வாசகங்கள்
21 மே, 2026
Thursday of the Seventh Week of Easter
அன்றைய திருப்பலி
Reading I
திருத்தூதர் பணிகள் 22:30; 23:6-11
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Responsorial Psalm
திருப்பாடல்கள் 16:1-2 and 5, 7-8, 9-10, 11
1⁽இறைவா, என்னைக் காத்தருளும்;␢ உம்மிடம் நான் அடைக்கலம்␢ புகுந்துள்ளேன்.⁾
2⁽நான் ஆண்டவரிடம் ‛நீரே என் தலைவர்;␢ உம்மையன்றி வேறு செல்வம்␢ எனக்கு இல்லை’ என்று சொன்னேன்.⁾
5⁽ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;␢ அவரே என் கிண்ணம்;␢ எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;⁾
7⁽எனக்கு அறிவுரை வழங்கும்␢ ஆண்டவரைப் போற்றுகின்றேன்;␢ இரவில்கூட என் மனச்சான்று␢ என்னை எச்சரிக்கின்றது.⁾
8⁽ஆண்டவரை எப்போதும்␢ என் கண்முன் வைத்துள்ளேன்;␢ அவர் என் வலப்பக்கம் உள்ளார்;␢ எனவே, நான் அசைவுறேன்.⁾
9⁽என் இதயம் அக்களிக்கின்றது;␢ என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;␢ என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.⁾
10⁽ஏனெனில், என்னைப்␢ பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;␢ உம் அன்பனைப் படுகுழியைக்␢ காண விடமாட்டீர்.⁾
11⁽வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;␢ உமது முன்னிலையில் எனக்கு␢ நிறைவான மகிழ்ச்சி உண்டு;␢ உமது வலப்பக்கத்தில்␢ எப்போதும் பேரின்பம் உண்டு.⁾
Alleluia
யோவான் 17:21
21எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.
Gospel
யோவான் 17:20-26
20“அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.
21எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.
22நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன்.
23இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளதுபோல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்து கொள்ளும்.⒫
24“தந்தையே, உலகம் தோன்றுமுன்னே நீர் என்மீது அன்புகொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
25நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்து கொண்டார்கள்.
26நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”