ஏப்ரல் 2027

ஞா தி செ பு வி வெ
123
45678910
11121314151617
18192021222324
252627282930
இன்றுக்கு

வாசகங்கள்

24 ஏப்ரல், 2027

Easter Weekday/ Fidelis of Sigmaringen, Priest, Martyr

Fidelis of Sigmaringen, Priest, Martyr
First Reading

திருத்தூதர் பணிகள் 13: 44-52

44அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர். 45மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். 46பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே, நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். 47ஏனென்றால், ⁽‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்”⁾ என்று எடுத்துக் கூறினார்கள். 48இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். 49அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. 50ஆனால், யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். 51அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். 52சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
Responsorial Psalm

திருப்பாடல்கள் 98: 1, 2-3ab, 3cd-4

1⁽ஆண்டவருக்குப் புதியதொரு␢ பாடல் பாடுங்கள்;␢ ஏனெனில், அவர் வியத்தகு␢ செயல்கள் புரிந்துள்ளார்.␢ அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்␢ அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.⁾ 2⁽ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்;␢ பிற இனத்தார் கண்முன்னே␢ தம் நீதியை வெளிப்படுத்தினார்.⁾ 3⁽இஸ்ரயேல் வீட்டாருக்கு␢ வாக்களிக்கப்பட்ட␢ தமது பேரன்பையும் உறுதிமொழியையும்␢ அவர் நினைவுகூர்ந்தார்.␢ உலகெங்குமுள அனைவரும்␢ நம் கடவுள் அருளிய␢ விடுதலையைக் கண்டனர்.⁾ 4⁽உலகெங்கும் வாழ்வோரே!␢ அனைவரும் ஆண்டவரை␢ ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!␢ மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப்␢ புகழ்ந்தேத்துங்கள்.⁾
Alleluia

யோவான் 8: 31b-32

31இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, “என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; 32உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்” என்றார்.⒫
Gospel

யோவான் 14: 7-14

7“நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்” என்றார். 8அப்போது பிலிப்பு, அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றார். 9இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. 11நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். 12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில், நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 13நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். 14நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.