இனிமைமிகு பாடல் 6

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8
1⁽“பெண்களுக்குள் பேரழகியே,␢ உன் காதலர் எங்கே போனார்?␢ உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்?␢ உன்னோடு நாங்களும்␢ அவரைத் தேடுவோம்.”⁾ 2⁽“என் காதலர் தம் தோட்டத்திற்கும்␢ நறுமண நாற்றங்கால்களுக்கும்␢ போனார்;␢ தோட்டங்களில் மேய்க்கவும்␢ லீலி மலர்களைக் கொய்யவும்␢ சென்றுள்ளார்”.⁾ 3⁽நான் என் காதலர்க்குரியள்;␢ என் காதலர் எனக்குரியர்;␢ லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.⁾ 4⁽என் அன்பே.நீ திரட்சாவைப்போல்␢ அழகுள்ளவள்;␢ எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்;␢ போரணிபோல் வியப்பார்வம்␢ ஊட்டுகின்றாய்!⁾ 5⁽என்னிடமிருந்து உன் கண்களைத்␢ திருப்பிக்கொள்;␢ அவை என்னை மயக்குகின்றன;␢ கிலயாதிலிருந்து இறங்கிவரும்␢ வெள்ளாட்டு மந்தை போன்றது␢ உன் கூந்தல்.⁾ 6⁽உன் பற்களோ, குளித்துக்கரையேறும்␢ பெண் ஆடுகளின் மந்தைபோல்வன;␢ அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை;␢ அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.⁾ 7⁽முகத்திரையின் பின்னிருக்கும்␢ உன் கன்னங்கள்␢ பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.⁾ 8⁽அரசியர் அறுபது பேர்;␢ வைப்பாட்டியர் எண்பது பேர்;␢ இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.⁾ 9⁽என் வெண்புறா,␢ அழகின் வடிவம் அவள் ஒருத்தியே!␢ அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;␢ அவளைப் பெற்றவளுக்கு␢ அவள் அருமையானவள்;␢ மங்கையர் அவளைக் கண்டனர்;␢ வாழ்த்தினர்;␢ அரசியரும் வைப்பாட்டியரும்␢ அவளைப் புகழ்ந்தனர்;⁾ 10⁽“யாரிவள்!␢ வைகறைபோல் தோற்றம்;␢ திங்களைப் போல் அழகு;␢ ஞாயிறுபோல் ஒளி;␢ போரணிபோல் வியப்பார்வம்;␢ யாரிவள்!”⁾ 11⁽வாதுமைச் சோலைக்குள் சென்றேன்;␢ பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப்␢ பார்க்கப் போனேன்;␢ திராட்சை பூத்துவிட்டதா என்றும்␢ மாதுளைகள் மலர்ந்தனவா என்றும்␢ காணச் சென்றேன்.⁾ 12⁽என்னவென்றே␢ எனக்குத் தெரியவில்லை!␢ மகிழ்ச்சியில் மயங்கினேன்;␢ இளவரசனுடன் தேரில் செல்வது போல்␢ நான் உணர்ந்தேன்.⁾ 13⁽திரும்பி வா! திரும்பி வா!␢ சூலாமியளே!␢ திரும்பி வா! திரும்பி வா!␢ நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்!␢ இரண்டு பாசறைகள் நடுவில்␢ ஆடுபவளைப்போல் சூலாமியளை␢ நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?⁾