வாசகங்கள்
31 மே, 2026
The Solemnity of the Most Holy Trinity
அன்றைய திருப்பலி
Reading I
விடுதலைப் பயணம் 34:4-6, 8-9
4அவ்வாறே, மோசே முன்னவை போன்ற இரண்டு கற்பலகைகளை வெட்டிஎடுத்துக்கொண்டார். ஆண்டவர் தமக்கு கட்டளையிட்டபடி, அதிகாலையில் எழுந்து சீனாய் மலைமேல் ஏறிச்சென்றார். தம் கையில் இரு கற்பலகைகளையும் கொண்டு போனார்.
5ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, ‘ஆண்டவர்’ என்ற பெயரை அறிவித்தார்.⒫
6அப்போது ஆண்டவர் அவர் முன்னிலையில் கடந்து செல்கையில்,⁽“ஆண்டவர்! ஆண்டவர்!;␢ இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்;␢ சினம் கொள்ளத் தயங்குபவர்;␢ பேரன்புமிக்கவர்;␢ நம்பிக்கைக்குரியவர்.⁾
8உடனே மோசே விரைந்து தரைமட்டும் தாழ்ந்து வணங்கி,
9“என் தலைவரே! நான் உண்மையிலேயே உம் பார்வையில் தயை பெற்றவன் என்றால், இவர்கள் வணங்காக் கழுத்துள்ள மக்கள் எனினும், என் தலைவரே! நீர் எங்களோடு வந்தருளும். எங்கள் கொடுமையையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்றார்.
Responsorial Psalm
தானியேல் 3:52, 53, 54, 55, 56
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Reading II
2 கொரிந்தியர் 13:11-13
11சகோதர சகோதரிகளே, இறுதியாக நான் உங்களுக்குச் சொல்வது; மகிழ்ச்சியாயிருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்; என் அறிவுரைக்குச் செவி சாயுங்கள்; மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.⒫
12தூயமுத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். இங்குள்ள இறைமக்கள் அனைவரும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள்.⒫
13ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!
Alleluia
Cf. Revelation 1:8
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
யோவான் 3:16-18
16தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.
17உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார்.
18அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால், நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில், அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.