வாசகங்கள்
2 அக்டோபர், 2026
Memorial of the Holy Guardian Angels
அன்றைய திருப்பலி
Reading I
யோபு 38:1, 12-21; 40:3-5
1⁽ஆண்டவர் சூறாவளியினின்று␢ யோபுக்கு அருளிய பதில்:⁾
12⁽உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக்␢ கட்டளையிட்டதுண்டா?␢ வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?⁾
13⁽இவ்வாறு, அது வையக விளிம்பைத்␢ தொட்டிழுத்து, பொல்லாதவரை␢ அதனுளிருந்து உதறித்தள்ளுமே!⁾
14⁽முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்␢ மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.⁾
15⁽அப்போது, கொடியவரிடமிருந்து␢ ஒளி பறிக்கப்படும்;␢ அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.⁾
16⁽கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?␢ ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?⁾
17⁽சாவின் வாயில்கள்␢ உனக்குக் காட்டப்பட்டனவோ?␢ இருள் உலகின் கதவுகளைக்␢ கண்டதுண்டோ நீ?⁾
18⁽அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?␢ அறிவிப்பாய் அதிலுள்ள␢ அனைத்தையும் அறிந்திருந்தால்!⁾
19⁽ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ!␢ இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?⁾
20⁽அதன் எல்லைக்கு␢ அதனை அழைத்துப் போவாயோ?␢ அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!⁾
21⁽ஆம், அறிவாய்;␢ அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;␢ ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!⁾
3⁽யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:⁾
4₍இதோ! எளியேன் யான்␢ இயம்புதற்குண்டோ? என் வாயைக்␢ கையால் பொத்திக் கொள்வேன்.₎
5⁽ஒருமுறை பேசினேன்;␢ மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;␢ இனிப் பேசவேமாட்டேன்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 139:1-3, 7-8, 9-10, 13-14
1⁽ஆண்டவரே!␢ நீர் என்னை␢ ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!⁾
2⁽நான் அமர்வதையும் எழுவதையும்␢ நீர் அறிந்திருக்கின்றீர்;␢ என் நினைவுகளை எல்லாம்␢ தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.⁾
3⁽நான் நடப்பதையும் படுப்பதையும்␢ நீர் அறிந்துள்ளீர்;␢ என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவையே.⁾
7⁽உமது ஆற்றலைவிட்டு␢ நான் எங்கே செல்லக்கூடும்?␢ உமது திருமுன்னிலிருந்து␢ நான் எங்கே தப்பியோட முடியும்?⁾
8⁽நான் வானத்திற்கு␢ ஏறிச் சென்றாலும்␢ நீர் அங்கே இருக்கின்றீர்!␢ பாதாளத்தில் படுக்கையை␢ அமைத்துக் கொண்டாலும்␢ நீர் அங்கேயும் இருக்கின்றீர்!⁾
9⁽நான் *கதிரவனின் இடத்திற்கும்*␢ பறந்து சென்றாலும்␢ மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,⁾
10⁽அங்கேயும் உமது கை␢ என்னை நடத்திச் செல்லும்;␢ உமது வலக்கை என்னைப்␢ பற்றிக் கொள்ளும்.⁾
13⁽ஏனெனில், என் உள் உறுப்புகளை␢ உண்டாக்கியவர் நீரே!␢ என் தாயின் கருவில்␢ எனக்கு உருதந்தவர் நீரே!⁾
14⁽அஞ்சத்தகு, வியத்தகு முறையில்␢ நீர் என்னைப் படைத்ததால்,␢ நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;␢ உம் செயல்கள்␢ வியக்கத்தக்கவை என்பதை␢ என் மனம் முற்றிலும் அறியும்.⁾
Alleluia
திருப்பாடல்கள் 103:21
21⁽ஆண்டவரின் படைகளே!␢ அவர் திருவுளப்படி நடக்கும்␢ அவர்தம் பணியாளரே!␢ அவரைப் போற்றுங்கள்.⁾
Gospel
மத்தேயு 18:1-5, 10
1அந்நேரத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள்.
2அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி,
3பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
4இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.
5இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
10“இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருதவேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வானதூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.