1⁽இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்;␢ என் உயிர்க்குயிரான அன்பரைத்␢ தேடினேன்; தேடியும்␢ அவரை நான் கண்டேன் அல்லேன்!⁾
2⁽“எழுந்திடுவேன்; நகரத்தில்␢ சுற்றிவருவேன்;␢ தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி␢ என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்”␢ தேடினேன்; தேடியும் அவரைக்␢ கண்டேன் அல்லேன்!⁾
3⁽ஆனால் என்னைக் கண்டனர்␢ சாமக்காவலர்;␢ நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.␢ “என் உயிர்க்குயிரான அன்பரை␢ நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.⁾
4⁽அவர்களைவிட்டுச்␢ சற்று அப்பால் சென்றதுமே␢ கண்டேன் என் உயிர்க்குயிரான␢ அன்பர்தமை.␢ அவரைச் சிக்கெனப் பிடித்தேன்;␢ விடவே இல்லை;␢ என் தாய்வீட்டுக்கு␢ அவரைக் கூட்டி வந்தேன்;␢ என்னைக் கருத்தாங்கியவளின்␢ அறைக்குள் அழைத்து வந்தேன்.⁾
5⁽எருசலேம் மங்கையரே,␢ கலைமான்கள் மேல் ஆணை!␢ வயல்வெளி மரைகள்மேல் ஆணை!␢ உங்களுக்கு நான் கூறுகிறேன்;␢ காதலைத் தட்டி எழுப்பாதீர்;␢ தானே விரும்பும்வரை␢ அதைத் தட்டி எழுப்பாதீர்.⁾
6⁽என்ன அது?␢ பாலைவெளியிலிருந்து␢ புகைத்தூண்போல்,␢ எழுந்துவருகிறதே!␢ வெள்ளைப்போளம் மணக்க,␢ சாம்பிராணி புகைய,␢ வணிகர் கொணர்␢ பல்வகைப் பொடிகள் யாவும்␢ மணங்கமழ வருகிறதே!␢ என்ன அது?⁾
7⁽அதுதான் சாலமோனின் பஞ்சணை!␢ இஸ்ரயேலின் வளமையுள்ள␢ வீரர்களுள் அறுபதுபேர்␢ அதனைச் சூழ்ந்துள்ளனர்.⁾
8⁽அனைவரும் வாளேந்திய வீரர்!␢ அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்!␢ இராக்காலத் தாக்குதல்களைத்␢ தடுக்கத் தம் இடைகளில்␢ வாள் கொண்டுள்ளவர்கள்!⁾
9⁽மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்;␢ சாலமோன் லெபனோனின்␢ மரத்தால் செய்தார்.⁾
10⁽அதன் தூண்களை␢ வெள்ளியால் இழைத்தார்;␢ மேற்கவிகை பொன்;␢ இருக்கை செம்பட்டு;␢ உட்புறம் மெல்லிய தோல்மெத்தை;␢ எருசலேம் மங்கையரே, வாருங்கள்!⁾
11⁽சீயோன் மங்கையரே, பாருங்கள்!␢ மன்னர் சாலமோனையும்␢ அவர் அன்னை அவருக்கு அணிவித்த␢ மணிமுடியையும் காணுங்கள்!␢ அவரது திருமண நாளினிலே,␢ அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே,␢ அவருக்கு அணிவித்த முடியதுவே!⁾