வாசகங்கள்
16 செப்டம்பர், 2026
Memorial of Saints Cornelius, Pope, and Cyprian, Bishop, Martyrs
அன்றைய திருப்பலி
Reading I
1 கொரிந்தியர் 12:31-13:13
31[a] எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.⒯[b] எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
1⁽நான் மானிடரின் மொழிகளிலும்␢ வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும்␢ அன்பு எனக்கில்லையேல்␢ ஒலிக்கும் வெண்கலமும்␢ ஓசையிடும் தாளமும் போலாவேன்.⁾
2⁽இறைவாக்கு உரைக்கும் ஆற்றல்␢ எனக்கு இருப்பினும், மறைபொருள்கள்␢ அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், § அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,␢ மலைகளை இடம்பெயரச்␢ செய்யும் அளவுக்கு நிறைந்த␢ நம்பிக்கை கொண்டிருப்பினும்␢ என்னிடம் அன்பு இல்லையேல்␢ நான் ஒன்றுமில்லை.⁾
3⁽என் உடைமையை எல்லாம்␢ நான் வாரி வழங்கினாலும்␢ என் உடலையே␢ சுட்டெரிப்பதற்கென* ஒப்புவித்தாலும்␢ என்னிடம் அன்பு இல்லையேல்␢ எனக்குப் பயன் ஒன்றுமில்லை.⁾
4⁽அன்பு பொறுமையுள்ளது;␢ நன்மை செய்யும்;␢ பொறாமைப்படாது;␢ தற்புகழ்ச்சி கொள்ளாது;␢ இறுமாப்பு அடையாது.⁾
5⁽அன்பு இழிவானதைச் செய்யாது;␢ தன்னலம் நாடாது;␢ எரிச்சலுக்கு இடம் கொடாது;␢ தீங்கு நினையாது.⁾
6⁽அன்பு தீவினையில் மகிழ்வுறாது;␢ மாறாக உண்மையில் அது மகிழும்.⁾
7⁽அன்பு அனைத்தையும்␢ பொறுத்துக் கொள்ளும்;␢ அனைத்தையும் நம்பும்;␢ அனைத்தையும்␢ எதிர்நோக்கி இருக்கும்;␢ அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்.⁾
8⁽இறைவாக்கு உரைக்கும் கொடை␢ ஒழிந்துபோம்;␢ பரவசப்பேச்சு பேசும் கொடையும்␢ ஓய்ந்துபோம்;␢ அறிவும் அழிந்துபோம்.␢ ஆனால், அன்பு ஒருபோதும் அழியாது.⁾
9⁽ஏனெனில், நமது அறிவு␢ அரைகுறையானது;␢ நாம் அரைகுறையாகவே␢ இறைவாக்கும் உரைக்கிறோம்.⁾
10⁽நிறைவானது வரும் போது␢ அரைகுறையானது ஒழிந்துபோம்.⁾
11⁽நான் குழந்தையாய் இருந்தபோது␢ குழந்தையைப்போலப் பேசினேன்;␢ குழந்தையின் மனநிலையைப்␢ பெற்றிருந்தேன்;␢ குழந்தையைப்போல எண்ணினேன்.␢ நான் பெரியவனானபோது␢ குழந்தைக்குரியவற்றை␢ அறவே விட்டுவிட்டேன்.⁾
12⁽ஏனெனில், இப்போது நாம்␢ கண்ணாடியில் காண்பதுபோல்␢ மங்கலாய்க் காண்கிறோம்;␢ ஆனால் அப்போது␢ நாம் நேரில் காண்போம்.␢ இப்போது நான்␢ அரைகுறையாய் அறிகிறேன்;␢ அப்போது கடவுள்␢ என்னை அறிந்துள்ளதுபோல்␢ முழுமையாய் அறிவேன்.⁾
13⁽ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு,␢ அன்பு ஆகிய மூன்றுமே␢ நிலையாய் உள்ளன.␢ இவற்றுள் அன்பே தலைசிறந்தது.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 33:2-3, 4-5, 12 and 22
2⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾
3⁽புத்தம்புது பாடல் ஒன்றை␢ அவருக்குப் பாடுங்கள்;␢ திறம்பட இசைத்து␢ மகிழ்ச்சிக் குரல் எழுப்புங்கள்.⁾
4⁽ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;␢ அவருடைய செயல்கள் எல்லாம்␢ நம்பிக்கைக்கு உரியவை.⁾
5⁽அவர் நீதியையும் நேர்மையையும் § விரும்புகின்றார்;␢ அவரது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது.⁾
12⁽ஆண்டவரைத் தன் கடவுளாகக்␢ கொண்ட இனம் பேறுபெற்றது;␢ அவர் தமது உரிமைச் சொத்தாகத்␢ தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.⁾
22⁽உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால்,␢ உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!⁾
Alleluia
யோவான் 6:63, 68
63வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.
68சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
Gospel
லூக்கா 7:31-35
31பின்னர் இயேசு, “இத் தலைமுறையின் மக்களை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பானவர்கள்?
32இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து ஒருவரை ஒருவர் கூப்பிட்டு ‘நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் அழவில்லை’ என்று கூறி விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.⒫
33எப்படியெனில், திருமுழுக்கு யோவான் வந்தார்; அவர் உணவு அருந்தவுமில்லை; திராட்சை மது குடிக்கவுமில்லை; அவரை, ‘பேய் பிடித்தவன்’ என்றீர்கள்.
34மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்; நீங்களோ, ‘இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்கிறீர்கள்.
35எனினும், ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று” என்றார்.