1⁽ஞானமுள்ள பெண்கள் தம் இல் லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்; அறிவற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர் .⁾
2⁽நேர்மையாக நடப்பவஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.⁾
3⁽மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்; ஞானமுள்ளவருடைய சொற் களோ அவரைப் பாதுகாக்கும்.⁾
4⁽உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.⁾
5⁽வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.⁾
6⁽ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடையான்; விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.⁾
7⁽மூடனைவிட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?⁾
8⁽விவேகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.⁾
9⁽பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்; மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்; நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.⁾
10⁽ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.⁾
11⁽பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.⁾
12⁽ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.⁾
13⁽நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.⁾
14⁽உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல் களின் பயனை அடைவார்.⁾
15⁽பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.⁾
16⁽ஞானமுள்ளவர் விழிப்புடைவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேடரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.⁾
17⁽எளிதில் சினங்கொள்பவர் மதிகேடா னதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமை யோடிருப்பார்.⁾
18⁽பேதையர் அறியாமையுடையோர்; விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.⁾
19⁽தீயவர் நல்லார்முன் பணிவர்; பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.⁾
20⁽ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்; செல்வ ருக்கோ நண்பர் பலர் இருப்பர்.⁾
21⁽அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.⁾
22⁽தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.⁾
23⁽கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.⁾
24⁽ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; மதிகேடருக்கு அவர்களது மடமை தான் பூமாலை.⁾
25⁽உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.⁾
26⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமா யிருப்பார்.⁾
27⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ் வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.⁾
28⁽மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும் உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.⁾
29⁽பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.⁾
30⁽மன அமைதி உடல் நலம் தரும்; சின வெறியோ எலும்புருக்கியாகும்.⁾
31⁽ஏழையை ஒடுக்குகிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.⁾
32⁽பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சி யுறுவார்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும் போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.⁾
33⁽விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமே யில்லை.⁾
34⁽நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.⁾
35⁽கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.⁾