ஏப்ரல் 2028

ஞா தி செ பு வி வெ
1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30
இன்றுக்கு

வாசகங்கள்

24 ஏப்ரல், 2028

Easter Weekday/ Fidelis of Sigmaringen, Priest, Martyr

Fidelis of Sigmaringen, Priest, Martyr
First Reading

திருத்தூதர் பணிகள் 4: 23-31

23விடுதலை பெற்ற அவர்கள், தங்களைச் சேர்ந்தவர்களிடம் வந்து, தலைமைக் குருக்களும் மூப்பர்களும் தங்களுக்குக் கூறிய யாவற்றையும் அறிவித்தார்கள். 24இவற்றைக் கேட்ட யாவரும் ஒரே மனத்துடன் தங்கள் குரலைக் கடவுள்பால் எழுப்பி, பின்வருமாறு மன்றாடினர்; “‘ஆண்டவரே, விண்ணுலகையும் மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே’. 25எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் ⁽‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்?␢ மக்களினங்கள் வீணாகச்␢ சூழ்ச்சி செய்வதேன்?⁾ 26⁽பூவுலகின் அரசர்களும் தலைவர்களும்␢ ஆண்டவருக்கும் அவர்தம்␢ மெசியாவுக்கும் எதிராக␢ அணிவகுத்து நின்றனர்’⁾ என்று உரைத்தீர். 27அதன்படியே இந்நகரில் உம்மால் அருள்பொழிவு பெற்ற உமது தூய ஊழியராகிய இயேசுவுக்கு எதிராக ஏரோதும் பொந்தியு பிலாத்தும் பிற இனத்தவரோடும் இஸ்ரயேல் மக்களோடும் ஒன்றுதிரண்டனர். 28உமது கைவன்மையும் உமது திட்டமும் குறித்து அனைத்தையும் அவர்கள் செய்து முடித்தனர். 29இப்போதுகூட ஆண்டவரே, அவர்கள் அச்சுறுத்துவதைப் பாரும். உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள் தாரும். 30உமது தூய ஊழியர் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்; அடையாளங்களும் அருஞ் செயல்களும் நடைபெறச் செய்யும்.” 31இவ்வாறு மன்றாடியவுடன் அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்களாய்க் கடவுளின் வார்த்தைகளைத் துணிவுடன் எடுத்துக் கூறினர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 2: 1-3, 4-6, 7-9

1⁽வேற்றினத்தார் சீறி எழுவதேன்?␢ மக்களினங்கள் வீணாகச்␢ சூழ்ச்சி செய்வதேன்?⁾ 2⁽ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு␢ பெற்றவர்க்கும் எதிராகப்␢ பூவுலகின் அரசர்கள்␢ அணிவகுத்து நிற்கின்றார்கள்;␢ ஆள்வோர் ஒன்றுகூடிச்␢ சதிசெய்கின்றார்கள்;⁾ 3⁽‛அவர்கள் பூட்டிய தளைகளைத்␢ தகர்ப்போம்;␢ அவர்கள் வைத்த கண்ணிகளை␢ நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’ § என்கின்றார்கள்.⁾ 4⁽விண்ணுலகில் வீற்றிருப்பவர்␢ எள்ளி நகைக்கின்றார்;␢ என் தலைவர் அவர்களைப் பார்த்து␢ ஏளனம் செய்கின்றார்.⁾ 5⁽அவர் சினமுற்று␢ அவர்களை மிரட்டுகின்றார்;␢ கடுஞ்சினத்தால் அவர்களைக்␢ கலங்கடிக்கின்றார்;⁾ 6⁽‛என் திருமலையாகிய சீயோனில்␢ நானே என் அரசரைத்␢ திருநிலைப்படுத்தினேன்.’⁾ 7⁽ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை␢ நான் அறிவிக்கின்றேன்;␢ ‛நீர் என் மைந்தர்; இன்று நான்␢ உம்மைப் பெற்றெடுத்தேன்.⁾ 8⁽நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;␢ பிற நாடுகளை உமக்கு␢ உரிமைச் சொத்தாக்குவேன்;␢ பூவுலகை அதன் கடையெல்லைவரை␢ உமக்கு உடைமையாக்குவேன்.⁾ 9⁽இருப்புக் கோலால்␢ நீர் அவர்களைத் தாக்குவீர்;␢ குயவன் கலத்தைப்போல␢ அவர்களை நொறுக்குவீர்.’⁾
Alleluia

கொலோசையர் 3: 1

1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
Gospel

யோவான் 3: 1-8

1பரிசேயர் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் நிக்கதேம். அவர் யூதத் தலைவர்களுள் ஒருவர். 2அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, “ரபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை நாங்கள் அறிவோம். கடவுள் தம்மோடு இருந்தாலன்றி, நீர் செய்யும் இவ்வரும் அடையாளங்களை யாரும் செய்ய இயலாது” என்றார். 3இயேசு அவரைப் பார்த்து, “மறுபடியும்* பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது என மிக உறுதியாக உமக்குச் சொல்லுகிறேன்” என்றார்.⒫ 4நிக்கதேம் அவரை நோக்கி, “வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்க முடியும்? அவர் மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா?” என்று கேட்டார். 5இயேசு அவரைப் பார்த்து, “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 6மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர். 7நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். 8காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால், அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்” என்றார்.⒫