வாசகங்கள்
29 ஏப்ரல், 2028
Catherine of Siena, Virgin, Doctor Obligatory Memorial
அன்றைய திருப்பலி
First Reading
திருத்தூதர் பணிகள் 6: 1-7
1அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர்.
2எனவே, பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, “நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல.
3ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம்.
4நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்” என்று கூறினர்.
5திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிக்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து
6அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர்.
7கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 33: 1-2, 4-5, 18-19
1⁽நீதிமான்களே,␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது␢ பொருத்தமானதே.⁾
2⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾
4⁽ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;␢ அவருடைய செயல்கள் எல்லாம்␢ நம்பிக்கைக்கு உரியவை.⁾
5⁽அவர் நீதியையும் நேர்மையையும் § விரும்புகின்றார்;␢ அவரது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது.⁾
18⁽தமக்கு அஞ்சி நடப்போரையும்␢ தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்␢ ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.⁾
19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; § அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
Gospel
யோவான் 6: 16-21
16மாலை வேளையானதும் இயேசுவின் சீடர்கள் கடற்கரைக்கு வந்து,
17படகேறி மறுகரையிலுள்ள கப்பர் நாகுமுக்குப் புறப்பட்டார்கள், ஏற்கெனவே இருட்டிவிட்டது. இயேசுவும் அவர்களிடம் அதுவரை வந்து சேரவில்லை.
18அப்போது பெருங்காற்று வீசிற்று; கடல் பொங்கி எழுந்தது.
19அவர்கள் ஐந்து அல்லது ஆறு கிலோ மீட்டர்* தொலை படகு ஓட்டியபின் இயேசு கடல்மீது நடந்து படகருகில் வருவதைக் கண்டு அஞ்சினார்கள்.
20இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்.
21அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக் கொள்ள விரும்பினார்கள். ஆனால், படகு உடனே அவர்கள் சேரவேண்டிய இடம்போய்ச் சேர்ந்துவிட்டது.