மே 2026

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

24 மே, 2026

Pentecost Sunday - Mass during the Day (Mass During the Day)

Extended Vigil Mass
Responsorial Psalm

திருப்பாடல்கள் 33:10-11, 12-13, 14-15

10⁽வேற்றினத்தாரின் திட்டங்களை␢ ஆண்டவர் முறியடிக்கின்றார்;␢ மக்களினத்தாரின் எண்ணங்களைக்␢ குலைத்து விடுகின்றார்.⁾ 11⁽ஆண்டவரின் எண்ணங்களோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவரது உள்ளத்தின் திட்டங்கள்␢ தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.⁾ 12⁽ஆண்டவரைத் தன் கடவுளாகக்␢ கொண்ட இனம் பேறுபெற்றது;␢ அவர் தமது உரிமைச் சொத்தாகத்␢ தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.⁾ 13⁽வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்;␢ மானிடர் அனைவரையும் காண்கின்றார்.⁾ 14⁽தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து␢ உலகெங்கும் வாழ்வோரைக் § கூர்ந்து நோக்குகின்றார்.⁾ 15⁽அவர்களின் உள்ளங்களை␢ உருவாக்குகின்றவர் அவரே!␢ அவர்களின் செயல்கள் அனைத்தையும்␢ உற்று நோக்குபவரும் அவரே!⁾
Reading II

விடுதலைப் பயணம் 19:3-8, 16-20

3ஆனால், மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார். அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, “யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்லவேண்டியது — இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது — இதுவே: 4“நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள். 5நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். 6மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள். இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை” என்றார்.⒫ 7மோசே வந்து, மக்களின் தலைவர்களை வரவழைத்து, ஆண்டவர் தமக்குக் கட்டளையிட்ட இக்காரியங்கள் அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துரைத்தார். 8மக்கள் அனைவரும் ஒரே குரலாக, “ஆண்டவர் கூறியபடியே அனைத்தும் செய்வோம்” என்று மறுமொழி கூறினர். மக்களின் பதிலை மோசே ஆண்டவரிடம் சமர்ப்பித்தார். 16மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது. மலைமேல் மாபெரும் கார்மேகம் வந்து கவிழ்ந்தது. எக்காளப் பேரொலி எழுந்தது. இதனால் பாளையத்திலிருந்த அனைவரும் நடுநடுங்கினர். 17கடவுளைச் சந்திப்பதற்காக மோசே மக்களைப் பாளையத்திலிருந்து வெளிவரச் செய்தார். அவர்களும் மலையடிவாரத்தில் வந்து நின்றார்கள். 18சீனாய் மலை முழுவதும் புகைந்து கொண்டிருந்தது. ஏனெனில், ஆண்டவர் அதன்மீது நெருப்பில் இறங்கி வந்தார். அதன் புகை தீச்சூளையிலிருந்து எழும் புகைபோல் தோன்றியது. மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. 19எக்காள முழக்கம் எழும்பி வர வர மிகுதியாயிற்று. மோசே பேசியபோது கடவுளும் இடிமுழக்கத்தில் விடையளித்தார். 20ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கி வந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச்சென்றார்.
Responsorial Psalm

