அக்டோபர் 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

14 அக்டோபர், 2026

Wednesday of the Twenty-eighth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

கலாத்தியர் 5:18-25

18நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.⒫ 19ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, 20சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, 21அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப் பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.⒫ 22ஆனால், தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, 23கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. 24கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். 25தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 1:1-2, 3, 4, 6

1⁽நற்பேறு பெற்றவர் யார்? – அவர்␢ பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;␢ பாவிகளின் தீயவழி நில்லாதவர்;␢ இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;⁾ 2⁽ஆனால், அவர் ஆண்டவரின்␢ திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;␢ அவரது சட்டத்தைப்பற்றி␢ இரவும் பகலும் சிந்திப்பவர்;⁾ 3⁽அவர் நீரோடையோரம் நடப்பட்ட␢ மரம் போல் இருப்பார்;␢ பருவகாலத்தில் கனிதந்து,␢ என்றும் பசுமையாய் இருக்கும்␢ அம்மரத்திற்கு ஒப்பாவார்;␢ தாம் செய்வதனைத்திலும்␢ வெற்றி பெறுவார்.⁾ 4⁽ஆனால், பொல்லார் அப்படி இல்லை;␢ அவர்கள் காற்று அடித்துச் செல்லும்␢ பதரைப்போல் ஆவர்.⁾ 6⁽நேர்மையாளரின் நெறியை␢ ஆண்டவர் கருத்தில் கொள்வார்;␢ பொல்லாரின் வழியோ அழிவைத் தரும்.⁾
Alleluia

யோவான் 10:27

27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.
Gospel

லூக்கா 11:42-46

42“ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா,கறியிலை, மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால், நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால், அவற்றையும் விட்டு விடலாகாது.”⒫ 43“ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே.”⒫ 44“ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில், நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள்போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.”⒫ 45திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவுபடுத்துகிறீர்” என்றார். 46அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால், நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.”⒫