இனிமைமிகு பாடல் 1

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8
1சாலமோனின் தலைசிறந்த பாடல் 2⁽தம் வாயின் முத்தங்களால்␢ அவர் என்னை முத்தமிடுக!␢ ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!⁾ 3⁽உமது பரிமளத்தின் நறுமணம்␢ இனிமையானது;␢ உமது பெயரோ பரிமள மணத்தினும்␢ மிகுதியாய்ப் பரவியுள்ளது;␢ எனவே, இளம் பெண்கள் உம்மேல்␢ அன்பு கொள்கின்றனர்.⁾ 4⁽உம்மோடு என்னைக்␢ கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்;␢ அரசர் என்னைத் தம் அறைக்குள்␢ அழைத்துச் செல்லட்டும்!␢ களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்;␢ திராட்சை இரசத்தினும் மேலாய்␢ உம் காதலைக் கருதிடுவோம்;␢ திராட்சை இரசத்தினும்␢ உமது அன்பைப் போற்றிடுவோம்!⁾ 5⁽எருசலேம் மங்கையரே,␢ கறுப்பாய் இருப்பினும்,␢ நான் எழில்மிக்கவளே!␢ கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்;␢ சாலமோனின் எழில்திரைகளுக்கு␢ இணையாவேன்.⁾ 6⁽கறுப்பாய் இருக்கின்றேன் நான் என␢ என்னையே உற்றுப் பார்க்க வேண்டா!␢ கதிரவன் காய்ந்தான்;␢ நான் கறுப்பானேன்;␢ என் தமையர் என்மேல்␢ சினம் கொண்டனர்;␢ திராட்சைத் தோட்டத்திற்கு␢ என்னைக் காவல் வைத்தனர்;␢ என் தோட்டத்தையோ␢ நான் காத்தேன் அல்லேன்!⁾ 7⁽என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே!␢ எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்?␢ எங்கே நண்பகலில்␢ மந்தையை இளைப்பாற விடுவீர்?␢ எனக்குச் சொல்வீர்!␢ இல்லையேல்,␢ உம் தோழர்களின் மந்தைகட்கருகில்␢ வழி தவறியவள் போல்␢ நான் திரிய நேரிடும்!⁾ 8⁽பெண்களுக்குள் பேரழகியே,␢ உனக்குத் தெரியாதெனில்,␢ மந்தையின் கால்சுவடுகளில்␢ நீ தொடர்ந்து போ;␢ இடையர்களின் கூடாரங்களுக்கு␢ அருகினிலே உன்னுடைய␢ ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!⁾ 9⁽என் அன்பே, பார்வோன்␢ தேர்ப்படை நடுவே உலவும்␢ பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.⁾ 10⁽உன் கன்னங்கள் குழையணிகளாலும்␢ உன் கழுத்து மணிச்சரங்களாலும்␢ எழில் பெறுகின்றன.⁾ 11⁽பொன்வளையல்கள்␢ உனக்குச் செய்திடுவோம்;␢ வெள்ளி வளையங்கள்␢ அவற்றில் கோத்திடுவோம்.⁾ 12⁽என் அரசர் தம் மஞ்சத்தில்␢ இருக்கையிலே, என் நரந்தம்␢ நறுமணம் பரப்புகின்றது.⁾ 13⁽என் காதலர்␢ வெள்ளைப்போள முடிப்பென␢ என் மார்பகத்தில் தங்கிடுவார்.⁾ 14⁽என் காதலர் எனக்கு␢ மருதோன்றி மலர்க்கொத்து!␢ எங்கேதித் தோட்டங்களில் உள்ள␢ மருதோன்றி!⁾ 15⁽என்னே உன் அழகு! என் அன்பே,␢ என்னே உன் அழகு!␢ உன் கண்கள் வெண்புறாக்கள்!⁾ 16⁽என்னே உம் அழகு என் காதலரே!␢ எத்துணைக் கவர்ச்சி!␢ ஆம், நமது படுக்கை பைந்தளிர்!⁾ 17⁽நம் வீட்டின் விட்டங்கள்␢ கேதுரு மரங்கள்;␢ நம்முடைய மச்சுகள்␢ தேவதாரு கிளைகள்.⁾