1⁽என்னே உன் அழகு! “என் அன்பே,␢ என்னே உன் அழகு!␢ முகத்திரைக்குப் பின்னுள்ள␢ உன் கண்கள் வெண்புறாக்கள்!␢ கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும்␢ வெள்ளாட்டு மந்தை போன்றது␢ உன் கூந்தல்.⁾
2⁽உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக்␢ குளித்துக் கரையேறும்␢ பெண் ஆடுகளின் மந்தை போல்வன;␢ அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை;␢ அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.⁾
3⁽செம்பட்டு இழைபோன்றன␢ உன்னிதழ்கள்;␢ உன் வாய் எழில் மிக்கது;␢ முகத்திரையின் பின்னிருக்கும்␢ உன் கன்னங்கள்␢ பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.⁾
4⁽தாவீதின் கொத்தளம்போல்␢ அமைந்துள்ளது உன் கழுத்து;␢ வரிவரியாய் ஆயிரம் கேடயங்கள்␢ ஆங்கே தொங்குகின்றன;␢ அவையெலாம்␢ வீரர்தம் படைக்கலன்களே.⁾
5⁽உன் முலைகள் இரண்டும்␢ லீலிகள் நடுவில் மேயும்␢ இருமான் குட்டிகளை ஒக்கும்;␢ கலைமானின் இரட்டைக்␢ குட்டிகளைக் ஒக்கும்.⁾
6⁽பொழுது புலர்வதற்குள்,␢ நிழல்கள் மறைவதற்குள்,␢ வெள்ளைப்போள மலையினுக்கு␢ விரைந்திடுவேன்;␢ சாம்பிராணிக் குன்றுக்குச்␢ சென்றிடுவேன்;⁾
7⁽என் அன்பே,␢ நீ முழுவதும் அழகே!␢ மறுவோ உன்னில் சிறிதும் இலதே!⁾
8⁽லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே;␢ லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு;␢ அமானா மலையுச்சியினின்று —␢ செனீர் மற்றும் எர்மோன்␢ மலையுச்சியினின்று —␢ சிங்கங்களின் குகைளினின்று —␢ புலிகளின் குன்றுகளினின்று␢ இறங்கிவா!⁾
9⁽என் உள்ளத்தைக்␢ கொள்ளை கொண்டாய்;␢ என் தங்காய், மணமகளே,␢ உன் விழிவீச்சு ஒன்றினாலே,␢ உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே,␢ என் உள்ளத்தைக்␢ கொள்ளை கொண்டாய்.⁾
10⁽உன் காதல் எத்துணை நேர்த்தியானது;␢ என் தங்காய், மணமகளே,␢ உன் காதல்␢ திராட்சை இரசத்தினும் இனிது!␢ உனது பரிமளத்தின் நறுமணமோ␢ எவ்வகைத் தைலத்தின்␢ நறுமணத்தினும் சிறந்தது.⁾
11⁽மணமகளே, உன் இதழ்கள்␢ அமிழ்தம் பொழிகின்றன;␢ உன் நாவின்கீழ்த்␢ தேனும் பாலும் சுரக்கின்றன;␢ உன் ஆடைகளின் நறுமணம்␢ லெபனோனின் நறுமணத்திற்கு␢ இணையானது.⁾
12⁽பூட்டியுள்ள தோட்டம் நீ;␢ என் தங்காய், மணமகளே␢ பூட்டியுள்ள தோட்டம் நீ;␢ முத்திரையிட்ட கிணறு நீ!⁾
13⁽மாதுளைச் சோலையாய்த்␢ தளிர்த்துள்ளாய்;␢ ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு;␢ மருதோன்றியும் நரந்தமும் உண்டு.⁾
14⁽நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம்␢ எல்லாவகை நறுமண மரங்களும்,␢ வெள்ளைப்போளமும் அகிலும்,␢ லைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.⁾
15⁽நீ தோட்டங்களின் நீரூற்று;␢ வற்றாது நீர்சுரக்கும் கிணறு;␢ லெபலோனினின்று வரும் நீரோடை!⁾
16⁽வாடையே, எழு! தென்றலே, வா!␢ என் தோட்டத்தின் மேல் வீசு!␢ அதன் நறுமணம் பரவட்டும்!␢ உன் காதலர்␢ தம் தோட்டத்திற்கு வரட்டும்!␢ அதன் தித்திக்கும் கனிகளை␢ உண்ணட்டும்!⁾