வாசகங்கள்
2 ஏப்ரல், 2028
Fifth Sunday of Lent.
Lenten
First Reading
எசாயா 43: 16-21
16⁽கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும்,␢ பொங்கியெழும் நீர்நடுவே␢ பாதை அமைத்தவரும்,⁾
17⁽தேர்களையும், குதிரைகளையும்,␢ படைவீரரையும், வலிமைமிக்கோரையும்␢ ஒன்றாகக் கூட்டி வந்தவரும்,␢ அவர்கள் எழாதவாறு விழச்செய்து,␢ திரிகளை அணைப்பதுபோல்␢ அவர்களை அழித்தவருமாகிய␢ ஆண்டவர் கூறுவது இதுவே.⁾
18⁽முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்;␢ முற்கால நிகழ்ச்சிபற்றிச்␢ சிந்திக்காதிருங்கள்;⁾
19⁽இதோ புதுச்செயல் ஒன்றை␢ நான் செய்கிறேன்;␢ இப்பொழுதே அது தோன்றிவிட்டது;␢ நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா?␢ பாலைநிலத்தில் நான்␢ பாதை ஒன்று அமைப்பேன்;␢ பாழ்வெளியில் நீரோடைகளைத்␢ தோன்றச் செய்வேன்.⁾
20⁽காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்;␢ குள்ள நரிகளும், தீக்கோழிகளும்␢ என்னைப் பெருமைப்படுத்தும்;␢ ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட␢ என் மக்களுக்குப் பாலைநிலத்தில்␢ குடிக்கக் கொடுப்பேன்;␢ பாழ்நிலத்தில்␢ நீரோடைகள் தோன்றச் செய்வேன்.⁾
21⁽எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள்␢ என் புகழை எடுத்துரைப்பர்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 126: 1-2ab, 2cd-3, 4-5, 6
1⁽சீயோனின் அடிமை நிலையை § ஆண்டவர் மாற்றினபோது,␢ நாம் ஏதோ கனவு § கண்டவர் போல இருந்தோம்.⁾
2⁽அப்பொழுது, நமது முகத்தில்␢ மகிழ்ச்சி காணப்பட்டது.␢ நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;␢ ‟ஆண்டவர் அவர்களுக்கு␢ மாபெரும் செயல் புரிந்தார்” என்று␢ பிற இனத்தார் தங்களுக்குள்␢ பேசிக்கொண்டனர்.⁾
3⁽ஆண்டவர் நமக்கு␢ மாபெரும் செயல் புரிந்துள்ளார்;␢ அதனால் நாம்␢ பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.⁾
4⁽ஆண்டவரே!␢ தென்னாட்டின் வறண்ட ஓடையை␢ நீரோடையாக␢ வான்மழை மாற்றுவதுபோல,␢ எங்கள் அடிமை நிலையை␢ மாற்றியருளும்.⁾
5⁽கண்ணீரோடு விதைப்பவர்கள்␢ அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.⁾
6⁽விதை எடுத்துச் செல்லும்போது –␢ செல்லும்போது – அழுகையோடு␢ செல்கின்றார்கள்;␢ அரிகளைச் சுமந்து வரும்போது –␢ வரும்போது – ␢ அக்களிப்போடு வருவார்கள்.⁾
Second Reading
பிலிப்பியர் 3: 8-14
8உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்.
9கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
10கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன்.
11அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும்.
12நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன்.
13அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு,
14பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.⒫
Verse Before the Gospel
யோவேல் 2: 13
13⁽“நீங்கள் உங்கள் உடைகளைக்␢ கிழித்துக்கொள்ள வேண்டாம்,␢ இதயத்தைக் கிழித்துக்கொண்டு␢ உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம்␢ திரும்பி வாருங்கள்.”␢ அவர் அருள் நிறைந்தவர்,␢ இரக்கம் மிக்கவர்;␢ நீடிய பொறுமையுள்ளவர்,␢ பேரன்பு மிக்கவர்;␢ செய்யக் கருதிய தீங்கைக் குறித்து␢ மனம் மாறுகின்றவர்.⁾
Gospel
யோவான் 8: 1-11
1[இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார்.
2பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
3மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி,
4“போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள்.
5இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்டனர்.
6அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
7ஆனால், அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, “உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்” என்று அவர்களிடம் கூறினார்.
8மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார்.⒫
9அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்.
10இயேசு நிமிர்ந்து பார்த்து, “அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?” என்று கேட்டார்.
11அவர், “இல்லை, ஐயா” என்றார். இயேசு அவரிடம் “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்” என்றார்.]⒫
Scrutiny
First Reading
எசேக்கியேல் 37: 12-14
12எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன்.
13அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.
14என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 130: 1-2, 3-4, 5-6, 7-8
1⁽ஆண்டவரே! ஆழ்ந்த␢ துயரத்தில் இருக்கும் நான்␢ உம்மை நோக்கி␢ மன்றாடுகிறேன்;⁾
2⁽ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்␢ செவிசாய்த்தருளும்;␢ என் விண்ணப்பக் குரலை␢ உம்முடைய செவிகள்␢ கவனத்துடன் கேட்கட்டும்.⁾
3⁽ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை␢ மனத்தில் கொண்டிருந்தால்,␢ யார்தான் நிலைத்து நிற்க முடியும்?⁾
4⁽நீரோ மன்னிப்பு அளிப்பவர்;␢ மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.⁾
5⁽ஆண்டவருக்காக ஆவலுடன் நான்␢ காத்திருக்கின்றேன்;␢ என் நெஞ்சம் காத்திருக்கின்றது;␢ அவரது சொற்களுக்காக␢ ஆவலுடன் காத்திருக்கின்றேன்.⁾
6⁽விடியலுக்காய்க் காத்திருக்கும்␢ காவலரைவிட,␢ ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்␢ காவலரைவிட,␢ என் நெஞ்சம் என் தலைவருக்காய்␢ ஆவலுடன் காத்திருக்கின்றது.⁾
7⁽இஸ்ரயேலே!␢ ஆண்டவரையே நம்பியிரு;␢ பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;␢ மிகுதியான மீட்பு␢ அவரிடமே உண்டு.⁾
8⁽எல்லாத் தீவினைகளினின்றும்␢ இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!⁾
Second Reading
உரோமையர் 8: 8-11
8ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது.⒫
9ஆனால், கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல.
10பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும்.
11மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார்.⒫
Verse Before the Gospel
யோவான் 11: 25a, 26
25இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
Gospel
யோவான் 11: 1-45
1பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான் மரியாவும் அவருடைய சகோதரியான மார்த்தாவும் வாழ்ந்துவந்தனர்.
2இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.
3இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்” என்று தெரிவித்தார்கள்.
4அவர் இதைக் கேட்டு, “இந்நோய் சாவில் போய் முடியாது. கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான். இதனால் மானிடமகனும் மாட்சி பெறுவார்” என்றார்.
5மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
6இலாசர் நோயுற்றிருந்ததைக் கேள்விப்பட்ட பிறகு, தாம் இருந்த இடத்தில் இன்னும் இரண்டு நாள் அவர் தங்கியிருந்தார்.⒫
7பின்னர், தம் சீடரிடம், “மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்” என்று கூறினார்.
8அவருடைய சீடர்கள் அவரிடம், “ரபி, இப்போது தானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று கேட்டார்கள்.
9இயேசு மறுமொழியாக, “பகலுக்குப் பன்னிரண்டு மணி நேரம் உண்டு அல்லவா? பகலில் நடப்பவர் இடறி விழுவதில்லை; ஏனெனில், பகல் ஒளியில் பார்க்க முடிகிறது.
10ஆனால், இரவில் நடப்பவர் இடறி விழுவார்; ஏனெனில், அப்போது* ஒளி இல்லை” என்றார்.
11இவ்வாறு கூறியபின், “நம் நண்பன் இலாசர் தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்” என்றார்.
12அவருடைய சீடர் அவரிடம், “ஆண்டவரே, அவர் தூங்கினால் நலமடைவார்” என்றனர்.
