வாசகங்கள்
11 அக்டோபர், 2026
Twenty-eighth Sunday in Ordinary Time
அன்றைய திருப்பலி
Reading I
எசாயா 25:6-10
6⁽படைகளின் ஆண்டவர் இந்த மலையில்␢ மக்களினங்கள் அனைவருக்கும்␢ சிறந்ததொரு விருந்தை␢ ஏற்பாடு செய்வார்;␢ அதில் சுவைமிக்க பண்டங்களும்,␢ பழரசப் பானமும்,␢ கொழுப்பான இறைச்சித் துண்டுகளும்,␢ வடிகட்டிப் பக்குவப்படுத்திய␢ திராட்சை இரசமும் பரிமாறப்படும்.⁾
7⁽மக்களினங்கள் அனைவரின்␢ முகத்தை மூடியுள்ள முக்காட்டை␢ இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்;␢ பிற இனத்தார் அனைவரின்␢ துன்பத் திகிலைத் தூக்கி எறிவார்.⁾
8⁽என்றுமே இல்லாதவாறு␢ சாவை ஒழித்துவிடுவார்;␢ என் தலைவராகிய ஆண்டவர்␢ எல்லா முகங்களிலிருந்தும்␢ கண்ணீரைத் துடைத்து விடுவார்;␢ தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை␢ இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்;␢ ஏனெனில், ஆண்டவரே␢ இதை உரைத்தார்.⁾
9⁽அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்;␢ இவரே நம் கடவுள்;␢ இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்;␢ இவர் நம்மை விடுவிப்பார்;␢ இவரே ஆண்டவர்;␢ இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;␢ இவர் தரும் மீட்பில்␢ நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.”⁾
10⁽ஆண்டவரின் ஆற்றல்␢ இம் மலையில் தங்கியிருக்கும்;␢ எருக்குழி நீரில்␢ வைக்கோல் மிதிக்கப்படுவதுபோல்,␢ மோவாபு அவரால் மிதிக்கப்படுவான்.⁾
Responsorial Psalm
திருப்பாடல்கள் 23:1-3, 3-4, 5, 6
1⁽ஆண்டவரே என் ஆயர்;␢ எனக்கேதும் குறையில்லை.⁾
2⁽பசும்புல் வெளிமீது எனை அவர்␢ இளைப்பாறச் செய்வார்;␢ அமைதியான நீர்நிலைகளுக்கு␢ எனை அழைத்துச் செல்வார்.⁾
3⁽அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;␢ தம் பெயர்க்கேற்ப␢ எனை நீதிவழி நடத்திடுவார்;⁾
4⁽மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்␢ நான் நடக்க நேர்ந்தாலும்,␢ நீர் என்னோடு இருப்பதால்␢ எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;␢ உம் கோலும் நெடுங்கழியும்␢ என்னைத் தேற்றும்.⁾
5⁽என்னுடைய எதிரிகளின் கண் முன்னே␢ எனக்கொரு விருந்தினை␢ ஏற்பாடு செய்கின்றீர்;␢ என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;␢ எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.⁾
6⁽உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்␢ உம் அருள் நலமும் பேரன்பும்␢ என்னைப் புடைசூழ்ந்து வரும்;␢ நானும் ஆண்டவரின் இல்லத்தில் § நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.⁾
Reading II
பிலிப்பியர் 4:12-14, 19-20
12எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன்.
13எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு.⒫
14ஆயினும், நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்குகொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.
19என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார்.
20நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
Alleluia
Cf. Ephesians 1:17-18
வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.
Gospel
மத்தேயு 22:1-14
1இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது:
2“விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார்.
3திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை.
4மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
5அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார்.
6மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள்.
7அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.
8பின்னர், தம் பணியாளர்களிடம், ‘திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள்.
9எனவே, நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றார்.
10அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது.
11அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார்.
12அரசர் அவனைப் பார்த்து, ‘தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?’ என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான்.
13அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், ‘அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்’ என்றார்.
14இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால், தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.”
Gospel - Alternative
மத்தேயு 22:1-10