வாசகங்கள்
2 ஏப்ரல், 2026
Holy Thursday - Chrism Mass (Chrism Mass)
Chrism Mass
Reading I
எசாயா 61:1-3, 6, 8-9
1⁽ஆண்டவராகிய என் தலைவரின்␢ ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள் பொழிவு செய்துள்ளார்;␢ ஒடுக்கப்பட்டோருக்கு␢ நற்செய்தியை அறிவிக்கவும்,␢ உள்ளம் உடைந்தோரைக்␢ குணப்படுத்தவும்,␢ சிறைப்பட்டோருக்கு␢ விடுதலையைப் பறைசாற்றவும்,␢ கட்டுண்டோருக்கு␢ விடிவைத் தெரிவிக்கவும்␢ என்னை அனுப்பியுள்ளார்.⁾
2⁽ஆண்டவர் அருள்தரும்␢ ஆண்டினை முழங்கவும்,␢ நம் கடவுள் அநீதிக்குப்␢ பழிவாங்கும் நாளை அறிவிக்கவும்,␢ துயருற்று அழுவோர்க்கு␢ ஆறுதல் அளிக்கவும்,⁾
3⁽சீயோனில் அழுவோர்க்கு␢ ஆவன செய்யவும்,␢ சாம்பலுக்குப் பதிலாக␢ அழகுமாலை அணிவிக்கவும்,␢ புலம்பலுக்குப் பதிலாக␢ மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும்,␢ நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப்␢ ‘புகழ்’ என்னும் ஆடையைக் கொடுக்கவும்␢ என்னை அனுப்பியுள்ளார்.␢ ‘நேர்மையின் தேவதாருகள்’ என்றும்␢ ‘தாம் மாட்சியுறுமாறு␢ ஆண்டவர் நட்டவை’ என்றும்␢ அவர்கள் பெயர் பெறுவர்.⁾
6⁽நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று␢ அழைக்கப்படுவீர்கள்;␢ நம் கடவுளின் திருப்பணியாளர் என்று␢ பெயர் பெறுவீர்கள்;␢ பிறஇனத்தாரின் செல்வத்தைக் கொண்டு␢ நீங்கள் உண்பீர்கள்;␢ அவர்களின் சொத்தில்␢ நீங்கள் பெருமை பாராட்டுவீர்கள்.⁾
8⁽ஆண்டவராகிய நான்␢ நீதியை விரும்புகின்றேன்;␢ கொள்ளையையும் குற்றத்தையும்␢ வெறுக்கின்றேன்;␢ அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை␢ உண்மையாகவே வழங்குவேன்;␢ அவர்களுடன் முடிவில்லா␢ உடன்படிக்கை செய்து கொள்வேன்;⁾
9⁽அவர்கள் வழிமரபினர்␢ பிறஇனத்தாரிடையேயும்,␢ அவர்கள் வழித்தோன்றல்கள்␢ மக்களினங்கள் நடுவிலும்␢ புகழ் அடைவார்கள்;␢ அவர்களைக் காண்பவர் யாவரும்␢ அவர்களை ஆண்டவரின்␢ ஆசிபெற்ற வழிமரபினர் என␢ ஏற்றுக்கொள்வார்கள்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 89:21-22, 25 and 27
21⁽என் கை எப்பொழுதும்␢ அவனோடு இருக்கும்;␢ என் புயம் உண்மையாகவே␢ அவனை வலிமைப்படுத்தும்.⁾
22⁽எதிரி எவனாலும்␢ அவனை வஞ்சிக்க முடியாது;␢ தீயவன் எவனாலும்␢ அவனை ஒடுக்க இயலாது.⁾
25⁽அவன் கையைக் கடல்வரைக்கும்␢ அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும்␢ எட்டச் செய்வேன்.⁾
27⁽நான் அவனை␢ என் தலைப்பேறு ஆக்குவேன்;␢ மண்ணகத்தின் மாபெரும்␢ மன்னன் ஆக்குவேன்.⁾
Reading II
திருவெளிப்பாடு 1:5-8
5Same as above
6ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.
