இனிமைமிகு பாடல் 2

முந்திய அடுத்த
1 2 3 4 5 6 7 8
1⁽சாரோன் சமவெளியில் உள்ள காட்டு␢ மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும்␢ லீலிமலர்.⁾ 2⁽முட்புதர் நடுவில் இருக்கும்␢ லீலிமலர்போல், மங்கையருள்␢ இருக்கிறாள் என் அன்புடையாள்.⁾ 3⁽காட்டு மரங்களிடை நிற்கும்␢ கிச்சிலி போல்,␢ காளையருள் இலங்குகின்றார்␢ என் காதலர்தாம்.␢ அவரது நிழலிலே அமர்வதில்␢ இன்புறுவேன்;␢ அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.⁾ 4⁽திராட்சை இரசம் வைக்கும்␢ அறைக்குள்ளே␢ என்னை அவர் அழைத்துச் சென்றார்;␢ அவர் என் மேல் செலுத்திய␢ நோக்கில் காதல் இருந்தது!⁾ 5⁽திராட்சை அடைகள் கொடுத்து␢ என்னை வலிமைப்படுத்துங்கள்;␢ கிச்சிலிப்பழங்களால்␢ எனக்கு ஊக்கமூட்டுங்கள்.␢ காதல் நோயால்␢ தான் மிகவும் நலிந்து போனேன்.⁾ 6⁽இடக்கையால் அவர் என் தலையைத்␢ தாங்கிக் கொள்வார்;␢ வலக்கையால் அவர் என்னைத்␢ தழுவிக் கொள்வார்.⁾ 7⁽எருசலேம் மங்கையரே!␢ கலைமான்கள்மேல் ஆணை!␢ வயல்வெளி மரைகள்மேல் ஆணை!␢ உங்களுக்கு நான் கூறுகிறேன்;␢ காதலைத் தட்டி எழுப்பாதீர்;␢ தானே விரும்பும்வரை␢ அதைத் தட்டி எழுப்பாதீர்.⁾ 8⁽என் காதலர் குரல் கேட்கின்றது;␢ இதோ, அவர் வந்துவிட்டார்;␢ மலைகள்மேல் தாவி வருகின்றார்;␢ குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.⁾ 9⁽என் காதலர் கலைமானுக்கு அல்லது␢ மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.␢ இதோ, எம் மதிற்சுவர்க்குப்␢ பின்னால் நிற்கின்றார்;␢ பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்;␢ பின்னல் தட்டி வழியாய்␢ நோக்குகின்றார்.⁾ 10⁽என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:␢ “விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.⁾ 11⁽இதோ, கார்காலம் கடந்துவிட்டது;␢ மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.⁾ 12⁽நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;␢ பாடி மகிழும் பருவம் வந்துற்றது;␢ காட்டுப் புறா கூவும் குரலதுவோ␢ நாட்டினில் நமக்குக் கேட்கின்றது;⁾ 13⁽அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன;␢ திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;␢ விரைந்தெழு, என் அன்பே!␢ என் அழகே! விரைந்து வா.”⁾ 14⁽பாறைப் பிளவுகளில் இருப்பவளே,␢ குன்றின் வெடிப்புகளில் இருக்கும்␢ என் வெண்புறாவே!␢ காட்டிடு எனக்கு உன் முகத்தை;␢ எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.␢ உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!⁾ 15⁽பிடியுங்கள் எமக்காக நரிகளை;␢ குள்ளநரிகளைப் பிடியுங்கள்;␢ அவை திராட்சைத் தோட்டங்களை␢ அழிக்கின்றன;␢ எம் திராட்சைத் தோட்டங்களோ␢ பூத்துள்ளன.⁾ 16⁽என் காதலர் எனக்குரியர்;␢ நானும் அவருக்குரியள்;␢ லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.⁾ 17⁽பொழுது புலர்வதற்குள்,␢ நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக,␢ என் காதலரே! மலைமுகட்டுக்␢ கலைமான்போன்று அல்லது␢ மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!⁾