வாசகங்கள்
10 மே, 2026
Sixth Sunday of Easter
அன்றைய திருப்பலி
Reading I
திருத்தூதர் பணிகள் 8:5-8, 14-17
5பிலிப்பு சமாரியா* நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார்.
6பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர்.
7ஏனெனில், பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர்.
8இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.
14சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
15அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்.
16ஏனெனில், அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.
17பின்பு, பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 66:1-3, 4-5, 6-7, 16, 20
1⁽அனைத்துலகோரே!␢ கடவுளைப் போற்றி␢ ஆர்ப்பரியுங்கள்!⁾
2⁽அவரது பெயரின் மாட்சியைப்␢ புகழ்ந்து பாடுங்கள்;␢ அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.⁾
3⁽கடவுளை நோக்கி␢ ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;␢ உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக␢ உம் எதிரிகள் உமது முன்னலையில்␢ கூனிக் குறுகுவர்;⁾
4⁽அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;␢ அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;␢ உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’␢ என்று சொல்லுங்கள். (சேலா)⁾
5⁽வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!␢ அவர் மானிடரிடையே ஆற்றிவரும்␢ செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.⁾
6⁽கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;␢ ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.␢ அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.⁾
7⁽அவர் தமது வலிமையால்␢ என்றென்றும் அரசாள்கிறார்!␢ அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்␢ கவனித்து வருகின்றன;␢ கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்␢ தலைதூக்காதிருப்பராக! (சேலா)⁾
16⁽கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!␢ அனைவரும் வாரீர்! கேளீர்!␢ அவர் எனக்குச் செய்ததனை␢ எடுத்துரைப்பேன்.⁾
20⁽என் மன்றாட்டைப் புறக்கணியாத␢ கடவுள் போற்றி!␢ தம் பேரன்பை என்னிடமிருந்து␢ நீக்காத இறைவன் போற்றி!⁾
Reading II
1 பேதுரு 3:15-18
15உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்.
16ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள்.
17ஏனெனில், தீமை செய்து துன்புறுவதை விட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.
18கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார்.* நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.⒫
Alleluia
யோவான் 14:23
23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.
Gospel
யோவான் 14:15-21
15நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.⒫
16“உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.
17அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில், அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில், அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.
18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்.
19இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால், நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில், நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்.
20நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
21என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர் மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”⒫