7⁽இதோ! அவர்␢ மேகங்கள் சூழ வருகின்றார்.␢ அனைவரும் அவரைக் காண்பர்;␢ அவரை ஊடுருவக்␢ குத்தியோரும் காண்பர்;␢ அவர்பொருட்டு␢ மண்ணுலகின் குலத்தார் அனைவரும்␢ மாரடித்துப் புலம்புவர்.␢ இது உண்மை, ஆமென்!⁾⒫
8“அகரமும் னகரமும் நானே”* என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.
Verse Before the Gospel
எசாயா 61:1
1⁽ஆண்டவராகிய என் தலைவரின்␢ ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள் பொழிவு செய்துள்ளார்;␢ ஒடுக்கப்பட்டோருக்கு␢ நற்செய்தியை அறிவிக்கவும்,␢ உள்ளம் உடைந்தோரைக்␢ குணப்படுத்தவும்,␢ சிறைப்பட்டோருக்கு␢ விடுதலையைப் பறைசாற்றவும்,␢ கட்டுண்டோருக்கு␢ விடிவைத் தெரிவிக்கவும்␢ என்னை அனுப்பியுள்ளார்.⁾
Gospel
லூக்கா 4:16-21
16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார்.
17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
18⁽“ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ அருள்பொழிவு செய்துள்ளார்.␢ ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்␢ சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்,␢ பார்வையற்றோர் பார்வைபெறுவர் என␢ முழக்கமிடவும்␢ ஒடுக்கப்பட்டோரை␢ விடுதலை செய்து அனுப்பவும்⁾
19⁽ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை␢ முழக்கமிட்டு அறிவிக்கவும்␢ அவர் என்னை அனுப்பியுள்ளார்.”⁾⒫
20பின்னர், அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன.
21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.
Evening Mass of the Lord's Supper
Reading I
விடுதலைப் பயணம் 12:1-8, 11-14
1எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்:
2உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே!
3இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.
4ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.
5ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம்.
6இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும்.
7இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.
8இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
11நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா’.
12ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்!
13இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.
14இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
Responsorial Psalm
திருப்பாடல்கள் 116:12-13, 15-16, 17-18.
12⁽ஆண்டவர் எனக்குச் செய்த␢ எல்லா நன்மைகளுக்காகவும்␢ நான் அவருக்கு␢ என்ன கைம்மாறு செய்வேன்?⁾
13⁽மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து,␢ ஆண்டவரது பெயரைத் தொழுவேன்.⁾
15⁽ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு␢ அவரது பார்வையில்␢ மிக மதிப்புக்குரியது.⁾
16⁽ஆண்டவரே! நான் உண்மையாகவே␢ உம் ஊழியன்; நான் உம் பணியாள்;␢ உம் அடியாளின் மகன்;␢ என் கட்டுகளை நீர் அவிழ்த்துவிட்டீர்.⁾
17⁽நான் உமக்கு␢ நன்றிப் பலி செலுத்துவேன்;␢ ஆண்டவராகிய உம் பெயரைத்␢ தொழுவேன்;⁾
18⁽இப்பொழுதே உம் மக்கள்␢ அனைவரின் முன்னிலையில்␢ ஆண்டவரே! உமக்கு என்␢ பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்;⁾
Reading II
1 கொரிந்தியர் 11:23-26
23ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து,
24கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார்.
25அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.⒫
26ஆதலால், நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
Verse Before the Gospel
யோவான் 13:34
34‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்.
Gospel
யோவான் 13:1-15
1பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
2இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில்,
3தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்,
4இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார்.
5பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
6சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார்.
7இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்து கொள்வாய்” என்றார்.
8பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார்.
9அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார்.
10இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும், அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார்.
11தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் “உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார்.⒫
12அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?
13நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.
14ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
15நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.