13இயேசு அவருடைய சாவைக் குறிப்பிட்டே இவ்வாறு சொன்னார். வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக அவர்கள் நினைத்தார்கள்.
14அப்போது இயேசு அவர்களிடம், “இலாசர் இறந்து விட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டு,
15“நான் அங்கு இல்லாமல் போனதுபற்றி உங்கள் பொருட்டு மகிழ்கிறேன்; ஏனெனில், நீங்கள் என்னை நம்புவதற்கு இது ஒரு வாய்ப்பாகிறது. அவனிடம் போவோம், வாருங்கள்” என்றார்.
16திதிம் என்னும் தோமா தம் உடன் சீடரிடம், “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்றார்.
17இயேசு அங்கு வந்தபோது இலாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
18பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர்* தொலையில் இருந்தது.
19சகோதரர் இறந்ததால் மார்த்தா, மரியா இவர்களுக்கு ஆறுதல் சொல்லப் பலர் அங்கே வந்திருந்தனர்.
20இயேசு வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் மார்த்தா அவரை எதிர்கொண்டு சென்றார்; மரியா வீட்டில் இருந்துவிட்டார்.
21மார்த்தா இயேசவை நோக்கி, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்.
22இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார் என்பது எனக்குக் தெரியும்” என்றார்.
23இயேசு அவரிடம், “உன் சகோதரன் உயிர்த்தெழுவான்” என்றார்.
24மார்த்தா அவரிடம், “இறுதி நாள் உயிர்த்தெழுதலின் போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்கு தெரியும்” என்றார்.
25இயேசு அவரிடம், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
26உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார். இதை நீ நம்புகிறாயா?” என்று கேட்டார்.
27மார்த்தா அவரிடம், “ஆம் ஆண்டவரே, நீரே மெசியா! நீரே இறைமகன்! நீரே உலகிற்கு வரவிருந்தவர் என நம்புகிறேன்” என்றார்.
28இவ்வாறு சொன்னபின் மார்த்தா தம் சகோதரியான மரியாவைக் கூப்பிடச் சென்றார்; அவரிடம், “போதகர் வந்து விட்டார்; உன்னை அழைக்கிறார்” என்று காதோடு காதாய்ச் சொன்னார்.
29இதைக் கேட்டதும் மரியா விரைந்தெழுந்து இயேசுவிடம் சென்றார்.
30இயேசு அதுவரையிலும் ஊருக்குள் வரவில்லை. மார்த்தா தம்மைச் சந்தித்த இடத்திலேயே இன்னும் இருந்தார்.
31வீட்டில் மரியாவுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள் அவர் விரைந்தெழுந்து வெளியே செல்வதைக் கண்டு, அவர் அழுவதற்காகக் கல்லறைக்குப் போகிறார் என்று எண்ணி அவர் பின்னே சென்றார்கள்.
32இயேசு இருந்த இடத்திற்கு மரியா வந்து, அவரைக் கண்டதும் அவர் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்” என்றார்.
33மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி,
34“அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள்.
35அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார்.
36அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள்.
37ஆனால், அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.
38இயேசு மீண்டும் உள்ளம் குமுறியவராய்க் கல்லறைக்கு அருகில் சென்றார். அது ஒரு குகை. அதை ஒரு கல் மூடியிருந்தது.
39“கல்லை அகற்றி விடுங்கள்” என்றார் இயேசு. இறந்து போனவரின் சகோதரியான மார்த்தா அவரிடம், “ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே!” என்றார்.
40இயேசு அவரிடம், “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய் என நான் உன்னிடம் கூறவில்லையா?” என்று கேட்டார்.
41அப்போது அவர்கள் கல்லை அகற்றினார்கள். இயேசு அண்ணாந்து பார்த்து, “தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
42நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும், நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.
43இவ்வாறு சொன்ன பின் இயேசு உரத்த குரலில், “இலாசரே, வெளியே வா” என்று கூப்பிட்டார்.
44இறந்தவர் உயிரோடு வெளியே வந்தார். அவருடைய கால்களும் கைகளும் துணியால் சுற்றப்பட்டிருந்தன. முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. “கட்டுகளை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.
45மரியாவிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரை நம்பினர்.