1⁽அரசிள மகளே!␢ காலணி அணிந்த உன் மெல்லடிகள்␢ எத்துணை அழகு!␢ உன் தொடைகளின் வளைவுகள்␢ அணிகலனுக்கு இணை!␢ கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!⁾
2⁽உன் கொப்பூழ்␢ வட்டவடிவக் கலம்;␢ அதில் மதுக் கலவைக்குக்␢ குறைவே இல்லை;␢ உன் வயிறு␢ கோதுமை மணியின் குவியல்;␢ லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.⁾
3⁽உன் முலைகள் இரண்டும்␢ இரு மான் குட்டிகள் போன்றவை;␢ கலைமானின்␢ இரட்டைக் குட்டிகள் போன்றவை.⁾
4⁽உன் கழுத்து தந்தத்தாலான␢ கொத்தளம் போன்றது;␢ உன் கண்கள்␢ எஸ்போனின் குளங்கள் போன்றவை;␢ பத்ரபீம் வாயிலருகே உள்ள␢ குளங்கள் போன்றவை;␢ உம் மூக்கு␢ லெபனோனின் கோபுரத்திற்கு இணை;␢ தமஸ்கு நகர் நோக்கியுள்ள␢ கோபுரத்திற்கு இணை.⁾
5⁽உன் தலை கர்மேல் மலைபோல்␢ நிமிர்ந்துள்ளது;␢ உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது;␢ அதன் சுருள்களுள்␢ அரசனும் சிறைப்படுவான்.⁾
6⁽அன்பே! இன்பத்தின் மகளே!␢ நீ எத்துணை அழகு!␢ எத்துணைக் கவர்ச்சி!⁾
7⁽இந்த உன் வளர்த்தி␢ பேரீச்சைக்கு நிகராகும்;␢ உன் முலைகள் இரண்டும்␢ அதன் குலைகளாகும்.⁾
8⁽ஆம், பேரீச்சையின்மேல்␢ நான் ஏறுவேன்;␢ அதன் பழக்குலைகளைப்␢ பற்றிடுவேன்” என்றேன்;␢ உன் முலைகள்␢ திராட்சைக் குலைகள்போல் ஆகுக!␢ உன் மூச்சு␢ கிச்சிலிபோல் மணம் கமழ்க!⁾
9⁽இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே␢ மென்மையுடன் இறங்கும்␢ இனிமைமிகு␢ திராட்சை இரசம் போன்றவை␢ உன் முத்தங்கள்!⁾
10⁽நான் என் காதலர்க்குரியள்;␢ அவர் நாட்டம் என்மேலே!⁾
11⁽என் காதலரே, வாரும்;␢ வயல்வெளிக்குப் போவோம்;␢ மருதோன்றிகள் நடுவில்␢ இரவைக் கழிப்போம்.⁾
12⁽வைகறையில் திராட்சைத்␢ தோட்டத்திற்குப் போவோம்;␢ திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா,␢ அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா,␢ மாதுளை மரங்கள் மலர்ந்தனவா␢ என்று பார்ப்போம்.␢ அங்கே உம்மேல்␢ என் காதலைப் பொழிவேன்.⁾
13⁽காதற்கனிகளின் மணம் கமழுகின்றது;␢ இனியது அனைத்தும்␢ நம் கதவருகில் உளது;␢ புதிதாய்ப் பறித்தனவும்␢ பலநாள் காத்தனவுமான பழங்களை␢ என் காதலரே,␢ உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.⁾