தானியேல் 3:52, 53, 54, 55, 56

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Reading III

எசேக்கியேல் 37:1-14

1ஆண்டவரின் ஆற்றல் என் மீது இறங்கியது. அவர் என்னைத் தம் ஆவியால் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன. 2அவர் அவற்றைச் சுற்றி என்னை நடத்திச் சென்றார். அங்கே பள்ளத்தாக்கின் அடியில் மிகப் பல எலும்புகள் கிடந்தன. அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன. 3அவர் என்னிடம், “மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா?” என்று கேட்டார். நான், “தலைவராகிய ஆண்டவரே! உமக்குத் தெரியுமே” என்று மறுமொழி அளித்தேன். 4அவர் என்னிடம் உரைத்தது: நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. “உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்” என்று சொல். 5தலைவராகிய ஆண்டவர் இந்த எலும்புகளுக்கு இவ்வாறு கூறுகிறார்: நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். 6நான் உங்களை நரம்புகளால் தொடுப்பேன்; உங்கள்மேல் சதையைப் பரப்புவேன். உங்களைத் தோலால் மூடுவேன். பின் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர்பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள். 7எனவே, எனக்குக் கட்டளையிடப்பட்டபடி இறைவாக்குரைத்தேன். நான் இறைவாக்குரைக்கையில், உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது. 8நான் பார்க்கையிலேயே அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. ஆனால் அவற்றில் உயிர் இன்னும் வரவில்லை. 9பின்னர் அவர் என்னிடம், உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை; மானிடா! இறைவாக்குரைத்து, உயிர்மூச்சிடம் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான்கு காற்றுகளிலிருந்தும் “உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர்.” 10எனவே அவர் எனக்குக் கட்டளையிட்டவாறு இறைவாக்குரைத்தேன். உடனே அவர்களுக்குள் உயிர்மூச்சு புகுந்தது. அவர்கள் உயிர்பெற்று, காலூன்றி, மாபெரும் படைத்திரள்போல் நின்றனர். 11அவர் மேலும் என்னிடம் கூறியது: மானிடா! இந்த எலும்புகள் இஸ்ரயேல் வீட்டார் அனைவரையும் குறிக்கும். அவர்களோ “எங்கள் எலும்புகள் உலர்ந்து போயின. எங்கள் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. நாங்கள் துண்டிக்கப்பட்டு விட்டோம்” எனச் சொல்கிறார்கள். 12எனவே, இறைவாக்குரைத்து அவர்களிடம், சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டுவருவேன். உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். 13அப்போது, என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து வெளிக்கொணர்கையில், நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். 14என் ஆவியை உங்கள்மீது பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். “ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன்” என அப்போது அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 107:2-3, 4-5, 6-7, 8-9

2⁽ஆண்டவரால் மீட்படைந்தோர்,␢ எதிரியின் கையினின்று␢ அவரால் மீட்கப்பட்டோர்,⁾ 3⁽கிழக்கினின்றும் மேற்கினின்றும்,␢ வடக்கினின்றும் தெற்கினின்றும்,␢ பல நாடுகளினின்றும்␢ ஒன்று சேர்க்கப்பட்டோர்␢ சொல்வார்களாக.⁾ 4⁽பாலைநிலத்தில் பாழ் வெளியில்␢ சிலர் அலைந்து திரிந்தனர்;␢ குடியிருக்குமாறு ஒரு நகருக்குச் செல்ல␢ அவர்கள் வழி காணவில்லை;⁾ 5⁽பசியுற்றனர்; தாகமுற்றனர்;␢ மனச்சோர்வுற்றுக் களைத்துப்போயினர்.⁾ 6⁽தம் நெருக்கடியில்␢ ஆண்டவரைக் கூவியழைத்தனர்;␢ அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து␢ அவர்களை அவர் விடுவித்தார்.⁾ 7⁽நேரிய பாதையில்␢ அவர்களை வழிநடத்தினார்;␢ குடியிருக்கும் நகரை␢ அவர்கள் அடையச் செய்தார்.⁾ 8⁽ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு,␢ மானிடர்களுக்காக அவர் செய்த␢ வியத்தகு செயல்களை முன்னிட்டு,␢ அவர்கள் அவருக்கு␢ நன்றி செலுத்துவார்களாக!⁾ 9⁽ஏனெனில், தாகமுற்றோர்க்கு␢ அவர் நிறைவளித்தார்;␢ பசியுற்றோரை நன்மையால் நிரப்பினார்.⁾
Reading IV

யோவேல் 3:1-5

1“அந்நாள்களில் நான் யூதா, எருசலேம் ஆகியவற்றின் துன்ப நிலைமையை மாற்றி முன்பு இருந்த நிலைமைக்கே கொண்டுவருவேன்; 2அப்பொழுது நான் வேற்றினத்தார் அனைவரையும் ஒன்றுசேர்த்து யோசபாத்துப் பள்ளத்தாக்கிற்கு இறங்கிவரச் செய்வேன்; அங்கே நான், என் மக்களும் உரிமைச் சொத்துமாகிய இஸ்ரயேலை முன்னிட்டு அவர்களுக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்; ஏனெனில், அவர்கள் என் மக்களை வேற்று நாடுகளில் சிதறடித்தார்கள்; எனது நாட்டைத் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டார்கள்; 3என் மக்கள் மேல் சீட்டுப்போட்டார்கள்; ஆண் பிள்ளையை விலைமகளுக்குக் கூலியாய்க் கொடுத்தார்கள்; பெண் குழந்தையை விலையாய்க் கொடுத்து, திராட்சை இரசம் வாங்கிக் குடித்தார்கள்.⒫ 4தீர், சீதோன் நகரங்களே, பெலிஸ்தியா நாட்டின் அனைத்துப் பகுதிகளே, எனக்கும் உங்களுக்கும் என்ன வழக்கு? என்னை முற்றிலுமாகப் பழிவாங்குவது உங்கள் எண்ணமோ? அவ்வாறு நீங்கள் பழிவாங்கினால் நான் காலந்தாழ்த்தாமல் நீங்கள் செய்ததையே உங்கள் தலைமேல் வெகு விரைவில் விழச் செய்வேன். 5நீங்கள் என் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துக் கொண்டீர்கள்; விலையுயர்ந்த பொருள்களை உங்கள் அரண்மனைகளுக்கு அள்ளிக்கொண்டு போனீர்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 104:1-2, 24, 35, 27-28, 29-30

