ஏப்ரல் 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

25 ஏப்ரல், 2027

Fifth Sunday of Easter

அன்றைய திருப்பலி
First Reading

திருத்தூதர் பணிகள் 9: 26-31

26அவர் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால், அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். 27பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியதுபற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். 28அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார். 29கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். 30ஆனால், அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள். 31யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 22: 26-27, 28, 30, 31-32

26⁽எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்;␢ ஆண்டவரை நாடுவோர்␢ அவரைப் புகழ்வராக!␢ அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக!⁾ 27⁽பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர்␢ அனைவரும் இதை உணர்ந்து␢ ஆண்டவர் பக்கம் திரும்புவர்;␢ பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும்␢ அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்.⁾ 28⁽ஏனெனில் அரசு ஆண்டவருடையது;␢ பிற இனத்தார்மீதும்␢ அவர் ஆட்சி புரிகின்றார்.⁾ 30⁽வருங்காலத் தலைமுறையினர்␢ அவரைத் தொழுவர்;␢ இனிவரும் தலைமுறையினருக்கு␢ ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்.⁾ 31⁽அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்;␢ இனி பிறக்கப்போகும் மக்களுக்கு␢ ‛இதை அவரே செய்தார்’ என்பர்.⁾
Second Reading

1 யோவான் 3: 18-24

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

யோவான் 15: 4a, 5b

4நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. 5நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.
Gospel

யோவான் 15: 1-8

1“உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். 2என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். 3நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். 4நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. 5நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. 6என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். 7நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். 8நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.