ஏப்ரல் 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

3 ஏப்ரல், 2027

Easter Saturday

அன்றைய திருப்பலி
First Reading

திருத்தூதர் பணிகள் 4: 13-21

13பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப்படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்து கொண்டனர். 14நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. 15எனவே, அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தைவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள். 16“நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால், குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. 17ஆகவே, இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக் கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்” என்று கூறினார்கள். 18அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, “இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது” என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர். 19அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; 20என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்றனர். 21அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர். ஏனென்றால், நடந்ததைக் குறித்து மக்கள் அனைவரும் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 118: 1 and 14-15ab, 16-18, 19-21

1⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்.␢ ஏனெனில் அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 14⁽ஆண்டவரே என் ஆற்றல்;␢ என் பாடல்; என் மீட்பும் அவரே.⁾ 15⁽நீதிமான்களின் கூடாரங்களில்␢ வெற்றியின் மகிழ்ச்சிக்குரல்␢ ஒலிக்கின்றது;␢ ஆண்டவரது வலக்கை␢ வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.⁾ 16⁽ஆண்டவரது வலக்கை␢ உயர்ந்தோங்கி உள்ளது;␢ ஆண்டவரது வலக்கை␢ வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.⁾ 17⁽நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்;␢ ஆண்டவரின் செயல்களை␢ விரித்துரைப்பேன்;⁾ 18⁽கண்டித்தார், ஆண்டவர்␢ என்னைக் கண்டித்தார்; ஆனால்␢ சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.⁾ 19⁽நீதிமான்கள் செல்லும் வாயில்களை␢ எனக்குத் திறந்து விடுங்கள்;␢ அவற்றினுள் நுழைந்து நான்␢ ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.⁾ 20⁽ஆண்டவரது வாயில் இதுவே!␢ இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.⁾ 21⁽என் மன்றாட்டை நீர் கேட்டதால்,␢ எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,␢ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.⁾
Alleluia

திருப்பாடல்கள் 118: 24

24⁽ஆண்டவர் தோற்றுவித்த␢ வெற்றியின் நாள் இதுவே;␢ இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.⁾
Gospel

மாற்கு 16: 9-15

9[வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். 10மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். 11அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை. 12அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். 13அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை. 14இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார். 15இயேசு அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.