வாசகங்கள்
1 ஏப்ரல், 2026
Wednesday of Holy Week
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 50:4-9
4⁽நலிந்தவனை நல்வாக்கால்␢ ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட,␢ ஆண்டவராகிய என் தலைவர்,␢ கற்றோனின் நாவை␢ எனக்கு அளித்துள்ளார்;␢ காலைதோறும் அவர் என்னைத்␢ தட்டி எழுப்புகின்றார்;␢ கற்போர் கேட்பது போல்␢ நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்.⁾
5⁽ஆண்டவராகிய என் தலைவர்␢ என் செவியைத் திறந்துள்ளார்;␢ நான் கிளர்ந்தெழவில்லை;␢ விலகிச் செல்லவுமில்லை.⁾
6⁽அடிப்போர்க்கு என் முதுகையும்,␢ தாடியைப் பிடுங்குவோர்க்கு␢ என் தாடையையும் ஒப்புவித்தேன்.␢ நிந்தனை செய்வோர்க்கும்␢ காறி உமிழ்வோர்க்கும்␢ என் முகத்தை மறைக்கவில்லை.⁾
7⁽ஆண்டவராகிய என் தலைவர்␢ துணை நிற்கின்றார்;␢ நான் அவமானம் அடையேன்;␢ என் முகத்தைக் கற்பாறை␢ ஆக்கிக் கொண்டேன்;␢ இழிநிலையை நான் அடைவதில்லை␢ என்றறிவேன்.⁾
8⁽நான் குற்றமற்றவன் என எனக்குத்␢ தீர்ப்பு வழங்குபவர் அருகில் உள்ளார்;␢ என்னோடு வழக்காடுபவன் எவன்?␢ நாம் இருவரும் எதிர் எதிரே நிற்போம்;␢ என்மீது குற்றஞ்சாட்டுபவன் எவன்?␢ அவன் என்னை நெருங்கட்டும்.⁾
9⁽இதோ, ஆண்டவராகிய என் தலைவர்␢ எனக்குத் துணைநிற்கின்றார்;␢ நான் குற்றவாளி எனத் தீர்ப்பிட␢ யாரால் இயலும்?␢ அவர்கள் அனைவரும் துணியைப் போல்␢ இற்றுப்போவார்கள்;␢ புழுக்கள் அவர்களை அரித்துவிடும்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 69:8-10, 21-22, 31 and 33-34
8⁽என் சகோதரருக்கு␢ வேற்று மனிதனானேன்;␢ என் தாயின் பிள்ளைகளுக்கு␢ அயலான் ஆனேன்.⁾
9⁽உமது இல்லத்தின்மீது␢ எனக்குண்டான ஆர்வம்␢ என்னை எரித்துவிட்டது;␢ உம்மைப் பழித்துப் பேசினவர்களின்␢ பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.⁾
10⁽நோன்பிருந்து நான்␢ நெக்குருகி அழுதேன்;␢ அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.⁾
21⁽அவர்கள் என் உணவில்␢ நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்;␢ என் தாகத்துக்குக் காடியைக்␢ குடிக்கக் கொடுத்தார்கள்.⁾
22⁽அவர்களுடைய விருந்துகளே␢ அவர்களுக்குக் கண்ணியாகட்டும்!␢ அவர்களுடைய படையல் விருந்துகளே␢ அவர்களுக்குப் பொறியாகட்டும்!⁾
31⁽காளையை விட␢ இதுவே ஆண்டவருக்கு உகந்தது;␢ கொம்பும் விரிகுளம்பும்␢ உள்ள எருதைவிட␢ இதுவே அவருக்கு உகந்தது.⁾
33⁽ஆண்டவர்␢ ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்␢ செவிசாய்க்கின்றார்;␢ சிறைப்பட்ட தம் மக்களை␢ அவர் புறக்கணிப்பதில்லை.⁾
34⁽வானமும் வையமும் கடல்களும்␢ அவற்றில் வாழும் யாவும்␢ அவரைப் புகழட்டும்.⁾
Verse Before the Gospel
:-
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மத்தேயு 26:14-25
14பின்னர், பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து,
15“இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள்.
16அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
17புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
18இயேசு அவர்களிடம், “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார்.
19இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
20மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார்.
21அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
22அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், “ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.
23அதற்கு அவர், “என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.
24மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்” என்றார்.
25அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் “ரபி, நானோ?” என அவரிடம் கேட்க இயேசு, “நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.