ஏப்ரல் 2026

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

30 ஏப்ரல், 2026

Thursday of the Fourth Week of Easter

அன்றைய திருப்பலி
Reading I

திருத்தூதர் பணிகள் 13:13-25

13பின்பு, பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் அவர்களை விட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார். 14அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள். 15திருச்சட்டமும் இறைவாக்கினர் நூல்களும் வாசித்து முடிந்தபின் தொழுகைக் கூடத் தலைவர்கள் அவர்களிடம் ஆளனுப்பி, “சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்” என்று கேட்டுக்கொண்டார்கள். 16அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, கடவுளுக்கு அஞ்சுவோரே, கேளுங்கள். 17இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்; அவர்கள் எகிப்து நாட்டில் அந்நியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார். பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியே அழைத்துக்கொண்டுவந்தார்; 18நாற்பது ஆண்டு காலமாய்ப் பாலை நிலத்தில் அவர்களிடம் மிகுந்த பொறுமை காட்டினார். 19❮19-20❯அவர் கானான் நாட்டின்மீது ஏழு மக்களினங்களை அழித்து அவர்கள் நாட்டை இவர்களுக்கு ஏறக்குறைய நானூற்றைம்பது ஆண்டுகள் உரிமைச் சொத்தாக அளித்தார்; அதன் பின்பு இறைவாக்கினர் சாமுவேலின் காலம்வரை அவர்களுக்கு நீதித் தலைவர்களை அளித்தார். 20Same as above 21பின்பு அவர்கள் தங்களுக்கு ஓர் அரசர் வேண்டும் என்று கேட்டார்கள். கடவுள் கீசு என்பவரின் மகனான சவுல் என்பவரை அவர்களுக்கு அரசராகக் கொடுத்தார். பென்யமின் குலத்தினராகிய அவர் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். 22பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்; அவரைக் குறித்து ⁽“ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்; என் விருப்பம் அனைத்தையும் அவன் நிறைவேற்றுவான்”⁾ என்று சான்று பகர்ந்தார். 23தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர் தோன்றச் செய்தார். 24அவருடைய வருகைக்கு முன்பே யோவான், “மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்” என்று இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். 25யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தை முடிக்கும் தறுவாயில் “நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான். இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார்; அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லை” என்று கூறினார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 89:2-3, 21-22, 25 and 27

2⁽உமது பேரன்பு␢ என்றென்றும் நிலைத்துள்ளது என்று␢ அறிவிப்பேன்;␢ உமது உண்மை வானைப்போல்␢ உறுதியானது.⁾ 3⁽நீர் உரைத்தது:␢ ‛நான் தேர்ந்துகொண்டவனோடு␢ உடன்படிக்கை செய்துகொண்டேன்;␢ என் ஊழியன் தாவீதுக்கு␢ ஆணையிட்டு நான் கூறியது:⁾ 21⁽என் கை எப்பொழுதும்␢ அவனோடு இருக்கும்;␢ என் புயம் உண்மையாகவே␢ அவனை வலிமைப்படுத்தும்.⁾ 22⁽எதிரி எவனாலும்␢ அவனை வஞ்சிக்க முடியாது;␢ தீயவன் எவனாலும்␢ அவனை ஒடுக்க இயலாது.⁾ 25⁽அவன் கையைக் கடல்வரைக்கும்␢ அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும்␢ எட்டச் செய்வேன்.⁾ 27⁽நான் அவனை␢ என் தலைப்பேறு ஆக்குவேன்;␢ மண்ணகத்தின் மாபெரும்␢ மன்னன் ஆக்குவேன்.⁾
Alleluia

திருவெளிப்பாடு 1:5

5Same as above
Gospel

யோவான் 13:16-20

16பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப்பட்டவரும் அவரை அனுப்பியவரை விடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 17இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள். 18உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்துகொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், ⁽‘என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்’⁾ என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும். 19அது நிறைவேறும்போது, ‘இருக்கிறவர் நானே’ என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். 20நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”