1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾ 2⁽பேரொளியை␢ ஆடையென அணிந்துள்ளவர்;␢ வான்வெளியைக்␢ கூடாரமென விரித்துள்ளவர்;⁾ 24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾ 35⁽பாவிகள் பூவுலகினின்று␢ ஒழிந்து போவார்களாக!␢ தீயோர்கள் இனி␢ இல்லாது போவார்களாக!␢ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!␢ அல்லேலூயா!⁾ 27⁽தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று␢ இவையெல்லாம்␢ உம்மையே நம்பியிருக்கின்றன.⁾ 28⁽நீர் கொடுக்க,␢ அவை சேகரித்துக் கொள்கின்றன;␢ நீர் உமது கையைத் திறக்க,␢ அவை நலன்களால் நிறைவுறுகின்றன.⁾ 29⁽நீர் உமது முகத்தை மறைக்க,␢ அவை திகிலடையும்;␢ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,␢ அவை மாண்டு மறுபடியும்␢ புழுதிக்கே திரும்பும்.⁾ 30⁽உமது ஆவியை நீர் அனுப்ப,␢ அவை படைக்கப்பெறுகின்றன;␢ மண்ணகத்தின் முகத்தைப்␢ புதுப்பிக்கின்றீர்.⁾
Epistle

உரோமையர் 8:22-27

22இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். 23படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். 24நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? 25நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.⒫ 26இவ்வாறு, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். 27உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.
Mass During the Day
Reading I

திருத்தூதர் பணிகள் 2:1-11

1பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். 2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3மேலும், நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். 5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். 7எல்லோரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?” என வியந்தனர். 9பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், 10பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், 11யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே!” என்றனர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 104:1, 24, 29-30, 31, 34

1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾ 24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾ 29⁽நீர் உமது முகத்தை மறைக்க,␢ அவை திகிலடையும்;␢ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,␢ அவை மாண்டு மறுபடியும்␢ புழுதிக்கே திரும்பும்.⁾ 30⁽உமது ஆவியை நீர் அனுப்ப,␢ அவை படைக்கப்பெறுகின்றன;␢ மண்ணகத்தின் முகத்தைப்␢ புதுப்பிக்கின்றீர்.⁾ 31⁽ஆண்டவரின் மாட்சி␢ என்றென்றும் நிலைத்திருப்பதாக!␢ அவர் தம் செயல்களைக் குறித்து␢ மகிழ்வாராக!⁾ 34⁽என் தியானப் பாடல்␢ அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!␢ நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.⁾
Reading II

1 கொரிந்தியர் 12:3-7, 12-13

3கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் “இயேசு சபிக்கப்பட்டவர்” எனச் சொல்ல மாட்டார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் “இயேசுவே ஆண்டவர்” எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.⒫ 4அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால், தூய ஆவியார் ஒருவரே. 5திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால், ஆண்டவர் ஒருவரே. 6செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால், கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். 7பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. 12உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். 13ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.⒫
Gospel

யோவான் 20:19-23

19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். 20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.
Vigil Mass
Reading I

