அக்டோபர் 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

6 அக்டோபர், 2026

Tuesday of the Twenty-seventh Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

கலாத்தியர் 1:13-24

13நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். 14மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன்.⒫ 15ஆனால், தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், 16தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. 17எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால், உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். 18மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். 19ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை.⒫ 20நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி!⒫ 21பிறகு நான் சிரியா, சிலிசியப் பகுதிகளுக்குச் சென்றேன். 22ஆயினும் யூதேய நாட்டிலிருந்த கிறிஸ்தவச் சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலேயே இருந்தேன். 23“ஒரு காலத்தில் தங்களைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறான்” என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். 24அதற்காக என் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 139:1-3, 13-14, 14-15

1⁽ஆண்டவரே!␢ நீர் என்னை␢ ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!⁾ 2⁽நான் அமர்வதையும் எழுவதையும்␢ நீர் அறிந்திருக்கின்றீர்;␢ என் நினைவுகளை எல்லாம்␢ தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.⁾ 3⁽நான் நடப்பதையும் படுப்பதையும்␢ நீர் அறிந்துள்ளீர்;␢ என் வழிகள் எல்லாம்␢ உமக்குத் தெரிந்தவையே.⁾ 13⁽ஏனெனில், என் உள் உறுப்புகளை␢ உண்டாக்கியவர் நீரே!␢ என் தாயின் கருவில்␢ எனக்கு உருதந்தவர் நீரே!⁾ 14⁽அஞ்சத்தகு, வியத்தகு முறையில்␢ நீர் என்னைப் படைத்ததால்,␢ நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;␢ உம் செயல்கள்␢ வியக்கத்தக்கவை என்பதை␢ என் மனம் முற்றிலும் அறியும்.⁾ 15⁽என் எலும்பு உமக்கு மறைவானதன்று;␢ மறைவான முறையில்␢ நான் உருவானதையும்␢ பூவுலகின் ஆழ்பகுதிகளில்␢ நான் உருப்பெற்றதையும்␢ நீர் அறிந்திருந்தீர்.⁾
Alleluia

லூக்கா 11:28

28அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
Gospel

லூக்கா 10:38-42

38அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. 39அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். 40ஆனால், மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்” என்றார். 41ஆண்டவர் அவரைப் பார்த்து, “மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42ஆனால், தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்