ஏப்ரல் 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

18 ஏப்ரல், 2027

Fourth Sunday of Easter

அன்றைய திருப்பலி
First Reading

திருத்தூதர் பணிகள் 4: 8-12

8அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: “மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, 9உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். 10நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். 11இந்த இயேசுவே,⁽ ‘கட்டுகிறவர்களாகிய உங்களால்␢ இகழ்ந்து தள்ளப்பட்ட கல்.␢ ஆனாலும், முதன்மையான␢ மூலைக்கல்லாக விளங்குகிறார்.’⁾⒫ 12இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.⒫
Responsorial Psalm

திருப்பாடல்கள் 118: 1, 8-9, 21-23, 26, 28, 29

1⁽ஆண்டவருக்கு நன்றி␢ செலுத்துங்கள்.␢ ஏனெனில் அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾ 8⁽மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,␢ ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!⁾ 9⁽உயர்குடியினர் மீது␢ நம்பிக்கை வைப்பதைவிட,␢ ஆண்டவரிடம்␢ அடைக்கலம் புகுவதே நலம்!⁾ 21⁽என் மன்றாட்டை நீர் கேட்டதால்,␢ எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,␢ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.⁾ 22⁽கட்டுவோர் புறக்கணித்த கல்லே␢ கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!⁾ 23⁽ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!␢ நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!⁾ 26⁽ஆண்டவரின் பெயரால் வருபவர்␢ ஆசி பெற்றவர்!␢ ஆண்டவரது இல்லத்தினின்று␢ உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.⁾ 28⁽என் இறைவன் நீரே!␢ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்;␢ என் கடவுளே!␢ உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.⁾ 29⁽ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;␢ ஏனெனில், அவர் நல்லவர்;␢ என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾
Second Reading

1 யோவான் 3: 1-2

வசன உள்ளடக்கம் கிடைக்கவில்லை.

Alleluia

யோவான் 10: 14

14❮14-15❯நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்.
Gospel

யோவான் 10: 11-18

11நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.⒫ 12“கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில், அவர் ஆயரும் அல்ல; ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல; ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். 13கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. 14❮14-15❯நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். 15Same as above 16இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். 17தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில், நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். 18என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.”⒫