ஏப்ரல் 2026

ஞா தி செ பு வி வெ
1234
567891011
12131415161718
19202122232425
2627282930
இன்றுக்கு

வாசகங்கள்

16 ஏப்ரல், 2026

Thursday of the Second Week of Easter

அன்றைய திருப்பலி
Reading I

திருத்தூதர் பணிகள் 5:27-33

27அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28“நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும், இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!” என்றார். 29அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31இஸ்ரயேல் மக்களுக்கு மன மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்” என்றனர். 33இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 34:2 and 9, 17-18, 19-20

2⁽நான் ஆண்டவரைப் பற்றிப்␢ பெருமையாகப் பேசுவேன்;␢ எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.⁾ 9⁽ஆண்டவரின் தூயோரே,␢ அவருக்கு அஞ்சுங்கள்;␢ அவருக்கு அஞ்சுவோர்க்கு␢ எக்குறையும் இராது.⁾ 17⁽நீதிமான்கள் மன்றாடும்போது,␢ ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;␢ அவர்களை அனைத்து␢ இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.⁾ 18⁽உடைந்த உள்ளத்தார்க்கு அருகில்␢ ஆண்டவர் இருக்கின்றார்;␢ நைந்த நெஞ்சத்தாரை␢ அவர் காப்பாற்றுகின்றார்.⁾ 19⁽நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல;␢ அவை அனைத்தினின்றும்␢ ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.⁾ 20⁽அவர்களின் எலும்புகளை எல்லாம்␢ அவர் பாதுகாக்கின்றார்;␢ அவற்றுள் ஒன்றும் முறிபடாது.⁾
Alleluia

யோவான் 20:29

29இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
Gospel

யோவான் 3:31-36

31மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர். 32தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை. 33அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார். 34கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார். 35தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார். 36மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்