1⁽என் தோட்டத்திற்கு நான்␢ வந்துள்ளேன்;␢ என் தங்காய், மணமகளே,␢ என் வெள்ளைப்போளத்தையும்␢ நறுமணப் பொருளையும்␢ சேகரிக்கின்றேன்;␢ என் தேனையும் தேனடைகளையும்␢ உண்கின்றேன்;␢ என் திராட்சை இரசத்தையும்␢ பாலையும் பருகுகின்றேன்;␢ தோழர்களே, உண்ணுங்கள்;␢ அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.⁾
2⁽நான் உறங்கினேன்;␢ என் நெஞ்சமோ விழித்திருந்தது;␢ இதோ, என் காதலர்␢ கதவைத் தட்டுகின்றார்;␢ “கதவைத் திற, என் தங்காய்,␢ என் அன்பே, என் வெண்புறாவே,␢ நிறை அழகே,␢ என் தலை பனியால் நனைந்துள்ளது;␢ என் தலைமயிர்ச் சுருள்␢ இரவுத் தூறலால் ஈரமானது.⁾
3⁽“என் ஆடையைக் களைந்து விட்டேன்;␢ மீண்டும் அதனை நான்␢ உடுத்த வேண்டுமோ?␢ என் கால்களைக் கழுவியுள்ளேன்;␢ மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”⁾
4⁽என் காதலர் கதவுத் துளை வழியாகக்␢ கையைவிட்டார்;␢ என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.⁾
5⁽எழுந்தேன் நான்,␢ காதலர்க்குக் கதவு திறக்க;␢ என் கையில்␢ வெள்ளைப்போளம் வடிந்தது;␢ என் விரல்களில்␢ வெள்ளைப்போளம் சிந்திற்று;␢ தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.⁾
6⁽கதவைத் திறந்தேன் நான்␢ என் காதலர்க்கு;␢ அந்தோ! என் காதலர் காணவில்லை,␢ போய்விட்டார்; என் நெஞ்சம்␢ அவர் குரலைத் தொடர்ந்து போனது;␢ அவரைத் தேடினேன்;␢ அவரைக் கண்டேன் அல்லேன்;␢ அவரை அழைத்தேன்; பதிலே இல்லை!⁾
7⁽ஆனால் என்னைக் கண்டனர்␢ சாமக் காவலர்;␢ அவர்கள் என்னை அடித்தனர்;␢ காயப்படுதினர்;␢ என் மேலாடையைப்␢ பறித்துக் கொண்டனர்;␢ கோட்டைச் சுவரின்␢ காவலர்கள் அவர்கள்!⁾
8⁽எருசலேம் மங்கையரே,␢ ஆணையிட்டுச் சொல்கிறேன்;␢ என் காதலரைக் காண்பீர்களாயின்␢ அவரிடம் என்ன சொல்வீர்கள்?␢ “காதல் நோயுற்றேன் நான்”␢ எனச் சொல்லுங்கள்.⁾
9⁽“பெண்களுக்குள் பேரழகியே,␢ மற்றக் காதலரினும் உன் காதலர்␢ எவ்வகையில் சிறந்தவர்?␢ இவ்வாறு எங்களிடம்␢ ஆணையிட்டுக் கூறுகின்றாயே;␢ மற்றக் காதலரினும் உன்காதலர்␢ எவ்வகையில் சிறந்தவர்?”⁾
10⁽“என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்;␢ பல்லாயிரம் பேர்களிலும்␢ தனித்துத் தோன்றுவார்!⁾
11⁽அவரது தலை பசும்பொன்;␢ தலை முடி சுருள் சுருளாய் உள்ளது;␢ காகம்போல் கருமை மிக்கது.⁾
12⁽அவர் கண்கள்␢ வெண்புறாக்கள் போன்றவை;␢ பாலில் குளித்து,␢ நீரோடைகளின் அருகில்␢ கரையோரங்களில் தங்கும்␢ வெண்புறாக்கள் அவை.⁾
13⁽அவர் கன்னங்கள் நறுமண␢ நாற்றங்கால்கள் போல்வன;␢ நறுமணம் ஆங்கே கமழ்கின்றது;␢ அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்;␢ அவற்றினின்று வெள்ளைப்போளம்␢ சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.⁾
14⁽அவருடைய கைகள்␢ உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில்␢ மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன;␢ அவரது வயிறு␢ யானைத் தந்தத்தின் வேலைப்பாடு;␢ அதில் நீலமணிகள்␢ பொதியப் பெற்றுள்ளன.⁾
15⁽அவருடைய கால்கள்␢ பளிங்குத் தூண்கள்;␢ தங்கத் தளத்திலே␢ அவை பொருந்தியுள்ளன;␢ அவரது தோற்றம்␢ லெபனோனுக்கு இணையானது;␢ கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.⁾
16⁽அவரது வாய் இணையற்ற இனிமை;␢ அவர் முழுமையும் பேருவகையே;␢ எருசலேம் மங்கைய␢ இவரே என் நண்பர்.”⁾