புலம்பல் 5

முந்திய அடுத்த
1 2 3 4 5
1⁽ஆண்டவரே, எங்களுக்கு நேரிட்டதை␢ நினைந்தருளும்! எங்கள்␢ அவமானத்தைக் கவனித்துப்பாரும்.⁾ 2⁽எங்கள் உரிமைச்சொத்து␢ அன்னியர்கைவசம் ஆயிற்று;␢ வீடுகள் வேற்று நாட்டினர்␢ கைக்கு மாறிற்று.⁾ 3⁽நாங்கள் தந்தையற்ற␢ அனாதைகள் ஆனோம்!␢ எங்கள் அன்னையர்␢ கைம்பெண்டிர் ஆயினர்!⁾ 4⁽நாங்கள் தண்ணீரை␢ விலைக்கு வாங்கிக் குடிக்கிறோம்!␢ விறகையும்␢ பணம் கொடுத்தே வாங்குகிறோம்!⁾ 5⁽கழுத்தில் நுகத்தோடு␢ விரட்டப்படுகிறோம்!␢ சோர்ந்துபோனோம்!␢ எங்களுக்கு ஓய்வே இல்லை!⁾ 6⁽உணவால் நிறைவு பெற,␢ எம் கையை␢ எகிப்தியர், அசீரியரிடம் நீட்டினோம்!⁾ 7⁽பாவம் செய்த எம் தந்தையர்␢ மடிந்து போயினர்!␢ நாங்களோ அவர்கள் குற்றப்பழியைச்␢ சுமக்கின்றோம்!⁾ 8⁽அடிமைகள் எங்களை␢ ஆளுகின்றார்கள்!␢ எங்களை அவர்கள் கையினின்று␢ விடுவிப்பர் எவரும் இல்லை!⁾ 9⁽பாலைநில வாளை முன்னிட்டு,␢ உயிரைப் பணயம் வைத்து␢ எங்கள் உணவைப் பெறுகிறோம்!⁾ 10⁽பஞ்சத்தின் கொடுந்தணலால்␢ எங்கள் மேனி␢ அடுப்பெனக் கனன்றது!⁾ 11⁽சீயோன் மங்கையர்␢ கெடுக்கப்பட்டனர்!␢ நகர்களின் கன்னியர்␢ கற்பழிக்கப்பட்டனர்!⁾ 12⁽தலைவர்கள் பகைவர் கையால்␢ தூக்கிலிடப்பட்டனர்!␢ முதியோர்களையும்␢ அவர்கள் மதிக்கவில்லை!⁾ 13⁽இளைஞர்கள்␢ இயந்திரக் கல்லை␢ இழுக்கின்றனர்!␢ சிறுவர் விறகு சுமந்து␢ தள்ளாடுகின்றனர்!⁾ 14⁽முதியோர் நுழைவாயிலில்␢ அமர்வதைக் கைவிட்டனர்!␢ இளையோர்␢ இசை மீட்டலைத் துறந்துவிட்டனர்!⁾ 15⁽எங்கள் இதயத்தின்␢ மகிழ்ச்சி ஒழிந்தது!␢ எங்கள் நடனம்␢ புலம்பலாக மாறியது!⁾ 16⁽எங்கள் தலையினின்று␢ மணிமுடி வீழ்ந்தது!␢ நாங்கள் பாவம் செய்தோம்!␢ எங்களுக்கு ஐயோ கேடு!⁾ 17⁽இதனால் எங்கள் இதயம்␢ தளர்ந்து போயிற்று;␢ எங்கள் கண்கள்␢ இருண்டுபோயின.⁾ 18⁽சீயோன் மலை␢ பாழடைந்து கிடக்கின்றது;␢ நரிகள் அங்கே நடமாடுகின்றன.⁾ 19⁽நீரோ ஆண்டவரே,␢ என்றென்றும் வாழ்கின்றீர்!␢ உமது அரியணை␢ தலைமுறை தலைமுறையாய்␢ உளதாமே!⁾ 20⁽ஆண்டவரே!␢ தொடர்ந்து எங்களை␢ கைவிட்டது ஏன்?␢ இத்துணைக் காலமாய்␢ எங்களைக் மறந்தது ஏன்?⁾ 21⁽ஆண்டவரே!␢ எம்மை உம்பால்␢ திருப்பியருளும்!␢ நாங்களும் உம்மிடம்␢ திரும்புவோம்!␢ முற்காலத்தே இருந்ததுபோல!␢ எம் நாள்களைப் புதுப்பித்தருளும்!⁾ 22⁽எங்களை முற்றிலும்␢ தள்ளிவிட்டீரோ!␢ எங்கள் மேல்␢ இத்துணை வெஞ்சினம் கொண்டீரே!⁾