ஏப்ரல் 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

13 ஏப்ரல், 2027

Easter Weekday/ Martin I, Pope, Martyr

Martin I, Pope, Martyr
First Reading

திருத்தூதர் பணிகள் 7: 51-60

51திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். 52எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமலிருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். 53கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச் சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.” 54இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். 55அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, 56“இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார். 57ஆனால், அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். 58நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். 59அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக் கொண்டார். 60பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 31: 3cd-4, 6 and 7b and 8a, 17 and 21ab

3⁽ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;␢ உமது பெயரின் பொருட்டு␢ எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.⁾ 4⁽அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள␢ வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்;␢ ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.⁾ 6⁽நானோ, பயனற்ற சிலைகளில்␢ பற்றுடையோரை வெறுத்து,␢ ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.⁾ 7⁽உமது பேரன்பில் நான் களிகூர்வேன்;␢ அக்களிப்பேன்;␢ என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்;␢ என் இக்கட்டுகளையும்␢ நீர் அறிந்துள்ளீர்.⁾ 8⁽என் எதிரியின் கையில்␢ என்னை நீர் விட்டுவிடவில்லை;␢ அகன்ற இடத்தில் என்னைக்␢ காலூன்றி நிற்கவைத்தீர்.⁾ 17⁽ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;␢ என்னை வெட்கமுற விடாதேயும்;␢ பொல்லார் வெட்கிப்போவார்களாக!␢ பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக!⁾ 21⁽ஆண்டவர் போற்றி! போற்றி!␢ ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில்,␢ அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில்␢ எனக்கு விளங்கச் செய்தார்.⁾
Alleluia

யோவான் 6: 35ab

35இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
Gospel

யோவான் 6: 30-35

30அவர்கள், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? 31எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ⁽‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’⁾ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர். 32இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. 33கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார். 34அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள். 35இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.