அக்டோபர் 2026

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
25262728293031
இன்றுக்கு

வாசகங்கள்

22 அக்டோபர், 2026

Thursday of the Twenty-ninth Week in Ordinary Time

அன்றைய திருப்பலி
Reading I

எபேசியர் 3:14-21

14❮14-15❯இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். 15Same as above 16அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருளுவாராக! 17நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! 18❮18-19❯இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!⒫ 19Same as above 20❮20-21❯நம்முள் வல்லமையோடு செயல்படுபவரும் நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மிகவும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான கடவுளுக்கே திருச்சபையில் கிறிஸ்து இயேசு வழியாக தலைமுறை தலைமுறையாக என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென். 21Same as above
Responsorial Psalm

திருப்பாடல்கள் 33:1-2, 4-5, 11-12, 18-19

1⁽நீதிமான்களே,␢ ஆண்டவரில் களிகூருங்கள்;␢ நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது␢ பொருத்தமானதே.⁾ 2⁽யாழிசைத்து ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ பதின் நரம்பு யாழினால்␢ அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;⁾ 4⁽ஆண்டவரின் வாக்கு நேர்மையானது;␢ அவருடைய செயல்கள் எல்லாம்␢ நம்பிக்கைக்கு உரியவை.⁾ 5⁽அவர் நீதியையும் நேர்மையையும் § விரும்புகின்றார்;␢ அவரது பேரன்பால்␢ பூவுலகு நிறைந்துள்ளது.⁾ 11⁽ஆண்டவரின் எண்ணங்களோ␢ என்றென்றும் நிலைத்திருக்கும்;␢ அவரது உள்ளத்தின் திட்டங்கள்␢ தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.⁾ 12⁽ஆண்டவரைத் தன் கடவுளாகக்␢ கொண்ட இனம் பேறுபெற்றது;␢ அவர் தமது உரிமைச் சொத்தாகத்␢ தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.⁾ 18⁽தமக்கு அஞ்சி நடப்போரையும்␢ தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும்␢ ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.⁾ 19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; § அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
Alleluia

Phippians 3:8-9

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Gospel

லூக்கா 12:49-53

49“மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 50ஆயினும், நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். 51மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். 52இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். 53தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.”