வாசகங்கள்
18 அக்டோபர், 2026
Twenty-ninth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 45:1, 4-6
1⁽சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு␢ செய்துள்ளார்; பிற இனத்தாரை␢ அவர்முன் அடிபணியச் செய்வார்.␢ அரசர்களை அவர்முன்␢ ஆற்றல் இழக்கச் செய்வார்;␢ கோட்டை வாயில்களை அவர்முன்␢ பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்;␢ அவரது வலக்கையை உறுதியாகப்␢ பற்றிப் பிடித்துள்ளார்;␢ அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:⁾
4⁽என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும்␢ நான் தேர்ந்துகொண்ட␢ இஸ்ரயேல் பொருட்டும்␢ பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்;␢ நீ என்னை அறியாதிருந்தும்␢ உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன்.⁾
5⁽நானே ஆண்டவர்;␢ வேறு எவருமில்லை;␢ என்னையன்றி வேறு கடவுள் இல்லை;␢ நீ என்னை அறியாதிருந்தும்␢ உனக்கு வலிமை அளித்தேன்.⁾
6⁽கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி␢ மறையும் திசை வரை␢ என்னையன்றி␢ வேறு எவரும் இல்லை என்று␢ மக்கள் அறியும்படி␢ இதைச் செய்கிறேன்;␢ நானே ஆண்டவர்;␢ வேறு எவரும் இல்லை.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 96:1, 3, 4-5, 7-8, 9-10
1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;⁾
3⁽பிற இனத்தார்க்கு␢ அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;␢ அனைத்து மக்களினங்களுக்கும்␢ அவர்தம் வியத்தகு செயல்களை § அறிவியுங்கள்.⁾
4⁽ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்;␢ பெரிதும் போற்றத் தக்கவர்;␢ தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக␢ அஞ்சுதற்கு உரியவர் அவரே.⁾
5⁽மக்களினங்களின் தெய்வங்கள்␢ அனைத்தும் வெறும் சிலைகளே;␢ ஆண்டவரோ␢ விண்ணுலகைப் படைத்தவர்.⁾
7⁽மக்களினங்களின் குடும்பங்களே,␢ ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;␢ மாட்சியையும் ஆற்றலையும்␢ ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.⁾
8⁽ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை␢ அவருக்குச் சாற்றுங்கள்;␢ உணவுப்படையல் ஏந்தி அவர்தம்␢ கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.⁾
9⁽தூய கோலத்துடன்␢ ஆண்டவரை வழிபடுங்கள்;␢ உலகெங்கும் வாழ்வோரே,␢ அவர் திருமுன் நடுங்குங்கள்.⁾
10⁽வேற்றினத்தாரிடையே கூறுங்கள்;␢ ‛ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;␢ பூவுலகு உறுதியாக␢ நிலைநிறுத்தப்பட்டுள்ளது;␢ அது அசைவுறாது;␢ அவர் மக்களினங்களை␢ நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.⁾
Reading II
1 தெசலோனிக்கர் 1:1-5
1தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது; உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
2நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம்.
3செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவு கூறுகிறோம்.
4கடவுளின் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
5ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம். உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
Alleluia
பிலிப்பியர் 2:15, 16
15அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.
16கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக் கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும்.⒫
Gospel
மத்தேயு 22:15-21
15பின்பு, பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள்.
16தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, “போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும்.
17சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்” என்று அவர்கள் கேட்டார்கள்.
18இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, “வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
19வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள்.
20இயேசு அவர்களிடம், “இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?” என்று கேட்டார்.
21அவர்கள், “சீசருடையவை” என்றார்கள். அதற்கு அவர், “ஆகவே, சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.