ஏப்ரல் 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30
இன்றுக்கு

வாசகங்கள்

3 ஏப்ரல், 2028

Lenten Weekday

அன்றைய திருப்பலி
First Reading

தானியேல் 13: 1-9, 15-17, 19-30, 33-62 or தானியேல் 13: 41c-62

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Responsorial Psalm

திருப்பாடல்கள் 23: 1-3a, 3b-4, 5, 6

1⁽ஆண்டவரே என் ஆயர்;␢ எனக்கேதும் குறையில்லை.⁾ 2⁽பசும்புல் வெளிமீது எனை அவர்␢ இளைப்பாறச் செய்வார்;␢ அமைதியான நீர்நிலைகளுக்கு␢ எனை அழைத்துச் செல்வார்.⁾ 3⁽அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;␢ தம் பெயர்க்கேற்ப␢ எனை நீதிவழி நடத்திடுவார்;⁾ 4⁽மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்␢ நான் நடக்க நேர்ந்தாலும்,␢ நீர் என்னோடு இருப்பதால்␢ எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;␢ உம் கோலும் நெடுங்கழியும்␢ என்னைத் தேற்றும்.⁾ 5⁽என்னுடைய எதிரிகளின் கண் முன்னே␢ எனக்கொரு விருந்தினை␢ ஏற்பாடு செய்கின்றீர்;␢ என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;␢ எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.⁾ 6⁽உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்␢ உம் அருள் நலமும் பேரன்பும்␢ என்னைப் புடைசூழ்ந்து வரும்;␢ நானும் ஆண்டவரின் இல்லத்தில் § நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.⁾
Verse Before the Gospel

எசேக்கியேல் 33: 11

11அவர்களிடம் சொல்: “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?⒫
Gospel

யோவான் 8: 12-20

12மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்” என்றார். 13பரிசேயர் அவரிடம், “உம்மைப்பற்றி நீரே சான்று பகர்கிறீர்; உம் சான்று செல்லாது” என்றனர். 14அதற்கு இயேசு, “என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தாலும் என் சான்று செல்லும். ஏனெனில், நான் எங்கிருந்து வந்தேன், எங்குச் செல்கிறேன் என்பது எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது. 15நீங்கள் உலகப் போக்கின்படி தீர்ப்பு அளிக்கிறீர்கள். நான் யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. 16ஆனால், நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில், நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார். 17இருவருடைய சான்று செல்லும் என்று உங்கள் சட்டத்தில் எழுதியுள்ளது அல்லவா? 18என்னைப் பற்றி நானும் சான்று பகர்கிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் சான்று பகர்கிறார்” என்றார். 19அப்போது அவர்கள், “உம் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக, “உங்களுக்கு என்னையும் தெரியாது; என் தந்தையையும் தெரியாது. என்னை உங்களுக்குத் தெரிந்திருந்தால் ஒருவேளை என் தந்தையையும் தெரிந்திருக்கும்” என்றார்.⒫ 20கோவிலில் காணிக்கைப் பெட்டி அருகிலிருந்து இயேசு கற்பித்துக்கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.