மே 2026

ஞா தி செ பு வி வெ
12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31
இன்றுக்கு

வாசகங்கள்

25 மே, 2026

Memorial of the Blessed Virgin Mary, Mother of the Church

அன்றைய திருப்பலி
Reading I

தொடக்க நூல் 3:9-15, 20

9ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார். 10“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன். 11“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார். 12அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான். 13ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். 14⁽ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், § “நீ இவ்வாறு செய்ததால்,␢ கால்நடைகள், காட்டுவிலங்குகள்␢ அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.␢ உன் வயிற்றினால் ஊர்ந்து␢ உன் வாழ்நாள் எல்லாம்␢ புழுதியைத் தின்பாய்.⁾ 15⁽உனக்கும் பெண்ணுக்கும், § உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்␢ பகையை உண்டாக்குவேன்.␢ அவள் வித்து உன் தலையைக்␢ காயப்படுத்தும்.␢ நீ அதன் குதிங்காலைக்␢ காயப்படுத்துவாய்” என்றார்.⁾ 20மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில், உயிருள்ளோர் எல்லோருக்கும் அவளே தாய்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 87:1-2, 3 and 5, 6-7

1⁽நகரின் அடித்தளம்␢ திருமலைகளின்மீது␢ அமைந்துள்ளது.⁾ 2⁽யாக்கோபின் உறைவிடங்கள்␢ அனைத்தையும்விட␢ ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை␢ விரும்புகின்றார்.⁾ 3⁽கடவுளின் நகரே! உன்னைப்பற்றி␢ மேன்மையானவை␢ பேசப்படுகின்றன. (சேலா)⁾ 5⁽‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;␢ உன்னதர்தாமே அதை␢ நிலைநாட்டியுள்ளார்!’ என்று␢ சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.⁾ 6⁽மக்களினங்களின் பெயர்களைப்␢ பதிவு செய்யும்போது,␢ ‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என␢ ஆண்டவர் எழுதுவார். (சேலா)⁾ 7⁽ஆடல் வல்லாருடன்␢ பாடுவோரும் சேர்ந்து␢ ‛எங்கள் நலன்களின் ஊற்று␢ உன்னிடமே உள்ளது;␢ எல்லாரின் உறைவிடமும்␢ உன்னிடமே உள்ளது’ என்பர்.⁾
Alleluia

:-

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

யோவான் 19:25-34

25சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். 26இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். 27பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். 28இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, “தாகமாய் இருக்கிறது” என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். 29அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள் 30அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, “எல்லாம் நிறைவேறிற்று” என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார். 31அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே, அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். 32ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். 33பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. 34ஆனால், படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.