛இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’␢ என்னும் பெயர்களால் கடவுள்␢ உன்னை என்றென்றும் அழைப்பார்.⁾ 5⁽எருசலேமே, எழுந்திரு;␢ உயர்ந்த இடத்தில் எழுந்து நில்.␢ கீழ்த்திசையை நோக்கு;␢ கீழ்த்திசைமுதல் மேற்றிசைவரை␢ உள்ள எல்லா நாடுகளிலிருந்தும்␢ உன் மக்கள் தூயவரின்␢ சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு,␢ கடவுள் தங்களை நினைவு␢ கூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார்.⁾ 6⁽பகைவர்கள் கடத்திச் சென்ற␢ உன் மக்கள் உன்னைவிட்டுப்␢ பிரிந்து சென்ற பொழுது␢ நடந்து சென்றார்கள்;␢ ஆனால் கடவுள் அவர்களை␢ உன்னிடம் திரும்ப அழைத்துவரும்␢ பொழுது அரியணையில்␢ வீற்றிருக்கும் மன்னர்போல்␢ உயர்மிகு மாட்சியுடன்␢ அழைத்துவரப்படுவார்கள்.⁾ 7⁽கடவுளின் மாட்சியில்␢ இஸ்ரயேல் பாதுகாப்புடன்␢ நடந்துவரும் பொருட்டு,␢ உயர் மலைகள் என்றென்றும்␢ உள்ள குன்றுகள் எல்லாம்␢ தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும்␢ இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும்␢ கடவுள் கட்டளையிட்டுள்ளார்.⁾ 8⁽மேலும், காடுகளும் நறுமணம்␢ வீசும் மரங்கள் அனைத்தும்␢ கடவுளின் கட்டளையால்␢ இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன.⁾ 9⁽கடவுள் தம் மாட்சியின்␢ ஒளியில் மகிழ்ச்சியோடும்,␢ தம்மிடமிருந்து வெளிப்படும்␢ இரக்கத்தோடும் நீதியோடும்␢ இஸ்ரயேலை அழைத்து வருவார்.⁾