மார்ச் 2028

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

25 மார்ச், 2028

Annunciation of the Lord Solemnity

அன்றைய திருப்பலி
First Reading

எசாயா 7: 10-14; 8: 10

10ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: 11“உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார். 12அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார். 13அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ? 14ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார். 10⁽ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்;␢ அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்;␢ கூடிப்பேசி முடிவெடுங்கள்;␢ அதுவும் பயனற்றுப் போகும்.␢ ஏனெனில் கடவுள்␢ எங்களோடு இருக்கிறார்.⁾
Responsorial Psalm

திருப்பாடல்கள் 40: 7-8a, 8b-9, 10, 11

7⁽எனவே, ‛இதோ வருகின்றேன்;␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் § எழுதப்பட்டுள்ளது;⁾ 8⁽என் கடவுளே! உமது திருவுளம்␢ நிறைவேற்றுவதில்␢ நான் மகிழ்ச்சி அடைகின்றேன்;␢ உமது திருச்சட்டம் என் உள்ளத்தில்␢ இருக்கின்றது’ என்றேன் நான்.⁾ 9⁽என் நீதியை நீர் நிலைநாட்டிய␢ நற்செய்தியை␢ மாபெரும் சபையில் அறிவித்தேன்;␢ நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை;␢ ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.⁾ 10⁽உமது நீதியை நான்␢ என் உள்ளத்தின் ஆழத்தில்␢ மறைத்து வைக்கவில்லை;␢ உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும்␢ நீர் அருளும் மீட்பைப் பற்றியும்␢ கூறியிருக்கின்றேன்;␢ உம் பேரன்பையும் உண்மையையும்␢ மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.⁾ 11⁽ஆண்டவரே, உமது பேரிரக்கத்தை␢ எனக்குக் காட்ட மறுக்காதேயும்;␢ உமது பேரன்பும் உண்மையும்␢ தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!⁾
Second Reading

எபிரேயர் 10: 4-10

4ஆம், காளைகள், வெள்ளாட்டுக் கடாக்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது.⒫ 5அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ⁽“பலியையும் காணிக்கையையும்␢ நீர் விரும்பவில்லை, ஆனால்␢ ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர்.⁾ 6⁽எரிபலிகளும் பாவம் போக்கும்␢ பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.⁾ 7⁽எனவே நான் கூறியது:␢ என் கடவுளே,␢ உமது திருவுளத்தை நிறைவேற்ற,␢ இதோ வருகின்றேன்.␢ என்னைக் குறித்துத் திருநூல் சுருளில்␢ எழுதப்பட்டுள்ளது”⁾ என்கிறார். 8திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும்,⁽ “நீர் பலிகளையும் காணிக்கைகளையும்␢ எரிபலிகளையும் பாவம்போக்கும்␢ பலிகளையும் விரும்பவில்லை;␢ இவை உமக்கு உகந்தவையல்ல”⁾ என்று அவர் முதலில் கூறுகிறார். 9பின்னர்,⁽“உமது திருவுளத்தை நிறைவேற்ற,␢ இதோ வருகின்றேன்”⁾ என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கிவிடுகிறார். 10இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.⒫
Verse Before the Gospel

யோவான் 1: 14ab

14⁽வாக்கு மனிதர் ஆனார்;␢ நம்மிடையே குடிகொண்டார்.␢ அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.␢ அருளும் உண்மையும்␢ நிறைந்து விளங்கிய அவர்␢ தந்தையின் ஒரே மகன்␢ என்னும் நிலையில்␢ இம்மாட்சியைப் பெற்றிருந்தார்.⁾
Gospel

லூக்கா 1: 26-38

26ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். 27அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. 28வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்”** என்றார். 29இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். 30வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். 31இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். 32அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். 33அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார். 34அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். 35வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால், உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். 36உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். 37ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார். 38பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.