புலம்பல் 4

முந்திய அடுத்த
1 2 3 4 5
1⁽ஐயோ! பொன் இப்படி மங்கிப் போயிற்றே!␢ பசும்பொன் இப்படி மாற்றுக் குறைந்து␢ போயிற்றே!␢ திருத்தலக் கற்கள்␢ தெருமுனை எங்கும்␢ சிதறிக் கிடக்கின்றனவே!⁾ 2⁽பசும்பொன்னுக்கு இணையான␢ சீயோனின் அருமை மைந்தர் இன்று␢ குயவனின் கைவினையாம்␢ மண்பாண்டம் ஆயினரே!⁾ 3⁽குள்ளநரிகளும்␢ பாலூட்டித் தம் குட்டிகளைப்␢ பேணிக்காக்கும்!␢ பாலைநிலத் தீக்கோழியென␢ என் மக்களாம் மகள்␢ கொடியவள் ஆயினளே!⁾ 4⁽பால்குடி மறவாத மழலைகளின் நாவு␢ தாகத்தால்␢ அண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும்!␢ பச்சிளங் குழந்தைகள்␢ கெஞ்சுகின்ற உணவுதனை␢ அளித்திடுவார் யாருமிலர்!⁾ 5⁽சுவையுணவு அருந்தினோர்␢ நடுத்தெருவில் நலிகின்றனர்!␢ பட்டுடுத்தி வளர்ந்தோர்␢ குப்பைமேட்டில் கிடக்கின்றனர்!⁾ 6⁽ஒருவரும் கை வைக்காமல்␢ நொடிப்பொழுதில் வீழ்ச்சியுற்ற␢ சோதோமின் பாவத்தைவிட,␢ என் மக்களாம் மகளின் குற்றம் பெரிதாமே!⁾ 7⁽அவள் இளவரசர்␢ பனியினும் தூயவராய்ப்␢ பாலினும் வெண்மையராய்ப்␢ பவளத்தினும் சிவந்த மேனியராய்␢ நீல மணிக் கட்டழகராய் இருந்தனர்!⁾ 8⁽இப்பொழுதோ, அவர்கள் தோற்றம்␢ கரியினும் கருமை ஆனது;␢ அவர்களைத் தெருக்களில்␢ அடையாளம் காண இயலவில்லை!␢ அவர்கள் தோல்␢ எலும்போடு ஒட்டியிருந்தது.␢ காய்ந்த மரம்போல்␢ அது உலர்ந்து போனது!⁾ 9⁽பசியினால் மாண்டவர்களினும்␢ வாளினால் மாண்டோர்␢ நற்பேறு பெற்றோர்!␢ ஏனெனில், முன்னையோர்␢ வயல் தரும் விளைச்சலின்றிக்␢ குத்துண்டவர் போல் மாய்ந்தனர்!⁾ 10⁽இரங்கும் பெண்டிரின் கைகள்␢ தம் குழந்தைகளை வேகவைத்தன!␢ என் மக்களாகிய மகள்␢ அழிவுற்றபோது␢ பிள்ளைகளே அன்னையர்க்கு␢ உணவாயினர்!⁾ 11⁽ஆண்டவர் தம் சீற்றத்தைத்␢ தீர்த்துக் கொண்டார்;␢ தம் கோபக் கனலைக் கொட்டினார்;␢ சீயோனில் நெருப்பை மூட்டினார்;␢ அது அதன் அடித்தளங்களை␢ விழுங்கிற்று.⁾ 12⁽பகைவரும் எதிரிகளும்␢ எருசலேம் வாயில்களில்␢ நுழைவர் என்று␢ மண்ணுலகின் மன்னரோ␢ பூவுலகில் வாழ்வோரோ␢ நம்பவில்லை.⁾ 13⁽நகரின் நடுவே␢ நீதிமானின் இரத்தம் சிந்திய␢ இறைவாக்கினரின் பாவமும்␢ குருக்களின் குற்றமுமே␢ இதற்குக் காரணமாம்!⁾ 14⁽அவர்கள் குருடரெனத்␢ தெருக்களில் தடுமாறினர்;␢ அவர்கள்மீது இரத்தக் கறை␢ எவ்வளவு படிந்திருந்ததெனில்,␢ அவர்கள் ஆடைகளைக்கூட␢ எவராலும் தொட இயலவில்லை.⁾ 15⁽விலகுங்கள்! தீட்டு! விலகுங்கள்!␢ விலகுங்கள்!தொடாதீர்கள்! என்று␢ அவர்களைப் பார்த்துக் கூவினார்கள்;␢ அவர்கள் அகதிகளாய்␢ அலைந்து திரிந்தார்கள்.␢ ‘இனி நம்மிடம் குடியிரார்,’␢ ‘இனி எம்மிடையே␢ தங்கக்கூடாது’ என்று␢ வேற்றினத்தார் கூறினர்.⁾ 16⁽ஆண்டவரே தம் முன்னிலையினின்று␢ அவர்களைச் சிதறடித்தார்;␢ இனி அவர்களைக்␢ கண்ணோக்கமாட்டார்.␢ குருவை மதிப்பார் இல்லை;␢ முதியோர்க்கு இரங்குவார் இல்லை.⁾ 17⁽உதவியை வீணில் எதிர்பார்த்து␢ எம் கண்கள் பூத்துப்போயின!␢ எம்மை விடுவிக்க இயலாத␢ நாட்டினர்க்காய்க்␢ கண் விழித்துக் காத்திருந்தோம்!⁾ 18⁽எம் நடமாட்டம் கவனிக்கப்பட்டது;␢ எம் தெருக்களில் கூட␢ எம்மால் நடக்க முடியவில்லை;␢ எம் முடிவு நெருங்கிவிட்டது;␢ எம் நாள்கள் முடிந்துவிட்டன;␢ எம் முடிவு வந்து விட்டது.⁾ 19⁽வானத்துப் பருந்துகளிலும் விரைவாய்␢ எம்மைத் துரத்துவோர் வருகின்றனர்;␢ மலைகளில் எங்களைத்␢ துரத்தி வந்தார்கள்;␢ பாலையில் எங்களுக்காய்ப்␢ பதுங்கி இருந்தார்கள்.⁾ 20⁽ஆண்டவரின் திருப்பொழிவு பெற்று␢ எம் உயிர் மூச்சாய்த் திகழ்ந்தவர்,␢ அவர்கள் வெட்டிய குழியில் வீழ்ந்தனர்!␢ ‘அவரது நிழலில்␢ வேற்றினத்தார் நடுவில்␢ நாம் வாழ்வோம்’ என்று␢ அவரைக் குறித்தே எண்ணியிருந்தோம்!⁾ 21⁽ஊசு நாட்டில் வாழும் மகளே!␢ ஏதோம்!␢ அகமகிழ்ந்து அக்களித்திடு!␢ கிண்ணம் உன்னையும் வந்தடையும்!␢ நீ குடிவெறி கொண்டு␢ ஆடையின்றிக் கிடப்பாய்!⁾ 22⁽மகளே! சீயோன்!␢ உன் குற்றப்பழி நீங்கிவிட்டது;␢ உன் அடிமைத்தனம்␢ இனியும் தொடராது;␢ மகளே! ஏதோம்!␢ உன் குற்றத்திற்காக␢ நீ தண்டிக்கப்படுவாய்!␢ உன் பாவங்கள் வெளிப்படுத்தப்படும்!⁾