தொடக்க நூல் 11:1-9

1அப்பொழுது உலகம் முழுவதிலும் ஒரே மொழியும் ஒரே விதமான சொற்களும் இருந்தன. 2மக்கள் கிழக்கிலிருந்து புறப்பட்டு வந்து சினயார் நாட்டில் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர். 3அப்பொழுது அவர்கள், ஒருவரை ஒருவர் நோக்கி, “வாருங்கள், நாம் செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுடுவோம்” என்றனர். அவர்கள் செங்கல்லைக் கல்லாகவும் கீலைக் காரையாகவும் பயன்படுத்தினர். 4பின், அவர்கள் “வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்” என்றனர். 5மானிடர் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு ஆண்டவர் கீழே இறங்கி வந்தார். 6அப்பொழுது ஆண்டவர், “இதோ! மக்கள் ஒன்றாக இருக்கின்றனர். அவர்கள் எல்லோரும் ஒரே மொழி பேசுகின்றனர். அவர்கள் செய்யவிருப்பதன் தொடக்கமே இது! அவர்கள் திட்டமிட்டுச் செய்யவிருப்பது எதையும் இனித்தடுத்து நிறுத்த முடியாது. 7வாருங்கள், நாம் கீழே போய் அங்கே ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்து கொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவோம்” என்றார். 8ஆண்டவர் அவர்களை அங்கிருந்து உலகம் முழுவதிலும் சிதறுண்டுபோகச் செய்ததால் அவர்கள் நகரைத் தொடர்ந்து கட்டுவதைக் கைவிட்டனர். 9ஆகவே, அது “பாபேல்” என்று வழங்கப்பட்டது. ஏனெனில், அங்கே ஆண்டவர் உலகெங்கும் வழங்கி வந்த மொழியில் குழப்பத்தை உண்டாக்கினார். அங்கிருந்து அவர்களை ஆண்டவர் உலகம் முழுவதிலும் சிதறுண்டு போகச் செய்தார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 104:1-2, 24, 35, 27-28, 29, 30

1⁽என் உயிரே!␢ ஆண்டவரைப் போற்றிடு!␢ என் கடவுளாகிய ஆண்டவரே!␢ நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!␢ நீர் மாண்பையும் மாட்சியையும்␢ அணிந்துள்ளவர்.⁾ 2⁽பேரொளியை␢ ஆடையென அணிந்துள்ளவர்;␢ வான்வெளியைக்␢ கூடாரமென விரித்துள்ளவர்;⁾ 24⁽ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள்␢ எத்தனை எத்தனை!␢ நீர் அனைத்தையும்␢ ஞானத்தோடு செய்துள்ளீர்!␢ பூவுலகம்␢ உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.⁾ 35⁽பாவிகள் பூவுலகினின்று␢ ஒழிந்து போவார்களாக!␢ தீயோர்கள் இனி␢ இல்லாது போவார்களாக!␢ என் உயிரே! நீ ஆண்டவரைப் போற்றிடு!␢ அல்லேலூயா!⁾ 27⁽தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று␢ இவையெல்லாம்␢ உம்மையே நம்பியிருக்கின்றன.⁾ 28⁽நீர் கொடுக்க,␢ அவை சேகரித்துக் கொள்கின்றன;␢ நீர் உமது கையைத் திறக்க,␢ அவை நலன்களால் நிறைவுறுகின்றன.⁾ 29⁽நீர் உமது முகத்தை மறைக்க,␢ அவை திகிலடையும்;␢ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால்,␢ அவை மாண்டு மறுபடியும்␢ புழுதிக்கே திரும்பும்.⁾ 30⁽உமது ஆவியை நீர் அனுப்ப,␢ அவை படைக்கப்பெறுகின்றன;␢ மண்ணகத்தின் முகத்தைப்␢ புதுப்பிக்கின்றீர்.⁾
Reading II

உரோமையர் 8:22-27

22இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். 23படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம். 24நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும், எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கெனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? 25நாமோ காணாத ஒன்றை எதிர்நோக்கி இருக்கும்போது அதற்காக தளராமனத்தோடு காத்திருக்கிறோம்.⒫ 26இவ்வாறு, தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். 27உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.
Alleluia

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

யோவான் 7:37-39

37திருவிழாவின் இறுதியான பெருநாளில் இயேசு எழுந்து நின்று உரத்த குரலில், “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். 38மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும்” என்றார். 39தம்மிடம் நம்பிக்கை கொண்டிருப்போர் பெறப்போகும் தூய ஆவியைக்குறித்தே அவர் இவ்வாறு சொன்னார். தூய ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏனெனில், இயேசு மாட்சிப்படுத்தப்படவில்லை.