வாசகங்கள்
25 ஏப்ரல், 2026
Feast of Saint Mark, evangelist
அன்றைய திருப்பலி
Reading I
1 பேதுரு 5:5-14
5இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள். ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள். ஏனெனில்,⁽ “செருக்குற்றோரைக் கடவுள்␢ இகழ்ச்சியுடன் நோக்குவார்;␢ தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ␢ கருணை காட்டுவார்.”⁾
6ஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.
7உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.⒫
8அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.
9அசையாத நம்பிக்கை கொண்டவர்களாய் அதனை எதிர்த்து நில்லுங்கள். உலகெங்கிலுமுள்ள உங்கள் சகோதரர் சகோதரிகள் உங்களைப் போலவே துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அல்லவா?
10எல்லா அருளும் நிறைந்த கடவுள், இயேசு கிறிஸ்துவுக்குள் என்றும் நிலைக்கும் தம் மாட்சியில் பங்குகொள்ள உங்களை அழைத்திருக்கிறார். சிறிது காலத் துன்பங்களுக்குப்பின் அவர் உங்களைப் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி நிலைநிறுத்துவார்.
11அவரது வல்லமை என்றென்றைக்கும் உள்ளது. ஆமென்.
12நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் சில்வான் வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன். உங்களை ஊக்குவிக்கவும் கடவுளுடைய மெய்யான அருளைப் பற்றிச் சான்று பகரவுமே எழுதினேன். இந்த அருளில் நிலைத்திருங்கள்.
13உங்களைப் போலவே தேர்ந்துகொள்ளப்பட்ட பாபிலோன் சபையாரும், என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்.
14அன்பு முத்தம் கொடுத்து நீங்கள் ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழும் உங்கள் அனைவருக்கும் அமைதி உரித்தாகுக!
Responsorial Psalm
திருப்பாடல்கள் 89:2-3, 6-7, 16-17
2⁽உமது பேரன்பு␢ என்றென்றும் நிலைத்துள்ளது என்று␢ அறிவிப்பேன்;␢ உமது உண்மை வானைப்போல்␢ உறுதியானது.⁾
3⁽நீர் உரைத்தது:␢ ‛நான் தேர்ந்துகொண்டவனோடு␢ உடன்படிக்கை செய்துகொண்டேன்;␢ என் ஊழியன் தாவீதுக்கு␢ ஆணையிட்டு நான் கூறியது:⁾
6⁽வான்வெளியில்␢ ஆண்டவருக்கு நிகரானவர் யார்?␢ தெய்வ மைந்தர் குழுவில்␢ ஆண்டவருக்கு இணையானவர் யார்?⁾
7⁽தூயவர் குழுவில்␢ அவர் அஞ்சுதற்குரிய இறைவன்;␢ அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும்␢ மேலாக அஞ்சுதற்கு உரியவர்.⁾
16⁽அவர்கள் நாள்முழுவதும்␢ உம் பெயரில் களிகூர்வார்கள்;␢ உமது நீதியால்␢ அவர்கள் மேன்மை அடைவார்கள்.⁾
17⁽ஏனெனில், நீரே அவர்களது␢ ஆற்றலின் மேன்மை;␢ உமது தயவால் எங்கள் வலிமை␢ உயர்த்தப்பட்டுள்ளது.⁾
Alleluia
1 கொரிந்தியர் 1:23-24
23ஆனால், நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக்கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது.
24ஆனால், அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும் அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார்.
Gospel
மாற்கு 16:15-20
15இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
16நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.
17நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;
18பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.
19இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.
20அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.]*