ஏப்ரல் 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

4 ஏப்ரல், 2027

Second Sunday of Easter

அன்றைய திருப்பலி
First Reading

திருத்தூதர் பணிகள் 4: 32-35

32நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. 33திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். 34தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து 35திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 118: 2-4, 13-15, 22-24

2⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!⁾ 3⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!⁾ 4⁽‛என்றென்றும் உள்ளது␢ அவரது பேரன்பு’ என␢ ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ அனைவரும் சாற்றுவார்களாக!⁾ 13⁽அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி␢ வீழ்த்த முயன்றனர்; ஆனால்,␢ ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.⁾ 14⁽ஆண்டவரே என் ஆற்றல்;␢ என் பாடல்; என் மீட்பும் அவரே.⁾ 15⁽நீதிமான்களின் கூடாரங்களில்␢ வெற்றியின் மகிழ்ச்சிக்குரல்␢ ஒலிக்கின்றது;␢ ஆண்டவரது வலக்கை␢ வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.⁾ 22⁽கட்டுவோர் புறக்கணித்த கல்லே␢ கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!⁾ 23⁽ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!␢ நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!⁾ 24⁽ஆண்டவர் தோற்றுவித்த␢ வெற்றியின் நாள் இதுவே;␢ இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.⁾
Second Reading

1 யோவான் 5: 1-6

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

யோவான் 20: 29

29இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார்.
Gospel

யோவான் 20: 19-31

19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். 20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள். 21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார். 24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25மற்றச் சீடர்கள் அவரிடம், “ஆண்டவரைக் கண்டோம்” என்றார்கள். தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” என்றார். 26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். 27பின்னர், அவர் தோமாவிடம், “இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்” என்றார். 28தோமா அவரைப் பார்த்து, “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்றார். 29இயேசு அவரிடம், “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். 30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.