அக்டோபர் 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

17 அக்டோபர், 2026

Memorial of Saint Ignatius of Antioch, Bishop and Martyr

அன்றைய திருப்பலி
Reading I

எபேசியர் 1:15-23

15ஆகவே, ஆண்டவராகிய இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் நீங்கள் செலுத்தும் அன்பு பற்றியும் கேள்வியுற்று, 16நான் இறைவனிடம் வேண்டும்போது உங்களை நினைவுகூர்ந்து உங்களுக்காக நன்றி செலுத்தத் தவறுவதில்லை. 17நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சி மிகு தந்தையுமானவர் அவரை முழுமையாக நீங்கள் அறிந்துகொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக!⒫ 18❮18-19❯கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்றும், இறைமக்களுக்கு அவர் அளிக்கும் உரிமைப்பேறு எத்துணை மாட்சி மிக்கது என்றும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்களாகிய நம்மிடம் செயலாற்றுகிற அவரது வல்லமை எத்துணை ஒப்புயர்வு அற்றது, மேலானது என்றும் நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! கடவுள் வலிமை மிக்க தம் ஆற்றலை, 19Same as above 20கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்த்தினார். 21அதன் மூலம் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர், வல்லமை உடையோர், தலைமை தாங்குவோர் ஆகிய அனைவருக்கும்* மேலாகவும் அவரை உயர்த்தினார்; இவ்வுலகில் மட்டும் அல்ல; வரும் உலகிலும் வேறு எப்பெயர் கொண்டோருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். 22அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். 23திருச்சபையே அவரது உடல். எங்கும் எல்லாவற்றையும் நிரப்புகின்ற அவரால் அது நிறைவு பெறுகின்றது.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 8:2-3, 4-5, 6-7

2⁽பாலகரின் மழலையிலும்␢ குழந்தைகளின் மொழியிலும்␢ வலிமையை உறுதிப்படுத்தி␢ உம் பகைவரை ஒடுக்கினீர்;␢ எதிரியையும் பழிவாங்குவோரையும்␢ அடக்கினீர்.⁾ 3⁽உமது கைவேலைப்பாடாகிய␢ வானத்தையும்␢ அதில் நீர் பொருத்தியுள்ள␢ நிலாவையும் விண்மீன்களையும்␢ நான் நோக்கும்போது,⁾ 4⁽மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு␢ அவர்கள் யார்?␢ மனிதப் பிறவிகளை␢ நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு␢ அவர்கள் எம்மாத்திரம்?⁾ 5⁽ஆயினும், அவர்களைக்␢ கடவுளாகிய* உமக்குச்␢ சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;␢ மாட்சியையும் மேன்மையையும்␢ அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.⁾ 6⁽உமது கை படைத்தவற்றை␢ அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;␢ எல்லாவற்றையும்␢ அவர்கள் பாதங்களுக்குக்␢ கீழ்ப்படுத்தியுள்ளீர்.⁾ 7⁽ஆடுமாடுகள், எல்லா வகையான␢ காட்டு விலங்குகள்,⁾
Alleluia

யோவான் 15:26, 27

26தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். 27நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில், நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்துவருகிறீர்கள்.
Gospel

லூக்கா 12:8-12

8“நான் உங்களுக்குச் சொல்கிறேன்; மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை மானிடமகனும் கடவுளின் தூதர் முன்னிலையில் ஏற்றுக் கொள்வார். 9மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் கடவுளின் தூதர் முன்னிலையிலும் மறுதலிக்கப்படுவார். 10மானிடமகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெறமாட்டார். 11தொழுகைக் கூடங்களுக்கும் ஆட்சியாளர், அதிகாரிகள் முன்னும் உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது எப்படிப் பதிலளிப்பது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம். 12ஏனெனில், நீங்கள் பேசவேண்டியவற்றைத் தூய ஆவியார் அந்நேரத்தில் உங்களுக்குக் கற்றுத் தருவார்.