மே 2026

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

1 மே, 2026

Friday of the Fourth Week of Easter

அன்றைய திருப்பலி
Reading I

திருத்தூதர் பணிகள் 13:26-33

26சகோதரரே, ஆபிரகாமின் வழிவந்த மக்களே, இங்கு இருப்போருள் கடவுளுக்கு அஞ்சி நடப்போரே, இந்த மீட்புச் செய்தி நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது. 27எருசலேமில் குடியிருக்கும் மக்களும் அவர்களுடைய தலைவர்களும் அம்மீட்பரை அறியவில்லை; ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைப் புரிந்து கொள்ளவில்லை; ஆயினும் அவருக்கு அவர்கள் தீர்ப்பளித்தபோது அவ்வார்த்தைகள் நிறைவேறின. 28சாவுக்குரிய காரணம் எதுவும் அவரிடம் இல்லாதிருந்தும், அவரைக் கொல்ல அவர்கள் பிலாத்திடம் கேட்டார்கள். 29மறைநூலில் அவரைப்பற்றி எழுதியுள்ள அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தார்கள். பின்பு அவரைச் சிலுவையிலிருந்து இறக்கிக் கல்லறையில் வைத்தார்கள். 30ஆனால், இறந்த அவரைக் கடவுள் உயிரோடு எழுப்பினார். 31அவர் கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வந்தவர்களுக்குப் பல நாள்கள்தோன்றினார். அவர்கள் இப்போது அவர்தம் சாட்சிகளாக மக்கள் முன் விளங்குகின்றார்கள். 32இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்ததன் வழியாக மூதாதையருக்கு அளித்த வாக்குறுதியை அவர்கள் பிள்ளைகளாகிய நமக்கென நிறைவேற்றினார். இதுவே நாங்கள் உங்களுக்கு அறிவிக்கும் நற்செய்தி. 33இதுபற்றி இரண்டாம் திருப்பாடலில், ⁽“நீரே என் மகன், இன்று§ நான் உம்மை ஈன்றெடுத்தேன்”⁾ என்று எழுதப்பட்டுள்ளது.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 2:6-7, 8-9, 10-11

6⁽‛என் திருமலையாகிய சீயோனில்␢ நானே என் அரசரைத்␢ திருநிலைப்படுத்தினேன்.’⁾ 7⁽ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை␢ நான் அறிவிக்கின்றேன்;␢ ‛நீர் என் மைந்தர்; இன்று நான்␢ உம்மைப் பெற்றெடுத்தேன்.⁾ 8⁽நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;␢ பிற நாடுகளை உமக்கு␢ உரிமைச் சொத்தாக்குவேன்;␢ பூவுலகை அதன் கடையெல்லைவரை␢ உமக்கு உடைமையாக்குவேன்.⁾ 9⁽இருப்புக் கோலால்␢ நீர் அவர்களைத் தாக்குவீர்;␢ குயவன் கலத்தைப்போல␢ அவர்களை நொறுக்குவீர்.’⁾ 10⁽ஆகவே, மன்னர்களே,␢ விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;␢ பூவுலகை ஆள்வோரே,␢ எச்சரிக்கையாயிருங்கள்.⁾ 11⁽அச்சத்தோடு ஆண்டவரை␢ வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!␢ அவர்முன் அகமகிழுங்கள்!⁾
Alleluia

யோவான் 14:6

6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫
Gospel

யோவான் 14:1-6

1மீண்டும் இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். 2தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? 3நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 4நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்” என்றார். 5தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்றார். 6இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானே.* என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.⒫